இடுகைகள்

காது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் 2023 செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் - லெக்ஸி ஹியரிங், மாவென் கிளினிக், சர்க்கிள்

படம்
  மாவன் கிளினிக் லெக்ஸி ஹியரிங் சர்க்கிள கிரிப்டோகாயின் இன்டிரிபிட் டிராவல் மாசு இல்லாத சுற்றுலா அறிவியல் ரீதியாக மாசுபாடு ஏற்படுத்தாத சுற்றுலா நிறுவனம். பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு விமானம் இல்லாத பயணத்தின் மூலம் மக்களை கூட்டிச் செல்கிறார்கள். சுற்றுலா செல்லும் பயணிகள், போகுமிடமெல்லாம் மதுபான புட்டிகளை உடைப்பது, உணவு கொண்டு செல்லும் பிளாஸ்டிக் கவர், பெட்டிகளை அங்கேயே தூக்கிபோட்டுவிட்டு வருவது இயல்பானது. ஆனால், இந்த நிறுவனம் இதுபோல மக்கள் சுற்றுலா செல்வதை மாற்றியிருக்கிறது. இதன் இயக்குநர், ஜேம்ஸ் தோர்ன்டன். இன்டிரிபிட் டிராவல் நிறுவனம் தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. #intrepid travel     வார்ட்சிலா தூய ஆற்றலுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழித்து வருகின்றன. சோலார், காற்றாலை என ஏகத்துக்கும் செயல்பாடுகள் தொடங்கி நடந்து வருகின்றன. காலநிலை மாற்றம் தீவிரமாக உள்ள காலத்தில் சூரிய வெளிச்சம் கிடைக்காதபோது, காற்று தீவிரமாக வீசாதபோது என்ன செய்வது? அப்போது கிடைத்த சேகரித்த மின்னாற்றலை சேமிக்கும் வழிவகைகளை வார்ட்சிலா நிறுவனம் வழங்குகிறது. மின்சாரத்தை சேமிப்பதற்கான மையங்களை

காது கேட்காத மாற்றுத்திறனாளியை காதலிக்கும் இளம்பெண்ணின் வாழ்க்கை! - சைலன்ட் - ஜப்பான்

படம்
  சைலன்ட் டிவி தொடர் ஜப்பான் - ஜே டிராமா  ராகுட்டன் விக்கி ஆப்   பள்ளிப்பருவ காதல்கதை. பள்ளிப்பருவத்தில் உற்சாகமாக தொடங்கும் காதல்,   பின்னாளில் காதலனின் உடல்நலப் பிரச்னையால் பிரிந்து மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக தொடங்குகிறது. அவர்களின் காதல் மீண்டும் தொடங்கியதா, ஒன்று சேர்ந்ததா என்பதே கதை. ஒரு எபிசோட் ஒரு மணிநேரம் என மொத்தம் பதினொரு எபிசோடுகள் உள்ளன. காசு கட்டினால் விளம்பரத்தொல்லையின்றி பார்க்கலாம். இல்லையென்றால் விளம்பரத்தைப் பார்க்கவும் ஏராளமான டேட்டா செலவாகும். சௌக்கு என்ற சகுரா, பள்ளியில் படிக்கிறார். இவரை மினாட்டோ என்ற மாணவர் ஆவோவா என்ற தனது தோழிக்கு அறிமுகப்படுத்துகிறார். அவளுக்கு சகுராவைப் பார்த்த உடனே காதல் தோன்றிவிடுகிறது. சகுராவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.   எப்போதும் பாப் பாடல்களை கேட்டுக்கொண்டே இருப்பான். அவனுக்கு ஸ்பிட்ஸ் எனும் இசைக்குழுவின் பாடல்கள் இஷ்டம். அதுவரை அப்படி பாடல்கள் கேட்காத ஆவோவா மெல்ல இசையின் வசமாகிறாள். சௌக்குவிடம் இரவல் வாங்கும் பாடல்களைக் கேட்டுக்கொண்டே தனது படிப்பைத் தொடர்கிறாள். வகுப்பறையில் வெளியில் என சகுராவும் ஆவோவாவும

12 வயதில் இசைத்த பீத்தோவன்!

