ஒற்றை மனிதராக சென்று காஷ்மீர் பிரிவினைவாத தீவிரவாதிகளுடன் மோதி பணயக்கைதிகளை மீட்கும் நாயகன்!

 

 

 

 

 

 

 


 



தாயகம்
விஜயகாந்த், ரஞ்சிதா
இயக்கம் ஏ ஆர் ரமேஷ்
இசை தேவா
பாடல்கள் பிறைசூடன்

காயமானால் வெளிவரும் ரத்தம் நொடியில் நின்றுபோகும் வகையில் மருந்து ஒன்றை இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடிக்கிறார். இதைப்பற்றி அவரிடம் உள்ள உதவியாளர் தகவலை பாக். தீவிரவாதிக்கு கசியவிடுகிறார். இதனால் விஞ்ஞானி செல்லும் விமானம் கடத்தப்படுகிறது. காஷ்மீரில் தனி காஷ்மீர் கேட்கும் சிறு தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள் பயணிகள். அவர்களை சக்திவேல் என்ற மீனவர், விஞ்ஞானியின் மகளோடு சென்று தனிமனிதராக மீட்டு வருவதுதான் படத்தின் கதை.

படத்தில் முப்பது நிமிடம் கழித்துத்தான் விஜயகாந்த் வருகிறார். அதுவரைக்குமான படத்தின் காட்சிகளை அருண் பாண்டியன் பார்த்துக்கொள்கிறார். அவருக்கு பக்க துணையாக விமான பைலட் பாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார். இன்று ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் நடித்து வரும்
ஒன்மேன் ஆர்மி பாத்திரத்தில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் வருகிறார். இது சண்டைப்படம் என்பதால் லாஜிக் பார்க்காதீர்கள். மேஜிக் மிஸ் ஆகிவிடும். படத்தில் வரும் எம்ஏ படித்த பெண் பாத்திரத்தில் வரும் ரஞ்சிதா, ஒன்பதாம் கிளாஸ் படித்த மீனவரான விஜயகாந்தை காதலித்து அவராக மனதில் டூயட் பாடிக்கொள்கிறார். பாடல்கள் பெரிதாக கேட்கும்படியாக இல்லை.

தேவாவின் இசை பாதிநேரம் ஜேம்ஸ்பாண்டின் பிஜிஎம்மை மறு உருவாக்கம் செய்துகொண்டே இருக்கிறது. ஆனால் அது கண்றாவியாக இருக்கிறது. ஸ்னோபிராக வரும் காஷ்மீர் தீவிரவாதி பாத்திரத்தில் மன்சூர் அலிகான் நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய முகத்தோற்றத்தை மாற்றியிருக்கிறார்கள். எனவே அவர் படத்தில் தோன்றும்போது மன்சூரலிகான் என பெயரை வேறு போடுகிறார்கள். அடையாளம் கண்டுபிடிச்சுட்டோம் சார். அவரது குரல் எங்களுக்குத் தெரியாதா?

படத்தின் இறுதிக்காட்சியில் பாக். ஹெலிகாப்டரில் வரும் விஜயகாந்தை எப்படி ராணுவ வீரர்கள் சுடாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஹெலிகாப்டரில் இருந்து தேசியக்கொடியை காட்டுவதற்கு கீழேயுள்ள வீரர்கள் சல்யூட் வேறு அடிக்கிறார்கள். ஒருவழியாக படம் முடிந்துவிட்டது என்பது பெரிய நிம்மதி. காதலே இல்லாத படம். அதுவும் படத்தை சற்று பார்க்கலாம் என தூண்டுகிறது.

இது சண்டைப்படம் என்பதால் அதற்காகவே படம் பாருங்கள். வேறு எதற்காகவும் அல்ல.

கோமாளிமேடை டீம்  

Release date: 15 January 1996 (India)
Director: A. R. Ramesh
Music director: Deva
Story by: Raja Rajendran

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்