பள்ளி மாணவர்களை கிராமங்களிலிருந்து வேன் வைத்து பள்ளிக்கு அழைத்து வரும் தலைமை ஆசிரியர்!
தெருவிளக்கு பெரும்பாலான அரசு பள்ளிகளில் மேல்சாதி ஆசிரியர்கள் பணியில் இருப்பார்கள். இவர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களை அவர்களின் தந்தை செய்யும் தொழில்களை அடிப்படையாக வைத்து, அதே விஷயங்களை பள்ளிகளில் செய்ய வற்புறுத்தி அடிப்பதுண்டு. தலித் என்றால் துப்புரவுப் பணி. டீக்கடை வைத்திருக்கிறார்கள் என்றால், பள்ளியில் டீயைப் போட மாணவிகளை, கட்டாயப்படுத்துவார்கள். இதுபோன்ற சல்லித்தனமான ஆட்களைக் கடந்து மிகச்சில ஆசிரியர்களே சாதி/மத/இன மனநிலையைக் கடந்து ஆசிரியர் என்ற பணியைப் புரிந்து அதற்கேற்ப அர்ப்பணிப்பாக நடந்துகொள்கிறார்கள். அப்படியான ஒரு ஆசிரியர் திருச்செல்வராஜா. இவர், தனது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக சொந்த காசைப்போட்டு இரண்டு வேன்களை வாங்கி, இயக்கி அவர்களை கிராமத்திலிருந்து பள்ளிக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறார். பத்து கி.மீ. தூரத்திற்கு ஐந்து முறை செல்லும் வேன்கள், மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி வருகின்றன. இதற்கான செலவுகளை தலைமை ஆசிரியர் ராஜாவே பார்த்துக்கொள்கிறார். ஓட்டுநருக்கான சம்பளத்தை மாணவர்களும் இயன்ற வகை...