விலையை குறைக்கவே குறைக்காத புத்தகக் கடை! - கடிதங்கள்

 










அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம். 

நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். இப்போதுதான் வடபழனி சென்று வந்தேன். ஃபோரம் விஜயா மாலில் உள்ள கிராஸ்வேர்ட் கடைக்கு சென்றேன். அங்கு ஷோபாடே எழுதிய கட்டுரை நூலை வாங்கினேன். 2008இல் வந்த நூலைக் கூட விலை குறைக்காமல் விற்கும் துணிச்சலான நிறுவனம். இன்னும் கொஞ்சநாளில் நூல்களை விட ஃபேன்சி பொருட்களை விற்கத் தொடங்கிவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நூல்களின் எண்ணிக்கைக்கு சமமாக பேக்குகள், பேனாக்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளன. 

இந்த வாரம் முழுக்க எந்த நூலையும் ஆர்வமாக படிக்க முடியவில்லை. எ மிராக்கிள் என்ற துருக்கி தொடரை எம்எக்ஸ் பிளேயர் ஆப்பில் பார்த்தேன். இந்த தொடர் தென்கொரிய தொடரான குட் டாக்டரின் ரீமேக்தான். துருக்கியில் அதனைப் பார்ப்பதற்கு முக்கியமான காரணம், அதன் நாயகனாக நடித்து ஆட்டிச பாதிப்பை நமக்கு புரிய வைத்துள்ளார். நிறைய காட்சிகளில் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. புனைவுதான். ஆட்டிச பாதிப்பை கட்டுப்படுத்தி நல்ல அறுவை சிகிச்சை நிபுணராக மாறினார் என்பதே கதை. தரவிறக்கி வைத்துள்ள கட்டுரை நூல்களை படிக்கவேண்டும் என நினைக்கிறேன். விரைவில் அதனை வாசிக்கத் தொடங்கவேண்டும். 

நன்றி! 

ச.அன்பரசு

17.8.2021


கருத்துகள்