இடுகைகள்

ஹான்ஸ் ஐசென்ஸ்க் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவரின் புத்திசாலித்தனம் மரபணு அல்லது கல்வி மூலம் தீர்மானிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய ஆய்வு!

படம்
  ஒருவர் பிறக்கும்போது மேதாவியாக இருக்கிறாரா, பிறந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டு வஸ்தாது ஆகிறாரா என்ற பஞ்சாயத்து இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. 1900களில் மேதாவிகளாக இருந்த லியானார்டோ டாவின்சி, பீத்தோவன் பற்றி மக்கள் பல்வேறு கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். புத்திசாலித்தனம் ரத்தம் மூலம் உருவாகி வளருகிறதா, அல்லது பிறந்து சூழ்நிலையில் உள்ள அம்சங்கள் மூலம் கல்வியால் அறிவு பிரகாசிக்கிறதா என்று முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருந்தனர். அரிஸ்டாட்டில், மேதாவித்தனமும்,கிறுக்குத்தனமும் ஒன்றுக்குள் ஒன்று என்று கருத்து கூறினா். இதெல்லாம் மரபணு சார்ந்தவை, ஒன்றுடன் ஒன்று கலந்தவை என எழுதினார்.  ஜெர்மனியைச் சேர்ந்த உளவியலாளர் ஹான்ஸ் ஐசென்ஸ்க், மேதாவித்தனம், கிறுக்குத்தனம் ஆகியவற்றை ஆராயாமல், முழு மனிதனை எந்த விஷயம் உருவாக்குகிறது என்பதில் மனதை செலுத்தினார். ஒருவரின் அறிவுத்திறன் 165 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தால் அவரை மேதாவி என அறிவியல் அழைக்கிறது. இதேபோல ஒருவர் செய்யும் செயல்களில் மனநல குறைபாடுகளின் அறிகுறிகள் தெரிந்தால் அவரை மன நோயாளி என முத்திரை குத்தி சிகிச்சை செய்கின்றனர். ஹான்ஸ் உருவாக்கிய பெ