செயற்கை நுண்ணறிவில் சாதனை படைக்கும் தொழிலதிபர்கள்!

 




உர்டாசன், வாபி

லீலா இப்ராகிம், டீப் மைண்ட்






செயற்கை நுண்ணறிவின் பிரம்மாக்கள்

டாரியோ, டேனியெலா அமோடெய்

துணை நிறுவனர்கள், ஆந்த்ரோபிக்

 

ஆந்த்ரோபிக், லாபநோக்கற்ற ஏஐ ஆராய்ச்சி நிறுவனம். செயற்கை நுண்ணறிவை ஆராய்ச்சி செய்வது எளிதல்ல. அதற்கு தொடக்கத்திலேயே அதிக நிதி தேவை. எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ எக்சேன்ஞ்ச், சேல்ஸ்ஃபோர்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் பெருமளவு நிதி பெற்று இயங்கி வருகிறது.

ஓப்பன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய ஏஐ மாடல்களுக்கு நிகராக சாட்பாட், கிளாட் 2 ஆகிய மாடல்களை உருவாக்கியுள்ள நிறுவனம்தான் ஆந்த்ரோபிக். 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தில் டாரியோ இயக்குநராகவும், டேனியெலா தலைவராகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சகோதர உறவுமுறையைக் கொண்டவர்கள்.

இந்த நிறுவனத்தை ஏழு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தொடங்கினர். இவர்கள் அனைவருமே ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் என்பதுதான் முக்கியமான அம்சம். ‘’நாங்கள் எங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி பற்றி வெளியில் அதிகம் பேசுவதில்லை. அதற்கு காரணம், அதை கார்ப்பரேட் அறிக்கை போல மாற்றவேண்டாம் என்ற நோக்கத்தில்தான்  ’’ என இயக்குநர் டாரியோ தெளிவாக பேசுகிறார். ஏஐ பாதுகாப்பில் அக்கறை காட்டுகிற, அதற்கான நெறிமுறைகளை வகுக்கும் இடத்தில் ஆந்த்ரோபிக் உள்ளது.

வில் ஹென்சல், பில்லி பெர்ரிகோ

அலெக்ஸ் கார்ப்

இயக்குநர், துணை நிறுவனர், பாலன்டிர்

2004ஆம் ஆண்டு கார்ப், தனது ஸ்டான்ஃபோர்டு சட்டப்பட்டதாரி நண்பர் பீட்டர் தியலுடன் இணைந்து பாலன்டிரை உருவாக்கினார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக செய்த ஆராய்ச்சியில் பாலன்டிர் உருவாக்கிய டேட்டா மாடல்களை அரசு ஏஜென்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இது நிறுவனத்தில் முதலீடு செய்கிற முதலீட்டாளர்களை, பணியாளர்களை எரிச்சல் படுத்தி அச்சுறுத்தினாலும் கார்ப் தெளிவாக இருக்கிறார். அரசின் ஒப்பந்தங்களை வென்று பாலன்டிர் நிறுவனம் நல்ல நிலையில் உள்ளது. குடியேற்றம், சுங்கம், சிஐஏ, எஃப்பிஐ என பல்வேறு நிறுவனங்களில் பாலன்டிரின் ஏஐ வசதியைப் பயன்படுத்துகிறார்கள்.

உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் கூட பாலன்டிர் பிற டெக் நிறுவனங்களுடன் இணைந்து உக்ரைன் அரசுக்கு உதவி வருகிறது.

அமெரிக்காவில் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்களை அமெரிக்க அரசு பயன்படுத்தும் வகையில் சட்டம் கூட இயற்றலாம் எனகருத்து கூறி அரசுக்கு ஆதரவாக இருக்கிறார் கார்ப்.

வேராபெர்ஜென்க்ருவென்

 

லீலா இப்ராகிப்

தலைமை செயல்பாட்டு அதிகாரி, கூகுள் டீப்மைண்ட்

 

2014ஆம் ஆண்டு டீப் மைண்ட் நிறுவனத்தை கூகுள் கையகப்படுத்தியது. ஒரு ஸ்டார்ப்அப் நிறுவனமான டீப்மைண்ட் கூகுளின் செயல்பாட்டில் ஒரு பகுதியாக மாறியது. தலைமை செயல்பாட்டு அதிகாரியாக அதன் தினசரி வேலைகளை பட்டியலிடுவது லீலாவின் வேலை. உண்மையில் அவருக்கு தான் செய்யும் வேலைக்கு நியாயம் செய்கிறோமா என்று கூட தோன்றியிருக்கிறது. மெல்ல அந்த ஐயப்பாடு நீங்கியிருக்கிறது.

2017ஆம்ஆண்டு, ஐம்பது மணிநேரம் கூகுள் டீப்மைண்ட் தொடர்பான நேர்காணல்களைக் கொடுத்து உழைத்தவர் லீலா.

வில் ஹென்சல்.

 

கிரேக் பிராக்மன்

துணைநிறுவனர், தலைவர், ஓப்பன் ஏஐ

கிரேக் தனது பணியில் பெரும்பாலான நேரங்களில் கோடிங் எழுதிக்கொண்டு இருக்கிறார். மீதியுள்ள நேரத்தில் ஏஐயை எப்படி பாதுகாப்பானதாக மாற்றுவது என யோசித்து வருகிறார்.

34  வயதாகும் கிரேக், ஓப்பன் ஏஐயின் சாத்தியத்தை , திறனை பத்து மடங்காக மாற்ற முயன்று வருகிறார். தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் வழியாகவே ஏஐயில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை மேம்படுத்த முடியும் என நம்புகிறார் கிரேக். பொதுப்பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவை மனிதர்களின் செயல்களுக்கு நிகராக உயர்த்தினால் எப்படியிருக்கும் என யோசித்துப் பாருங்கள் என ஆர்வமூட்டி பேசுகிறார்.

வில் ஹென்சல்.

ராக்குயல் உர்டாசன்

நிறுவனர், இயக்குநர் வாபி

 

உபர் நிறுவனத்தின் தானியங்கி இயக்கம் சார்ந்த பிரிவில் அறிவியலாளராக இருந்தவர். பின்னாளில் வாபி எனும் தானியங்கி வாகன இயக்கம் சார்ந்த ஸ்டார்ட்அப்பைத் தொடங்கினார். 2021ஆம் ஆண்டு நிறுவனத்தை தொடங்கினாலும் தற்போதைய ஏஐ சாத்தியங்களை வளர்ச்சிக்கு சாத்தியப்படுத்திக் கொள்ளலாம் என நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

பிற போட்டியாளர்களை விட வேகமாக கற்றுக்கொள்ள எளிதாக உள்ள தானியங்கி இயக்க மென்பொருளை வாபி கொண்டுள்ளது. விலையும் மலிவுதான். விர்ச்சுவலாக இதை ஒருவர் எளிதாக பயன்படுத்தி பயிற்சி பெறலாம். 2021ஆம் ஆண்டு 83 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது. மேலும் நீண்டதூரம் செல்லும் வாகனங்களில் மென்பொருளை பயன்படுத்தி சோதனை செய்துள்ளது. ஏஐ துறையில் வெற்றியைப் பெற ஆண்களை விட பெண்கள் பத்து மடங்கு அதிகம் உழைக்கவேண்டும் என கூறுகிறார் உர்டாசன்.

அலெசாண்ட்ரோ டி லா கார்சா

டைம் வார இதழ் 100/ai

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்