ரவுடிகளை அசாத்திய துணிச்சலோடு பந்தாடும் கல்லூரி மாணவன்!
![]() |
அசாத்யுடு - கல்யாண் ராம், தியா |
அசாத்யுடு
தெலுங்கு
கல்யாணம்
ராம், தியா
கல்லூரியில்
படிக்கும் பார்த்துவுக்கு ஒரு செயலை செய்தால் அதன் முன்பின் என்ன நடக்கும் என்பது தெரியும்.
இதனால் அடுத்தவர்களின் பிரச்னையில தானாக சென்று தலையிட்டு அதை முடித்து வைக்க தயங்குவதில்லை.
இவனது குணத்தால் பெத்த ரவுடியின் தம்பியை தன்னியல்பாக அடித்து கொல்கிறான். இதனால் ஏற்படும்
பிரச்னைகளை காவல்துறை உதவியுடன் எப்பபடி கையாள்கிறான். ரவுடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தனியொருவனாக அசாத்திய துணிச்சல் கொண்ட மனிதனாக எப்படி உதவுகிறான் என்பதே கதை.
கல்யாண் ராமின்
படங்களில் கொஞ்சமேனும் கதைக்காக மெனக்கெடுகிறார்கள். அந்த வகையில் படத்தை பார்ப்பதில்
அந்தளவு சலிப்பு ஏற்படுவதில்லை. இதற்காக அவரது அத்தனை படங்களும் சிறப்பானவை என்று கூற
முடியாது. இந்த படத்தில் பார்த்து என்ற பாத்திரத்தின் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.
ஒரு கல்லூரியில்
ஒரு இளம்பெண்ணை ராக்கிங் செய்து அவளை பாலியல் வல்லுறவு செய்ய துரத்துகிறார்கள். கல்லூரி
தலைவரின் மகன் என்று தெரிந்தும் அவனை அடித்து உதைத்து பெண்ணைக் காப்பாற்றுகிறான் பார்த்து.
இதன் விளைவாக அவனுக்கு டிசி கிடைக்கிறது. அதை அவன் எதிர்பார்த்தே சண்டை போடுகிறான்.
இதுதான் அவனது சிறப்பு. நாம் யார், நம்மால் என்ன முடியும், அதன் விளைவாக நம்மைச் சார்ந்தவர்களுக்கு
என்ன நடக்கும் ஆகிய விஷயங்களை யோசிப்பவன்தான் நாயகன்.
ஆனால் இந்த
குணம் ஒரு இடத்தில் அவனுக்கு வேலை செய்யாமல் போகிறது. அது, சிறுவனுடன் ஆட்டோ ஒன்றில்
போகும்போது நேரும் சம்பவம். அதில் நகரின் மிகப்பெரிய ரவுடியின் தம்பியுடன் சண்டை போட
நேருகிறது. அதுவும் கூட தன் கூடவே ஆட்டோவில் வரும் சிறுவனின் உயிரைக் காப்பாற்றவே..
அந்த சண்டையில் ரவுடியின் தம்பி அகால மரணம் அடைகிறார். இதனால் கோபமுறும் ரவுடி தனக்கு
எதிரியான இன்னொரு ரவுடியை சந்தேகப்பட்டு கொல்ல முயல்கிறார். பிறகு உண்மையான கொலையாளி
நாயகன் என தெரிந்து பார்த்துவுடன் மோதுகிறார். அதில் யார் வெல்கிறார்கள் என்பதே கதை.
பார்த்துவின்
குணம் புரிந்துவிட்டதல்லவா? அவனின் குணத்திற்காகவே அவனுக்கு நட்பும் கிடைக்கிறது. எதிரியும்
நெருங்கி வருகிறார்கள். கூடவே காதலியும் கூட கிடைக்கிறாள்.
நாயகன் பார்த்து
நகருக்கு வந்து கல்லூரியில் சேர்கிறான். அங்குதான் நாயகியை சந்திக்கிறான். அவளோ அவனை
ஏற்கெனவே பார்த்தது போல உடனே புன்னகைக்கிறாள். பெயர் கூறி அழைக்கிறாள். ஆனால் பார்த்துவிற்கு
ஒன்றும் புரியவில்லை. அவள் யாரென்று நண்பர்களிடம் கேட்கிறான். அப்போதுதான் அவளும் ஒரு
ரவுடியின் மகள். எனவே அவளை யாரும் காதல், நட்பு என்று கூட கிட்ட நெருங்குவதில்லை என்று
தெரிகிறது.
நாயகி லூசுப்பெண்
கிடையாது. அவள் தெளிவாக தனது காதலைக் கூறுகிறாள். ஆனால் அதை நாயகன் ஏற்பதில்லை. அடுத்தநாளே
அவனது வீட்டுக்கு ரவுடிகள் வந்து தொந்தரவு செய்கிறார்கள். அவர்களுக்கு டீ கொடுத்து
உபசரித்து நாயகி மீது காதலேதும் கிடையாது என்று அனுப்பி வைக்கிறான் நாயகன். அடுத்து,
அவன் நேரடியாக நாயகியின் அப்பாவைப் பார்த்து. அவரின் அனுமதி கிடைத்தால் காதலிக்கலாம்
இல்லையென்றால் இல்லை என்று கூறுகிறான். அவரும் சரி என அனுமதிக்கிறார். ஆனால் அவர் அவனை கொல்வதற்கான ஏற்பாட்டை மறைவில்
செய்கிறார். ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்பதை படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
நாயகி வரும்
பாடல் காட்சிகள் வன்முறையான சண்டைக்காட்சிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளன. மற்றபடி குடும்ப
உறவுகளை , சமூகத்தை நேசிக்கும் ஒருவனின் கோபம்தான்
நாயகனுடையது.
கல்யாண் ராம்
, தியா ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். கல்யாணின் பாத்திர வார்ப்புதான் படத்தின்
அடிப்படையான இயல்பை தீர்மானிக்கிறது. உதவி கமிஷனர், நகரில் ரவுடி செய்யும் அட்டூழியங்களைக்
கூறி அதனால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டி அவனை உசுப்பேற்றுகிறார். பிறகுதான்
அவன் துணிச்சலாக உயிரை மக்களுக்காக பணயம் வைத்து களமிறங்குகிறான். இறுதியில் வில்லனின்
வயிற்றை நரசிம்மராகி பிளந்து கொல்கிறான்.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக