அமெரிக்காவில் வறுமையில் வாடும் குழந்தைகள்!

 








அமெரிக்காவில் வறுமை விளிம்பில் தள்ளப்படும் சிறுவர்கள்!

அமெரிக்காவில் வறுமை நிலையில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது. இதை அமெரிக்க அரசின் மக்கள்தொகை அமைப்பு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு, 5.2 சதவீதமாக இருந்த வறுமை நிலையிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது 12.4 சதவீத்த்திற்கும் அதிகமாக உள்ளது.

அமெரிக்க அரசும் கையைக் கட்டிக்கொண்டு சும்மாயிருக்கவில்லை. குழந்தை வரி கடன் திட்டம் என்பதை அமல்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்கள் தொழில் செய்து வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குழந்தைக்கு 3,600 டாலர்கள் வரியைக் கடனாக கொடுக்கிறார்கள். இத்தொகையை அரசு வரி வருவாயில் இருந்து விட்டுக்கொடுக்கிறது. இதன்மூலம் அரசுக்கு வருமானம் குறைந்தாலும் கூட குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இப்போதைக்கு இந்த திட்டம் மூலம எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை . ஆனால் எதிர்காலத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறது. தனிப்பட்ட மனிதர்களின் தோல்வி என்று இல்லாமல் அரசின் கொள்கை ரீதியான முடிவுகளே குழந்தைகளின் வறுமை நிலையை சீர் செய்யும் என தேசிய பெண்கள் சட்ட மையத்தில் துணைத் தலைவர்மெலிசா போடீச் கூறியிருக்கிறார்.

அமெரிக்க அரசின் குழந்தைகள் வறுமை ஒழிப்பு திட்டம் மூலமாக அரசுக்கு உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, வரி வருமானம் 1.3 பில்லியன் டாலர்கள் குறையும் என அரசு கமிட்டி தனது ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளது.  திட்டம் தொடர்ந்தால் பத்து ஆண்டுகளிஃல 1.6 டிரில்லியன் டாலர்கள் வரி வருமானத்தை மக்கள் தருவதாக  அமையக்கூடும் என தி டாக்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பு தகவல் கூறியுள்ளது.

குழந்தைகள் வறுமையில் இருப்பது அவர்கள் மீதான பாலியல் வன்முறை, வீடற்று இருப்பதை ஊக்குவிக்கும். கல்வி, ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும் காரணியாக வறுமை உள்ளது. வறுமையில் வாழும் குழந்தைகளால் 1.1 டிரில்லியன் டாலர்கள் உற்பத்தித் திறன் இழப்பாகிறது. இந்த சூழ்நிலை குற்றங்களை ஊக்குவிப்பதோடு மருத்துவம் சார்ந்த செலவுகளையும் அதிகரிக்கிறது.

பெருந்தொற்றுக்கு பிறகு அமெரிக்க அரசு குழந்தைகளுக்கு செலவிடும் பல்வேறு திட்டங்களை கைவிடத் தொடங்கியுள்ளது. மொத்தம் 70 ஆயிரம் திட்டங்கள் இந்த வகையில் நிதி நல்கையின்றி கைவிடப்பட்டுளன. 3 மில்லியன் குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு பயன்கள் கிடைக்காத நிலை உள்ளது. குழந்தை வரிக்கடன் திட்டம் வெற்றிகரமாக சில ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டால், வறுமை நிலை சற்றேனும் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பெலிண்டா லஸ்காம்ப்

டைம் இதழ்

burakaslan

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்