கருப்பு காமிக்ஸ் நாயகன்!


Capa de Jeremias - Pele reproduzida com autorização do autor.
குளோபல் வாய்ஸ்


கருப்பு கதாநாயகன்!


காமிக்ஸ் ஆகட்டும், படங்கள் ஆகட்டும் கருப்பின நாயகர்கள் கதையை நடத்திச்செல்வது அரிது. காரணம்,  பதிப்பாளர், கதை எழுதுபவர் என பலரும் வெள்ளையர்களாக இருப்பதுதான். இதைத்தாண்டி கருப்பர்கள் இடம்பெற்றாலும் திருடர்களாக, நகைச்சுவை கதாபாத்திரமாகவே இருப்பார்கள்.


1960 ஆம் ஆண்டு வெளியான துர்மா டா மோனிகா (மோனிகா கேங்) என்ற படக்கதையில் கதாநாயகன் ஜெர்மியா என்பவன். பிரேசிலில் வெளிவந்த காமிக்ஸ் இது. நான் வாழ்வதை உலகம் அறிய வேண்டும். நான் நானாக இருப்பதை அவர்கள் அறியவேண்டும் என்ற வசனம் இதில் வெகு பிரபலமானது. இக்கதை சிறுவர்களின் மத்தியில் பிரபலமாக, பதினான்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.  இதனை உருவாக்கியர் மௌரிகோ டி சூசா. ஜெர்மியாஸ் என்ற சிறுவனின் நிறம் காமிக்ஸ் தொடங்கியபோதே கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதனை எழுதிய எழுத்தாளர் ரஃபேல் கால்காவிடம் பேசினோம்.






Image result for Rafael Calça
இடது- ரஃபேல் கால்கா, ஜெபர்சன்













ஜெர்மியாவின் சிறுவயது வாழ்க்கை, பாதுகாப்பற்ற சூழல் , இனவெறி ஆகியவற்றை பற்றி காமிக்ஸில் பேசியுள்ளீர்கள். இதன் தாக்கத்தைப் பற்றி கூறுங்களேன். 


ஜெஃபர்சன் மற்றும் நான், கருப்பர்களின் இளமைக் காலத்தைப் பற்றி பலமுறை பேசி விவாதித்துள்ளோம். கருப்பர்களின இளமைக்காலம் பெரும்பாலும் துயர் நிறைந்தது என்பதோடு பெரிதும் மாறாததும்கூட. நான் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். ஜெர்மியாஸ் கூட இச்சம்பவங்களை சந்தித்தாலும் அமைதியை வலியுறுத்தும் கதாபாத்திரமாகவே உருவாகியுள்ளான். 

இதில் கூறவருவது என்ன?

இதில் வரும் நாயகனின் கதை , நிகழ்ச்சிகள், சோகங்கள் என்னுடையது என்பதல்ல விஷயம். இதில் சமத்துவத்திற்கான முயற்சிகள் நடைபெறுவதை நீங்கள் கவனிப்பதே முக்கியம். 

கதைக்கு பாராட்டுகள் கிடைத்தனவா?


அலைபேசி வழியாகவும், சமூக வலைத்தளங்கள் வழியாகவும் பாராட்டுகள் தெரியவந்தன. இதற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தாலும் என் வாழ்க்கையை நான் கூறுவேன் என துணிச்சலாக உள்ளேன். அதில் மாற்றம் ஏதுமில்லை. 


நன்றி: குளோபல் வாய்ஸ்

படம்: யூட்யூப்