வேற்றுகிரகவாசிகளின் மொழியை கற்றுக்கொள்வதால் என்ன நடக்கும்? time 100/ai

 



ted chiang,writer


charlie brooker,writer



டெட் சியாங்,  வாழும் எழுத்தாளர்களில் புகழ்பெற்றவர். அறிவியல் புனைகதைகளை எழுதி வருகிறார். 56 வயதாகும் இவர், செயற்கை நுண்ணறிவு பற்றி ஆய்வு செய்யும் நிறுவனங்களைப் பற்றிய விமர்சனங்களையும் நியூயார்க்கர் இதழில் பத்தி எழுத்து மூலம் பதிவு செய்துவருகிறார்.

அறிவியல் புனைகதைகளில் நிறைய சாத்தியங்கள் உள்ளன. அவற்றை தனது கதைகளில் சோதித்துப் பார்த்து வருகிறார். ஹார்மோன் இஞ்செக்‌ஷன் உங்கள் புலன்களின் திறனை அதிகரித்தால் எப்படியிருக்கும்? டெட் சியாங்,  வாழும் எழுத்தாளர்களில் புகழ்பெற்றவர். அறிவியல் புனைகதைகளை எழுதி வருகிறார். 56 வயதாகும் இவர், செயற்கை நுண்ணறிவு பற்றி ஆய்வு செய்யும் நிறுவனங்களைப் பற்றிய விமர்சனங்களையும் நியூயார்க்கர் இதழில் பத்தி எழுத்து மூலம் பதிவு செய்துவருகிறார்.

அறிவியல் புனைகதைகளில் நிறைய சாத்தியங்கள் உள்ளன. அவற்றை தனது கதைகளில் சோதித்துப் பார்த்து வருகிறார். ஹார்மோன் இஞ்செக்‌ஷன் உங்கள் புலன்களின் திறனை அதிகரித்தால் எப்படியிருக்கும்? வேற்றுகிரகவாசிகளின் மொழியை கற்றுக்கொள்வதால் என்ன நடக்கும்?, செயற்கை நுண்ணறிவை மனித குலம் புரிந்துகொண்டு வாழ்ந்தால் அந்த மெய்நிகர்வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதையெல்லாம் டெட் சியாங் தனது கதைகளில் கையாண்டிருக்கிறார். ரசிகர்களும் எதிர்காலம் பற்றிய புனைகதைகளை போட்டி போட்டு வாங்கி படித்து வருகிறார்கள்.

செயற்கை நுண்ணறிவில் உச்சம் பெறும்போது உண்மைக்கும் புனைவுக்கும் எந்த வேறுபாடும் இல்லாத நிலை வர வாய்ப்புள்ளது என கூறுகிறார் டெட்சியாங். செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவது முக்கியமெனில், அதனால்  உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கை மேம்படுவது முக்கியம். அல்லாதபோது, கிடைக்கும் லாபம் நிறுவனங்களின் பங்குதாரர்களுக்குச் செல்லும் என வெளிப்படையாக பேசுகிறார். 

செயற்கை நுண்ணறிவு ஒருவருக்கு தான் நம்பும் ஒன்றை தவறு என்று புரிந்துகொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துகிறது என்று கூறி அதை கான்ஃபாபுலேஷன் என்று குறிப்பிடுகிறார்.

பில்லி பெர்ரிகோ

 

பெலோனோமி மொய்லோவா

இயக்குநர், துணை நிறுவனர்  - லெலாபா ஏஐ

விபத்தாக நடிகையானவர்கள் போல, விபத்தாக ஏஐ ஆராய்ச்சிக்குள் வந்து  அதை சீரும் சிறப்புமாக செய்பவர்தான் மொய்லோவா. 2010ஆம் ஆண்டு விட்வாட்டர்ஸ்ராண்ட் என்ற பல்கலைக்கழக மாணவி. பயோமெடிகல் பொறியியல், மின்னணு பொறியியல் என இரண்டு பட்டங்களை வென்றவர். 2017இல், ஏஐ ஆராய்ச்சியில் குதித்தார். தென் ஆப்பிரிக்க மொழிகளுக்கான சேவைகளை வழங்கும் ஏஐ மட்டுமே இவரது நோக்கம். தற்போது தென் ஆப்பிரிக்க பெயர்களை உச்சரிக்க பயிற்சி கொடுத்து வருகிறார்.

அன்னா கார்டன்


சார்லி ப்ரூக்கர்

எழுத்தாளர்

 

நெட்பிளிக்சில் வெற்றிகரமாக உலக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பிளாக் மிரர் தொடரின் எழுத்தாளர். பத்தாண்டுகளுக்கு மேலாக தொழில்நுட்ப மேம்பாடு நம் வாழ்கையை எந்தளவு ஆதிக்கம் செலுத்துகிறது. சில சமயங்களில் வன்முறையான சங்கடங்களைக் கொண்டு வருகிறது என கதைகளில் கூறி வருகிறார் சார்லி.

