இடுகைகள்

பிரேசில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மணம் செய்துகொண்டு தனித்தனியாக வாழ்ந்து உளவு பார்த்த ரஷ்ய உளவாளிகள்!

படம்
  உலக நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து ஒற்றறியும் ரஷ்ய உளவாளிகள்! அண்மையில் பிரேசில் நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் திடீரென காணாமல் போயுள்ளனர். இவர்களைப் பற்றி இரு நாட்டு காவல்துறையும், உளவு அமைப்பும் துப்பு துலக்கியதில் ரஷ்ய நாட்டின் உளவு அமைப்பால் பயிற்சி வழங்கப்பட்டவர்கள் எனவும், ஆண், பெண் என இருவருமே மணமாகி பிரிந்து தனித்தனி நாடுகளில் வாழ்ந்து வந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஜெரார்ட் டேனியல் காம்போஸ் விட்டிச், இவர் பிரேசில் நாட்டில் இருந்து மலேசியாவிற்கு சென்றார். போகும் வரை தனது பெண் தோழிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர், திடீரென மாயமானார். அவரைப் பற்றிய எந்த செய்தியும் தெரியவில்லை. இதனால், பதட்டமான பெண்தோழி, விட்டிச் பற்றி காணவில்லை என்று புகார் கொடுத்து தேடத் தொடங்கினார். காவல்துறையோடு, சமூக வலைத்தளத்திலும் தேடுதல் நடைபெற்றது. ஆஸ்திரிய – பிரேசிலிய பாரம்பரியத்தைக் கொண்ட விட்டிச், 3 டி பிரிண்டிங் நிறுவனத்தை நடத்தி வந்தார். பிரேசிலிய ராணுவத்திற்கு பல்வேறு கருவிகளை செய்து கொடுத்து ஆயுத வடிவமைப்பில் உதவி வந்தார். இவரது பெண்தோழி, பிரேசில் அரசின் விவ

பிரேசிலில் பெருகும் வறுமையை, வெறுப்பை போக்குவாரா புதிய அதிபர் லுலா!

படம்
  பிரேசில் நாட்டில் ஏற்பட்ட புதிய மாற்றம்!   இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அதிபராக தேர்வாகியிருக்கிறார். இதற்கு முன்னர் இருமுறை தொடர்ந்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்திருக்கிறார். தனது 77 வயதில் மீண்டும் அதிபராக லுலா தேர்ந்தெடுக்கப்பட என்ன காரணம் இருக்கப்பட முடியும்? என்று பார்ப்போம். தேர்தலில் வெற்றி பெற்ற சதவீதம் பெரிதாக உள்ளது என்று சொல்ல முடியாது. வலதுசாரி பிரதமரான பொல்சனாரோ 49.1 சதவீதம் பெற்றுள்ளார் எனில் லுலா பெற்றுள்ள வாக்குகளின் அளவு 50.9% ஆகும். லுலாவும் பொல்சனாரோவும் கொள்கை, செயல்பாடு அளவிலும் மிகவும் வேறுபட்டவர்கள். பொல்சனாரோ எப்படிப்பட்டவர் என்ன அமேசான் காடுகளை அழியவிட்டதில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இவரது ஆட்சிக்காலத்தில் பழங்குடிகளின் வாழிடங்கள் வேகமாக அழிக்கப்பட்டன. நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளே உருவாக்கப்பட்டன.  77 வயதான லுலா தொழிற்சங்க தலைவராக இருந்தவர். இவர் நாட்டின் அதிபராக 2002, 2010ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். லுலா அதிபராக இருந்தபோது   பல லட்சம் மக்களை வறுமை

டைம் 100 - சாதித்த மனிதர்கள் - பார்க்கர், சோனியா, கிரிகோரி, பன்செல்

படம்
  சோனியா கிரிகோரி  பார்க்கர் பன்செல் கான்டாஸ் பார்க்கர்  விழிப்புணர்வோடு இயங்கும் விளையாட்டு வீரர் கான்டாஸ் பார்க்கர் கதை அடுத்த தலைமுறை வீரர்களை பெரும் உற்சாகப்படுத்தக்கூடியது. அவர் இரண்டாவது முறையாக டபிள்யூ என்பிஏ சாம்பியன்ஷிப்பை வென்றது மறக்க முடியாத தருணம். இதனை அவர் சிகாகோ ஸ்கை என்ற அணியில் இடம்பெற்று சாதித்தார். தான் விளையாடிய விளையாட்டுகளில் புரட்சியை ஏற்படுத்தியவர் எனலாம். நான் அவரது சக விளையாட்டு வீரர் என்ற முறையில் அவரின் ஆற்றலை உணர்ந்துள்ளேன். அவரது ஆர்வத்தை மதிக்கிறேன். அவர் தான் விளையாடும் இடங்களுக்கு தன் மகளைக் கூட்டிச்செல்வார்.  பாலின சமத்துவம் பற்றி வெளியாகியிருக்கும் டைட்டில் 9 என்ற ஆவணப்படத்தையும் கான்டாஸ் தயாரித்திருக்கிறார். தனது செயல்பாடுகள் மூலமாக தொடர்ந்து அவர் வளர்ந்துகொண்டே இருக்கிறார். தனது வாழ்க்கையை வெளிப்படையாக முன்வைப்பது எளிதானதல்ல.  டிவைன் வேட்  2 சோனியா குவாஜாஜாரா sonia guajajara அமேஸானின் பாதுகாவலர்  சோனியாவின் பெற்றோர் படிப்பறிவற்றவர்கள். எனவே சோனியா தனது பத்தாவது வயதில் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறினார். புள்ளியியலில் பட்டம் பெற்றார். 500 ஆண்டுகள்

