அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தோற்றுப்போவதன் காரணம்! - அமைப்பு முறை இல்லாத மக்கள போராட்டம்

 

 

 

 

 


 

 

 

 

போராட்டத்தின் வீழ்ச்சி


2010 தொடங்கி 2020ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளை போராட்டத்தின் காலம் என்று கூறலாம். அத்தனை போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கான விதை துனிசியாவில் விழுந்தது. அங்கு தொடங்கிய போராட்டம் அப்படியே அரபு நாடுகளுக்கும் பரவியது. இதற்கு சமூக வலைதளங்கள் முக்கியமான தளமாக அமைந்தன. குறிப்பாக ஃபேஸ்புக்கைக் கூறவேண்டும். துருக்கி, உக்ரைன், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் நடந்த மக்களின் போராட்டங்கள் ஆட்சியாளர்களை என்ன செய்வதென தெரியாமல் பதைபதைக்க வைத்தன. சூடான், ஈராக், அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், இந்தோனேஷியா, லத்தீன் அமெரிக்கநாடுகள், இந்தியா, லெபனான், ஹைதி ஆகிய நாடுகள் போராட்டச் சுழலில் மாட்டின.


மேற்சொன்ன பத்தாண்டுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராடினர். போராடியவர்களுக்கு பிற மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.


போராட்டங்களை உலகளவிலான ஊடகங்கள் பதிவு செய்து ஒளிபரப்பின. புகழ்பெற்ற நாளிதழ்களில் கட்டுரைகள் ஏராளமாக எழுதப்பட்டன. போராட்டங்கள் வெற்றிபெற்றன என்பது உண்மைதான். ஆனால், போராட்டக்காரர்கள் கோரிய விஷயங்கள் ஏதேனும் நிறைவேறியிருக்கிறதா என்று கேட்டால் பதில் ஏமாற்றத்தைத்தான் தரும். சுதந்திரம், ஜனநாயகம், வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுதான் பெரும்பாலான போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் பத்தாண்டுகளுக்கு பிறகு நிலைமை பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட மோசமாக மாறியிருக்கிறது என்பதே உண்மை.


உதாரணத்தைப் பார்ப்போம். 2013ஆம் ஆண்டு பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் மக்கள் போராட்டம் ஒன்று நடந்தது. இதை எம்பிஎல் என்ற இடதுசாரி கருத்தியல் கொண்ட அரசதிகாரத்தை எதிர்க்கும் சிறு குழு ஒருங்கிணைத்து நடத்தியது. மக்களுக்கு மலிவான விலையில் பொதுப்போக்குவரத்தை வழங்கவேண்டும் என்பதுதான் கோரிக்கை. ஆனால் காவல்துறை போராட்டக்காரர்கள் ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். போராட்டத்தை செய்தியாக்க வந்த பத்திரிகையாளர்களே காவல்துறையின் தாக்குதலைப் பார்த்து அருகிலுள்ள கட்டிடங்களுக்கு சென்று ஓடி ஒளிய வேண்டிய நிலைமை.

அப்போது பிரேசில் நாட்டில் இடதுசாரி கருத்தியல் கொண்ட தொழிலாளர்கள் கட்சி ஆட்சியில் இருந்தது. பிரேசில் தவிர பிற நாடுகளில் போராடிய மக்கள சிறந்த பள்ளிகள், சுகாதாரம், ஊழலற்ற ஆட்சி, காவல்துறையின் வன்முறையின்மை ஆகியவற்றை கோரிக்கைகளை முன் வைத்தனர்.


பிரேசில் நாட்டில் போராட்டம் நடைபெற்று முடிந்தபிறகு வலதுசாரி கருத்தியல் கொண்ட ஜெய்ர் பொல்சனாரோ ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சியில் பொதுத்துறை வீழ்ந்தது. பழங்குடிகள் வாழ்ந்த காடுகளை அழித்து தொழில்துறையை வளர்த்தார். மக்களிடையே வறுமை அதிகரித்தது. மக்கள் கொல்லப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. வன்முறைக் குற்றங்கள் கூடின. இப்போது அங்கு ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யவே அரசுக்கு நேரம் சரியாக இருக்கும்.


எகிப்தின் தாஹ்ரிர் சதுக்கத்தில் மக்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தலைவர்கள் கிடையாது. தானாகவே சமூக வலைதளத்தில் தொடங்கிய போராட்டம் மெல்ல தெருவில் பரவியது. மக்கள் தன்னியல்பாக ஒன்றாக சேர்ந்து போராடத் தொடங்கினர். இவர்கள் யாருமே டிவி, ரேடியோ நிலையங்களை முடக்கி அங்கு சென்று தங்கள் கருத்தியல்களைக் கூறவில்லை. அதற்கு ஆட்சியாளர்களை, ராணுவத்தை இணங்க கூறவில்லை.


அதுதான் இந்த போராட்டத்தில் பிழையோ எனும்படி நிலைமை மாறியது. ஏனெனில் பிறகு நடந்த தேர்தலில் முஸ்லீம்கள் கட்சி வென்றது. ஆனால் ராணுவம் அதை ஏற்காமல் சிசி என்பவரை நாட்டின் பிரதமராக்கியது. இப்படி தொடங்கிய கலகத்தில் எகிப்தி இன்றுவரை அமைதியே இல்லாத நாடாக மாறிவிட்டது.


போராட்டங்கள் வெற்றி பெற்றாலும் அதில் மேற்படி எந்த திட்டமிடலும் இல்லை. எனவே, அந்த போராட்டங்கள் நினைத்த லட்சியங்களை பின்னாளில் அடைய முடியவில்லை. மேலும், அதற்கு மாறாக நினைத்துப் பார்க்க முடியாத பிற்போக்குவாத சக்திகளிடம் சிக்கிக்கொண்டது. மக்களின் வாழ்க்கையும் மோசமாக மாறியது.


அமெரிக்காவில் இதற்கு ஒரு உதாரணம் உண்டு. அங்கு இடதுசாரி கருத்தியல் கொண்ட எஸ்டிஎஸ் என்ற இயக்கம் செயல்பட்டு வந்தது. இந்த இயக்கம், அமெரிக்கா வியன்னா மீது தொடுத்த போருக்கு எதிராக பேரணிகளை நடத்தியது. அதை ஊடகங்கள் பதிவு செய்தன. இதன் காரணமாக ஏராளமான மக்களே் அந்த இயக்கத்தில் சேர விரும்பினர். இவர்கள் அனைவருமே எஸ்டிஎஸ் இயக்கத்தின் கொள்கைகளை பிடித்துப்போய் அதில் சேரவில்லை. எப்படியாவது ஊடகங்களில் நமது பெயர் வெளியே தெரிய வேண்டும் என நினைத்தனர். இதனால் அடிப்படையான கொள்கை, போராட்டமே மாறிப்போனது. மேலும் ஊடகங்கள் எஸ்டிஎஸ் இயக்கம் சார்பாக யாரை சந்திப்பது என குழம்பினர். ஏனெனில் அப்படி தலைவர் என யாரும் இல்லை. ஊடகத்திற்கு என தனியாக பொறுப்பான ஆளும் இல்லை.


2006ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்க கொள்கை எதிர்ப்பாளரான எழுத்தாளர் மரினா சிட்ரின் ஹரிஸோண்டலிசம் என்ற நூலை எழுதினார். இதில் போராடும் போராட்டக்காரர்களே முடிவு எடுப்பதைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இதில் கட்சி தலைமை பீடம் என்ற ஒன்று இருக்காது. இப்படி இவர் கருதி எழுதுவதற்கு காரணம், மக்களின் பின்னணியில் உள்ள மேல்மட்ட ஆட்கள், அரசியல் கட்சிகளை, அதைச் சேர்ந்தவர்களை மரினா நம்பவில்லை.


பெண்ணிய எழுத்தாளரான ஜே ஃப்ரீமன், அமைப்பு முறை இல்லாத போராட்டங்களைப் பற்றி கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் 1970ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் உரிமைக்கான போராட்டம் சரியான அமைப்பு முறையில் இல்லாத காரணத்தால் வெற்றி பெறவில்லை. தேவையான உரிமைகள் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.


1960ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தங்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிக்கு பதில் சொல்லும் முறையைக் கற்றுக்கொண்டு விட்டனர். தொண்ணூறுகளில் சோவியத் யூனியன் உடைந்தபிறகு பல்வேறு நாடுகளும் தாராளவாத ஜனநாயகத்தை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டன. இந்த அடிப்படையில்தான் துனிசியாவில் தொடங்கிய போராட்டத்தைப் பார்க்கவேண்டும். மக்கள் போராட்டம் எதை எதிர்பார்த்து நடந்தன? ஜனநாயகம், சுதந்திரம், வளர்ச்சி என்ற மூன்று விஷயங்கள்தான். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மூன்றுமே அவர்களுக்கு கிடைக்கவில்லை.


வின்சென்ட் பெவின்ஸ், கார்டியன் இதழில் எழுதிய கட்டுரையின் தழுவல்.

pinterest



கருத்துகள்