பிறரைக் கொல்ல முயலும் தேனீக்கள், வீட்டில் உள்ள ஏஐ உதவியாளர்கள் மனிதர்களை அடிமையாக்குவது, பார்வையாளர்களை அடிப்படையாக கொண்டு ரியாலிட்டி ஷோக்கள் உருவாக்கப்படுவது என சார்லி ப்ரூக்கர் எழுதிய கதைகள் பகடியானவையா, நிஜமாக என்றே யூகிக்க முடியாது. அந்தளவுக்கு கற்பனை பீதியூட்டும்படியாக உள்ளது.

ஏஐ வல்லுநர்களே சார்லியின் கற்பனைகளை பாராட்டும் அளவுக்கு அவரின் கதைகள் நேர்த்தியாக உள்ளன. அமெரிக்காவில் எழுத்தாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அரசு பொதுவான முறையில் ஏஐயை கட்டுப்படுத்தும் விதிகளை சட்டங்களை உருவாக்கினால் ஆபத்தான எதிர்காலம் என்பது உருவாகாது என்பதே இவரின் கருத்து.

ஆண்ட்ரூ ஆர் சோ

தூஷிதா குப்தா

துணை நிறுவனர், தொழில்நுட்ப தலைவர், ரீஃபைபர்ட்

சர்ட் முதல் சாக்ஸ் வரை ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்து அதை கிழியும் வரை பயன்படுத்துவதில்லை. இவையெல்லாமே குப்பையாக நிலத்தில் தேங்குகின்றன. இதை மறுசுழற்சிக்கு ஏற்றவகையில் ஏஐயைப் பயன்படுத்தி மாற்றுவதே  ரீபைபரின் வேலை. தூஷிதா குப்தாவும் சாரிகா பஜாஜூம் சேர்ந்து கம்பெனியை 2020இல் தொடங்கினர். 3.4 மில்லியன் டாலர்கள் முதலீடு பெற்றுள்ள வளர்ந்து வரும் நிறுவனம் இது.

அமெரிக்கா, ஐரோப்பாவில் சோதனை முறையில் சில திட்டங்களை செய்து வருகிறார்கள். இதில் ஜவுளிக்கான இழைகளை  மறுசுழற்சிக்கு ஏற்றவகையில் தேர்ந்தெடுத்து தயாரித்தால் சூழல் மாசுபாடு குறையும் என்பதே திட்ட இலக்கு.

 மறுசுழற்சி செய்யமுடியாத துணியை இனி இருக்காது. அதுதான் திட்டத்தின் இறுதி லட்சியம்.

ஜியோஃப்ரி ஹிண்டன்

டொரன்டோ பல்கலைக்கழக பேராசிரியர்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏஐ ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவர்கள் என்றால் ஹிண்டனை தாராளமாக குறிப்பிடலாம். மனித மூளையை அடிப்படையாக கொண்டு ஏஐயை உருவாக்க முயன்று வருகிறார். 2013ஆம் ஆண்டு, நியூரல் நெட்வொர்க்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை  செய்து டிஎன்என் என்ற தனி நிறுவனத்தை தனது ஆராய்ச்சி மாணவர்களோடு தொடங்கினார். இவர்களை வேலைக்கு அழைத்த டெக் நிறுவனங்களில் கூகுளை ஹிண்டன் தேர்ந்தெடுத்தார்.

ஏஐயை தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி விளக்கி வருபவர், கொள்கை சார்ந்த விஷயங்களில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. தன்னை ஆராய்ச்சியாளர் என்று மட்டுமே கூறிக்கொள்பவர், டொரன்டோவில் கணினி அறிவியல் பேராசிரியராக பணியாற்றினார். இவரும் இவரது ஆராய்ச்சி மாணவர்கள் இருவரும் முன்னணி ஏஐ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். புகைபடங்களை ஆய்வு செய்து கண்டுபிடிப்பது பற்றிய ஆய்வில் ஹிண்டனும் அவரது மாணவர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

வில் ஹென்சால்

 

கேட் கிராஃபோர்ட்

பேராசிரியர், யுஎஸ்சி அனெனபர்க்

 

ஏஐ காரணமாக சமூக, அரசியல், சூழல் தளத்தில் ஏற்படும் மாறுதல்களை, தாக்கங்களை கவனித்து அதுபற்றிய அறிக்கைளை தயாரித்து வெளியிட்டு வருகிறார். இதற்காகவே பல்வேறு நூல்களை எழுதியிருக்கிறார். ஏஐ நவ் என்ற இன்ஸ்டிடியூட்டை துணை நிறுவனராக தொடங்கி நடத்தி வருகிறார். கலைஞர் விலாடன் ஜோலர் என்பவரோடு சேர்ந்து அனாட்டமி ஆஃப் என் ஏஐ சிஸ்டம் என்று அமேஸான் ஈகோ ஸ்மார்ட்  ஸ்பீக்கரின் தொடக்கம் தொடங்கி முடிவு வரையிலும் படைப்பாக உருவாக்கியுள்ளனர். டெக் பொருட்கள் கானா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் குப்பையாக மாறுவது பற்றியும் தகவல்களை சேகரித்து வெளியிட்டுள்ளார்.

ஆண்ட்ரூ ஆர் சோ

 

time 100/ai weekly

 

  

கருத்துகள்