படம்
  1.இசைமேதை பீத்தோவன் பிறந்த ஆண்டை பலரும் 1772 என்று குறிப்பிடுவார்கள். ஆனால் அவர் பிறந்த ஆண்டு 1770, டிசம்பர் 17 ஆம் தேதி.  2.1783 ஆம் ஆண்டு பீத்தோவன் தன் இசைக்குறிப்புகளை இசைத்தார். அப்போது அவரின் வயது 12.  3.பீத்தோவனின் காது கேட்கும் திறன் 25 வயதில் குன்றத் தொடங்கியது. 46 வயதில் காது கேட்கும் திறனை முழுமையாக இழந்துவிட்டார் . அந்நிலையிலும் இசைக்குறிப்புகளை எழுதி வந்தார்.  4. பதினொரு வயதிலிருந்து குடும்பத்திற்காக உழைக்கத் தொடங்கினார். இசைக்கலைஞர்   கிறிஸ்டியன் காட்லப் நீஃபே (Christian Gottlob Neefe) என்பவரின் உதவியாளராகச் சேர்ந்து உழைத்தார்.  

நம் காதுகளை மட்டும் தூங்கும்போது கூட மூடமுடிவதில்லை ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி கண்களை மூடுவது போல காதுகளை நாம் ஏன் மூடிவிட முடிவதில்லை? கண்களை மூடினால் காது விழித்திருக்கும். அப்போதுதான் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். இல்லையெனில் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நாம் எப்படி அறிந்துகொள்வது? கண்களை மூடிக்கொண்டு தூங்கினாலும், வீட்டுக்குள் யாரே உள்ளே வருவதை எப்படி அறிகிறோம்- காதுகள் திறந்திருப்பதால்தான். இது ஆதிகாலத்திலிருந்து நமக்கு இயற்கை கொடுத்துள்ள ஃபயர்வால் என்று நினைத்துக்கொள்ளுங்கள். எந்த வருத்தமும் இருக்காது. அனைத்து விலங்குகளுக்கும் இந்த அம்சம் பொருந்தும். ஆனால் சீல் போன்றவை நீந்தும்போது மட்டும் அதன் காதுகளை மூடிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நன்றி - பிபிசி 
படம்
மிஸ்டர் ரோனி நாய்கள் எப்படி மனிதர்களை விட அதிகளவிலான ஒலியை கேட்கும் விதமாக உருவாகிறது? நாய்கள் அப்படி திறன்களைப் பெற்றிருப்பதால்தான் நாம் அதனை காவல் வைத்துவிட்டது நிம்மதியாக தூங்க முடிகிறது. பயன் இல்லாத எந்த விஷயத்தையும் மனிதர்கள் வைத்திருப்பது இல்லை. அப்போது பூனை என்கிறீர்களா? பூனை எஜமானன் போல. தனிமையை யார் வைத்து நிரப்பினால் என்ன? பெண்களுக்கு பூனை பிடிக்கும். அதனால் வளர்க்கிறார்கள். மனிதர்களால் 20 கிலோஹெர்ட்ஸ் ஒலியைக் கேட்க முடியும் என்றால், நாய்களால் 45 கிலோ ஹெர்ட்ஸ் அளவிலான ஒலியைக் கேட்க முடியும். பொதுவாக விலங்குகளால் மனிதர்களை விட அதிக திறன் கொண்ட செறிவான ஒலியைக் கேட்க முடியும். என்ன காரணம்? உலகில் பிழைத்திருக்க வேண்டுமே? அதற்காகத்தான். இயல்பாகவே நாய்களுக்கு அமைந்துள்ள தலை அமைப்பு மனிதர்களை விட சிறியது. மேலும் இதன் காது அமைப்புகளும் நம்மிலிருந்து மாறுபட்டவை. இதனால் இவற்றின் ஒலி கேட்கும் சக்தியும் அதற்கேற்ப அமைந்துள்ளது. நன்றி - பிபிசி