இடுகைகள்

கிறிஸ்துமஸ் 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மது, மட்டன் கொண்ட டின்னருக்குப் பிறகு?

படம்
கிறிஸ்துமஸ் டின்னர் சாப்பிட்டால் என்னாகும்? ஷாம்பெய்ன், விஸ்கி, ரம், பிளம் கேக்குகள், பிரியாணி என கலந்துகட்டி அடித்திருப்பீர்கள். இதனால் வயிற்றுக்குள் என்ன நடக்கும் என்று தெரிந்தகொள்ள ஆசையா? இதோ.. 5 நிமிடங்கள் மது, உங்கள் ரத்தத்தில் தேளின் விஷம் போல வேகமாக ஏறும். முதல் சிப்பில் இந்த மாற்றம். பெரும்பாலும் மதுவை சிறுகுடல் ஏற்றுக்கொள்ளும் பின்னரே அவை வயிற்றுக்குள் சேகரமாகும். மது ரத்தசெல்களின் செயல்திறனை குறைக்கின்றன. இதனால் வயிறு மெல்ல சூடாகிறது. ஒரே நாளில் கேக்,பிரியாணி, மது என வெளுப்பது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. ஆனால் என்ன கொண்டாட்டம் என்பதே பெரும்பாலும் சாப்பாடுதானே? 20 நிமிடங்கள் வயிற்றின் கொள்ளளவு என்பது ஒரு லிட்டர்தான். எனவே வெறித்தனமாக பஃபே விருந்தில் வேட்டையாடி, மாஸா குடித்து தீர்த்தாலும் மூத்திரம் முந்திக்கொண்டு வந்துவிடும். ஒருமணி நேரத்திற்கு ஒரு லிட்டம் சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுகிறது. இதுபோன்ற மொடாக்குடி விருந்துகளில் ஹரி படத்தில் பிரியன் கேமரா சுற்றுவது போல வேகமாக நடைபெறும். எனவே மூச்சு வாங்கியபடி வெஸ்டர்ன் கக்கூசில் குடலை கழுவ வேண்டி இருக்க