பெற்றோர் பார்த்து வைத்த அமெரிக்க மாப்பிள்ளையை கைவிட்டு ஓடும் இளம்பெண்ணின் பயணம்!
சசிரேகா பரினாயம்
இயக்கம்
– கிருஷ்ண வம்சி
இசை – மணிசர்மா
– வித்யாசாகர்
தருண், ஜெனிலியா
ஹைதராபாத்தில்
பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் பெண்ணுக்கு சொந்த ஊரில் திடீரென கல்யாணம் உறுதியாகிறது. புஜ்ஜம்மா
எனும் சசிரேகாவுக்கு யார் மாப்பிள்ளை என்றே தெரியவில்லை. டௌரியாக 20 லட்சம் பேசி நடக்கும்
பஞ்சாயத்தில் கலவரமாகிறது. இதனால பயந்துபோன சசி, கல்யாண வீட்டில் இருந்து தப்பியோடுகிறார்.
அவருக்கு இளைஞர் ஆனந்த் உதவுகிறார். இருவரது வாழ்க்கையும் என்னவானது, ஓடிப்போன பெண்ணை
பெண்ணின் அப்பா பிடித்தாரா, டௌரி பஞ்சாயத்தில் அவமானப்பட்ட மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்
வன்மதை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதே கதை.
கிருஷ்ணவம்சி படம் தெலுங்கு பெருமை. விஜயவாடாவின்
அருமை,பெருமை புகழ். தெலுங்கு கல்யாண சடங்குகள், அதன் மகத்துவம் என படம் கலாசார வழியில்
பயணிக்கிறது. படத்தில் நம்மை நெகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக நிறைய காட்சிகள் உள்ளன.
பெற்றோர்
பிள்ளைகளோடு எந்தளவு மனம்விட்டு பேசவேண்டும், அதுவும் திருமணம் என்ற விஷயத்தில் வெளிப்படையாக
இருக்கவேண்டும் என்பதை இரண்டரை மணி நேரத்தில் சொல்கிறார்கள். மணிசர்மா, வித்யாசாகரின்
இசை நம்மைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. வித்யாசாகரின் இசையில் வரும் சைந்தவி பாடியுள்ள
பாடலை நிறைய காட்சிகளில் பயன்படுத்தியுள்ளனர். அது நன்றாகவும் உள்ளது.
தருண் அபிமன்யுவாக,
ஜெனிலியா புஜ்ஜம்மா எ ன்கிற சசிரேகாவாக வருகிறார். இருவருமே தங்கள் பாத்திரங்களில்
நன்றாக நடித்திருக்கிறார்கள். வீட்டை விட்டு
வெளியே வருகிற இளம்பெண்ணுக்கான பாதுகாப்பு, பிரச்னைகளை வணிக சினிமா வகையில்
கவனப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். ஒருவாரம் போல சுற்றும் அபிமன்யு, சசிரேகா என இருவரும்
மெல்ல காதல்வயப்படுகிறார்கள். உண்மையில் ஆனந்த் எனும் அபிமன்யுதான் தன்னை கல்யாணம்
செய்யப்போகும் அமெரிக்க மாப்பிள்ளை என சசிரேகா தெரிந்துகொண்டால் என்ன ஆகும் என்பதுதான்
இறுதி பகுதி.
மகன் அபிமன்யு மீது பாசம் வைத்துள்ள வக்கீல் கோபால்
கிருஷ்ணா, கல்யாணம் செய்யும் மணமகளின் வீட்டில் டௌரி பற்றி மட்டுமே பேசுவது, மெஷின்
வைத்து பணத்தை எண்ணுவது சற்று ஓவர் டோஸாக தெரிகிறது.
பெண்ணுக்கு
அவர் அப்பா தனது விருப்பப்படி கல்யாணம் செய்கிறார் சரி. ஆனால் அதற்கென மாப்பிள்ளை போட்டோ
கூட மகளிடம் காட்டாமல் இருப்பாரா என்ன? வெறும் டிவிடியை வைத்து உறவினர்களுக்கு மாப்பிள்ளையை
அடையாளம் காட்ட முடியுமா?
திருமணம்
செய்யப்போகும் ஆண், பெண் இருவரும் ஒருவரையொருவர் நன்றாக தெரிந்துகொள்ளவேண்டும் என்ற
கருத்தை சொல்லியிருக்கும் படம்தான் இது.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக