இடுகைகள்

சந்திப்போமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சந்திப்போமா - கடிதங்கள் - மின்னூல் வெளியீடு

படம்
  இனிய நண்பர்களுக்கு,  எனது நண்பர் சபாபதி அவர்களுக்கு எழுதிய கடிதங்கள்.. இப்போது மின்னூலாக வெளியிடப்படுகிறது. இந்நூல் கிரியேட்டிவ் காமன் உரிமையின் கீழ் வெளியிடப்படுகிறது. பிடிஎப் வடிவிலும், இபப் வடிவிலும் இந்நூலை நீங்கள் தரவிறக்கிக் கொள்ளலாம். நன்றி.  http://www.mediafire.com/file/r8feeupyb9o0kb1/santhipoma.....pdf/file http://www.mediafire.com/file/aebrelpm9g6toue/santhipoma.....epub/file  

இஸ்ரோ சிவனும், மத அடையாளமும் - சந்திப்போமா - கடிதங்கள்

படம்
மத அடையாளங்கள் அவசியமா? அன்புள்ள நண்பர் சபாபதிக்கு , வணக்கம் .   உங்கள் உடல்நலமும் , மனநலமும் சிறந்தோங்க வாழ்த்துக்கிறேன் . நான் தனிப்பட்ட முறையில் இறைநம்பிக்கையோடு இருக்கிறேன் . ஆனால் மக்களின் பிரதிநிதியாக இருந்தால் , அவர்கள் முன் தோன்றும்போது மத அடையாளங்களைத் தவிர்ப்பேன் . மக்கள் நம்மை அணுக நாமே மத அடையாளங்களை சுவராக கட்டக்கூடாது . இது என்னுடைய கருத்து . இஸ்லாமியரோ , கிறிஸ்துவரோ வருகையில் காஞ்சி மகாபெரியவரின் புகைப்படத்துடன் அனைத்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒருவர் இருந்தால் அது சங்கடமான சூழலை உருவாக்கும் என்றே நான் நினைக்கிறேன் . குறிப்பிட்ட இன மக்களின் மீதான தாக்குதல் சூழல் நடந்து வரும் நிலையில் இதுபோன்ற அடையாளங்கள் மக்களை இன்னும் தனிமைப்படுத்தும் . அறிவியல் துறையில் இதுபோன்ற விஷயங்கள் புகுந்துவிட்டன . நான் தங்களிடம் போனில் இதுபற்றி பேசினேன் . அது பெரிய விஷயமில்லை என்றீர்கள் . எனக்குப் அப்படிப்படவில்லை . இஸ்ரோ சிவன் மக்கள் வரிப்பணத்தில் ஆராய்ச்சியைச் செய்யும்போது மாதிரிகளை கடவுளின் பாதங்களில் வைத்து சரணடைவது சரியானதல்ல . சேட்டன் பகத்தின் இந்தியா பாச

நட்பிலும் வேறுபாடுகள் உண்டு! - சந்திப்போமா... கடிதங்கள்

படம்
6 அன்புத்தோழர் சபாவுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உங்கள் வேலையிலும் சிலசமயங்களில் சாதி சார்ந்தும் வேலை சார்ந்தும் பிரஷர் இருக்கலாம் . எனக்கு தினசரி பன்னிரண்டு பக்கம் செய்யவேண்டும் . பிரஷர் குப்பென எகிறாதா ? அதுவும் பத்திரிகை தொடங்கும்போதிலிருந்தே இருப்பவர்கள்தான் என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் . ஆனால் எதையும் புதிதாக கற்றுக்கொண்டுவிடக்கூடாது என்று கவனமாக இருக்கிறார்கள் . தென்னைவோலையில் சிறுநீர் கழித்தால் வரும் சத்தம் போல , அவ்வளவு பேச்சு ... அப்புறம் வேலையில் எங்கே மனம் செல்லும் ? தின்பதையும் ஊர் சுற்றுவதையும் தாண்டி எதையும் யோசிக்காத ஆன்மாக்கள் . இப்போதே ஊதிய உயர்வு பேச்சுக்களை தொடங்கிவிட்டார்கள் . எடிட்டர் தண்ணீர் ஒட்டாத விம் பாராய் நழுவுகிறார் . அவரிடமும் மீட்டிங்கை நடத்தினார்கள் . விளைவு , அனைவருக்கும் சிறப்பான செய்தியை பத்திரிகை அதிபர் அனுப்பி அதிரவைத்தார் . அப்புறம் மூச்சு வரணுமே ? சினிமாதான் சிறிது ஆசுவாசம் தருகிறது . ப்ரௌச்செவரு என்ற தெலுங்கு படத்தைப் பார்த்தேன் . ஸ்ரீவிஷ்ணுவுக்கு முக்கியமான படம் . இயக்குநர் விவேக் ஆத்ரேயா திரைக்கதையில் பின்னி இருக

என்னை மேம்படுத்திக்கொள்ள இதுவே சரியான நேரம்!

படம்
Canva.com அன்புத் தோழர் சபாபதி அவர்களுக்கு , வணக்கம் . அடுத்தடுத்த பதவியுயர்வுகள் , ஊதிய உயர்வு ஆகிய விஷயங்கள் 2019 ஆம் ஆண்டு நிறைவேற வாழ்த்துகிறேன் . இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் காமிக்ஸ்கள் , மலையாளச் சிறுகதைகள் ஆகியவற்றை வாங்கினேன் . சிறுகதைகளை இனிமேல்தான் படிக்கவேண்டும் . அலுவலகங்களில் சிபாரிசு மூலம் வந்தவர்களின் அழும்புகளைத் தாங்க முடியவில்லை . வேலைகளையும் கற்றுக்கொள்ளாமல் அதைச் சமாளிக்க சில முக்கியப்புள்ளிகளை வளைத்து ... பிரமிக்க வைக்கிறது பிழைப்புத் தந்திரங்கள் . மற்றவர்களுக்கும் சேர்த்து நானே அதிகம் யோசிக்கிறேன் . எனக்கு அமைப்புகள் வீழ்ந்து நொறுங்குவது பெரும் மனவலியைத் தருகிறது . நான் வேலை செய்யும் நிறுவனமே செங்கல் செங்கல்லாக பிரிக்கப்பட்டால் ... கஷ்டம்தானே ? புதிய அலுவலகத்திற்கு ஏற்றபடி உன்னை மாற்றிக்கொள் என நண்பர் ஏறக்குறைய மிரட்டினார் . எனவே பேரகான் ஆபீஸ் வரிசையில் செருப்பு தேடிக்கொண்டி வாங்கினேன் . இதற்கு முன்பு எளிமையாக ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டிருந்தேன் . ஏசியில் வேலை . எனக்கு கால் படுபயங்கரமாக வேர்க்கும் . எதற்கு லெதர் செருப்பு , வீண்செல