கல்வி, பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் தற்கொலைகளைத் தடுக்கலாம்! - சௌமித்ரா பதாரே

படம்
உளவியலாளர் சௌமித்ர பதாரே சௌமித்ர பதாரே மனநல சட்டம் மற்றும் கொள்கை மைய இயக்குநர் உலகளவில் நடைபெறும் தற்கொலைகளில் 20 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. பதாரே, இதுபற்றி லைஃப் இன்டரப்டட் அண்டர்ஸ்டாண்டிங்  இண்டியாஸ் சூசைட் கிரிசிஸ் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் அம்ரிதா திரிபாதி, அமிஜித் நட்கர்னி ஆகிய எழுத்தாளர்களும் பங்களித்துள்ளனர்.  இளைஞர்கள், பெண்கள், எழுபது வயதானவர்கள் ஆகிய பிரிவுகளில் தற்கொலைகள் அதிகமாகியுள்ளன என கூறியுள்ளீர்கள். இந்தியாவில் தற்கொலைகள் இப்படி அதிகரிக்க என்ன காரணம்? வயதானவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு அவர்கள் தனியாக இருப்பதுதான் காரணம். மேலும் அவர்கள் தங்கள் துணையை இழந்திருப்பார்கள். சமூகத்தில் புறக்கணிப்பையும் எதிர்கொண்டிருப்பார்கள். இதைப் பற்றிய தகவல் பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இளைஞர்கள் ஏன் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.  குடும்ப பிரச்னைகள், உறவு சார்ந்த சிடுக்குகள் இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. பிற நாடுகளில் நேரும் தற்கொலைகளுக்கு வேலைவாய்ப்பின்மை முக்கியமான காரணமாக உள்ளது. இளம் வயதில் கர்ப்பிணியாவது, பொருளாதார பற்றாக்குறை, ப

பழங்குடித் தலைவரை கொன்ற சமூக விரோதிகள் - பிரேசில் அட்டூழியம்

படம்
பிரேசிலின் அமேசான் காடுகளைப் பாதுகாக்க போராடிய தலைவர்களில் ஒருவரான லோபோ நவ.1 அன்று கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை அங்கு 135 சூழலியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குவாஜாஜரா எனும் பழங்குடி இனக்குழு தலைவராக இருந்த பாலோ பாலினோ குவாஜாஜரா என்ற 26 வயது இளைஞர், தற்போது கொல்லப்பட்ட சூழலியலாளர் பட்டியலில் இணைந்துள்ளார். அவரையும்  கொலைகார கும்பல் விட்டுவைக்காமல் கொன்றுவிட்டனர். அங்கு சட்டவிரோதமாக மரங்களை, விலங்குகளை வேட்டையாடும் கும்பல் லோபோவின் முகத்தில் சுட்டுக் கொன்றுள்ளது. அவரின் நண்பர் லேர்சியோவுக்கும் கடுமையான காயம் பட்டுள்ளது. லோபோ, கார்டியன் ஆப் தி ஃபாரஸ்ட் என்ற உதவிக்குழுவைத் தொடங்கி செயல்பட்டு வந்தார். அராரி போலா எனும் பாதுகாக்கப்பட்ட கானக இடத்தை இவர்கள் பாதுகாத்தனர். இதனை அழிப்பது சட்டவிரோத கும்பலுக்கு முக்கியமான லட்சியமாக இருந்தது. பிரேசில் அதிபர் பொல்சனாரோ தேர்ந்தெடுக்கப்படும் சமயத்தில் இக்கொலைகள் அதிகரித்து வந்தது தற்செயலான ஒன்று என நியூயார்க் டைம்ஸ் வஞ்சப் புகழ்ச்சியணியாக எழுதியுள்ளது. வலதுசாரி அதிபரான பொல்சனாரோ, காடுகளை அழிப்பதில் பேரார்வம் க

குழந்தை தொழிலாளர் முறைக்கு ஆதரவாக பிரேசில் அதிபர்!

