இடுகைகள்

ஓய்வூதியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய அரசின் ஓய்வூதிய நிதிச்சுமையைக் குறைக்கும் அக்னிபாத் திட்டம்!

படம்
  இ்ந்திய அரசின் அக்னிபாத் திட்டம் - எதிர்ப்பு ஏன்? 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அக்னிபாத் திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. அறிவிக்கப்பட்ட காலம் தொடங்கி, அத்திட்டம் எதிர்க்கட்சிகள்,  முன்னாள் ராணுவ வீரர்கள் என கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது. பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி அக்னிபாத் திட்டத்தை எதி்ர்த்து பிரசாரம் செய்தது. இங்கெல்லாம் பாஜக நிறைய இடங்களை இழந்ததற்கு அத்திட்டம் கூட காரணமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் பேசப்பட்டு வருகிறது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத சிறுபான்மை பாஜக அரசுக்கு, ஐக்கிய ஐனதாதளத்தின் நிதிஷ்குமார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் ஆகியோர் அக்னிபாத் திட்டத்தை மறுசீராய்வு செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். கடந்த இருமுறை பெரும்பான்மை பெற்ற பாஜக அரசு இம்முறை நினைத்த வெற்றியை பெறமுடியாமல் பின்தங்கியுள்ளது. இந்த நிலைமையில் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று இணக்கமாக செல்லுமா என்ற சில மாதங்களில் தெரிந்துவிடும். அக்னிபாத் திட்டத்தைப் பற்றி பார்ப்போம். பதினேழ