புனைவு ஏற்படுத்திய வலி! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்
எ மிராக்கிள் - துருக்கி தொடர் தமிழில் புனைவு ஏற்படுத்திய வலி! 25.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம் நலமாக இருக்கிறீர்களா? அலுவலகம் விட்டு தங்கியிருக்கும் அறைக்கு வரும்போது மழை பிடித்துக்கொண்டது. இப்போது வரை பெய்துகொண்டே இருக்கிறது. அதன் பின்னணி இசையுடன்தான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்றுதான் எ மிராக்கிள் என்ற துருக்கி தொடரின் இறுதி அத்தியாயத்தைப் பார்த்தேன். இந்த தொடர், தென்கொரியாவில் வெளியான குட் டாக்டர் என்ற டிவி தொடரைத் தழுவியது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவக்கல்வி கற்ற இளைஞர், அறுவை சிகிச்சை வல்லுநராக மாற முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை. ஆட்டிசம் பாதிப்பு, இவர்களை எப்படி கையாள்வது, பெற்றோர் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும், இவர்களின் அறிவுத்திறன், பிறருடன் உரையாடும்போது இவர்களை புரிந்துகொள்வது எப்படி என நிறைய விஷயங்களை காட்சிகளுக்கு இடையில் புரிந்துகொள்ளும்படி அமைத்திருக்கிறார்கள். உங்களுக்கு இதுபோன்ற டிவி தொடர்களில் விருப்பமிருக்காது. முழுக்க வெளிவயமானவர். உள்வயமான எனக்கு கொரியத் தொடரை ரீமேக் செய்த துருக்கி தொடர் பிடித்திருந்தது. டாக்டர் அலி வெஃபா என்