படம்
பிரேசில் வலதுசாரி அதிபர் பொல்சனாரோ, குழந்தை தொழிலாளராக வேலை செய்வது தவறில்லை என்று தன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்து அங்கு தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரேசில் நாட்டில் பதிமூன்று வயதுக்கு குறைந்தவர்கள் வேலையில் ஈடுபடுத்தக்கூடாது என்பது சட்டமாக உள்ளது. பதினான்கு வயதானவர்கள் வேலைக்கான ஒப்பந்த த்தில் கையொப்பமிடலாம்.  இதற்கு ஆதரவாக ஃபெடரல் நீதிபதி மெர்சிலஸ் பிரெசிலஸ், தானும் பனிரெண்டு வயதில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி பணத்தின் மதிப்பை தெரிந்துகொண்டதாக பதிவிட்டிருக்கிறார். இம்முறையில் அதிபர் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவும் வாய்ப்பு உள்ளது. உலக தொழிலாளர் அமைப்பு, குழந்தை தொழிலாளர்கள் இளம் வயதில் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களின் மனம், உடல் பாதிக்கப்படுவதாக கூறுகிறது. பிரேசிலில் தற்போது, 2.5 மில்லியன் பேர் 5 லிருந்து 17 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர் என்று அங்கு எடுக்கப்பட்ட புள்ளியியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் குழந்தை தொழிலாளர் தொடர்பாக அங்கு ஆண்டுதோறும் 43 ஆயிரம் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. குடும்ப வறுமை காரணமாக தொழிலி

இயற்கை வளம் கெடும் பிரேசில்! - புதிய அதிபரின் அட்டகாசம்

படம்
பிரேசிலில் உரங்களுக்கு அனுமதி! பிரேசிலில் வலதுசாரி கருத்தியல்கொண்ட பொல்சொனோரோ தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மையில் 152 உரங்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். விவசாய அமைச்சகம் சார்ப்பில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகளவு உரங்களைப் பயன்படுத்தும் நாடுகளில் பிரேசில் முன்னணி வகிக்கிறது.  2015 ஆம் ஆண்டு 139 உரங்களும், 2018 ஆம் ஆண்டு 450 உரங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் 1300 உரங்களுக்கு அனுமதி வழங்கப்படவிருக்கின்றன. உரக்கம்பெனிகளில் அமெரிக்க, சீனக்கம்பெனிகளே அதிகம்.  இதுகுறித்து தெரசா கிறிஸ்டினா, முழுக்க உரக்கம்பெனிகளுக்கு நாங்கள் அனுமதி தரவில்லை என சமாளிப்பு பதில் அளித்திருக்கிறார். விவசாயத்தை மேம்படுத்துவதற்காக நாங்கள் உரங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறோம். இதன்மூலம் சரியான உரங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் உண்மை அதுவல்ல. தனிநபர் ஒருவருக்கு தோராயமாக 7 லிட்டர் அளவு உரம் பயன்படுத்தப்படுவது பிரேசில் நாட்டில் மட்டும்தான். இதனால் உணவுப்பொருட்களின் வழியாக நச்சுப்பொருட்கள் அதிகரிக்கிறது என்ற உண்மை இவர்கள் அ

கருப்பு காமிக்ஸ் நாயகன்!

படம்
குளோபல் வாய்ஸ் கருப்பு கதாநாயகன்! காமிக்ஸ் ஆகட்டும், படங்கள் ஆகட்டும் கருப்பின நாயகர்கள் கதையை நடத்திச்செல்வது அரிது. காரணம்,  பதிப்பாளர், கதை எழுதுபவர் என பலரும் வெள்ளையர்களாக இருப்பதுதான். இதைத்தாண்டி கருப்பர்கள் இடம்பெற்றாலும் திருடர்களாக, நகைச்சுவை கதாபாத்திரமாகவே இருப்பார்கள். 1960 ஆம் ஆண்டு வெளியான துர்மா டா மோனிகா (மோனிகா கேங்) என்ற படக்கதையில் கதாநாயகன் ஜெர்மியா என்பவன். பிரேசிலில் வெளிவந்த காமிக்ஸ் இது. நான் வாழ்வதை உலகம் அறிய வேண்டும். நான் நானாக இருப்பதை அவர்கள் அறியவேண்டும் என்ற வசனம் இதில் வெகு பிரபலமானது. இக்கதை சிறுவர்களின் மத்தியில் பிரபலமாக, பதினான்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.   இதனை உருவாக்கியர் மௌரிகோ டி சூசா. ஜெர்மியாஸ் என்ற சிறுவனின் நிறம் காமிக்ஸ் தொடங்கியபோதே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனை எழுதிய எழுத்தாளர் ரஃபேல் கால்காவிடம் பேசினோம். இடது- ரஃபேல் கால்கா, ஜெபர்சன் ஜெர்மியாவின் சிறுவயது வாழ்க்கை, பாதுகாப்பற்ற சூழல் , இனவெறி ஆகியவற்றை பற்றி காமிக்ஸில் பேசியுள்ளீர்கள். இதன் தாக்கத்தைப் பற்றி கூறுங்களேன்.  ஜெஃபர்சன