ஊபா சட்டத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தடுமாறும் ஒன்றிய, மாநில அரசுகள்!
ஊபா சட்டத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தடுமாறும் ஒன்றிய, மாநில அரசுகள்! ஒன்றிய, மாநில அரசுகள் தங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கிற, தலித், ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்கு பாடுபடுகிற போராளிகள் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகின்றன. அதில் முக்கியமானது பயங்கரவாத சட்டமான ஊபா. இச்சட்டத்தைப் பற்றி இடதுசாரி கட்சிகள் அளவுக்கு, அதிகம் பேசியவர்கள் யாரும் கிடையாது. அவர்களின் நாளிதழ், ஊடகங்கள் அனைத்திலும் ஊபா சட்டம் பற்றிய செய்திகள் இன்று வரைக்கும் வெளியாகி வருகின்றன. ஊபா என்பது சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம். எப்போதும்போல, அரசியல் கட்சிகள் இதை தம் சொந்த சுயநலனுக்கு பயன்படுத்திக்கொண்டு மனித உரிமை போராளிகளை, திட்டங்களை கேள்வி கேட்பவர்களை சிறையில் அடைக்க பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் இந்த வழக்குகளில் குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கித்தருவதற்கு அரசு புலனாய்வு அமைப்புகள் விரும்புவதில்லை. இதனால் வழக்குகளில் இருந்து வெளியே வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசுகள், ஒருவரை உளவியல் ரீதியாக அச்சுறுத்தவே இதுபோன்ற அ...