இடுகைகள்

குங்குமம் - பிட்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்ஸ்டாகிராமிலும் விராட் அதிரடி!

படம்
பிட்ஸ் ! ஆகாயத்தில் தீ ! சீனாவின் குவாங்சூ டூ ஷாங்காய் செல்லும் விமானத்தில் பேக்கேஜ் அடுக்கில் திடீர் புகை . செக் செய்தால் பயணியின் போன் பவர்பேங்கில் தீ . ஆகாயத்திலேயே சாவதா என பீதியான பயணிகள் தண்ணீர் , ஜூஸ் என கலந்து கட்டி தீ அணைக்கும் அடிக்கும் வீடியோ இணையத்தில் கிறுகிறு ஹிட் . பாராசூட் வினை ! ஸ்வீடனில் 246 அடி பில்டிங்கின் 24 ஆவது மாடியிலிருந்து இளைஞர் அட்வென்ச்சருக்காக ஜம்ப் செய்தார் . ஆனால் பாதிவழியில்தான் பாராசூர் விரியாமல் பெயிலானது தெரிந்தது . அப்புறமென்ன ? தலையணை பறந்த வடிவேலு கணக்காக தாறுமாறாக பறந்து சிற்சில காயங்களோடு உயிர்பிழைத்திருக்கிறார் இளைஞர் என்பதுதான் மருத்துவ மிராக்கிள் . அவகாடோ லவ் ! 2016 ஆம் ஆண்டு பென் ஸ்டீவன் தன் காதலி டெய்லர் செல்பிக்கு அவகாடோ பழத்தில் வைர ரிங் கொடுத்து காதலை ஓகே செய்தார் . 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு லவ்வர்ஸ் டேக்கு பிறகு அத்தம்பதியின் புரோபோசல் ஐடியா , இன்ஸ்டாகிராமில் மாஸ் ஹிட் . இங்கிலாந்தின் அஸ்டா அங்காடியில் அவகாடோ பழம் , காதல் சொல்லவே ஸ்பெஷலாக விற்கிறது . திருடருக்கு காஃபி !