இந்தியர்கள் அனைவருமே காமசூத்திரத்தை படிக்கவேண்டும்! - எழுத்தாளர் ஸ்ரீமொயி பியு குண்டு
ஸ்ரீமொயி பியு குண்டு
எழுத்தாளர்
எழுத்தாளர் ஸ்ரீமொயி பியு குண்டு |
சீதா கர்ஸ் என்ற நூலை எழுதுவதற்கு என்ன காரணம்? சிற்றின்பம் என்பது த த்துவம், உடல் சார்ந்த தூண்டுதல், ஆன்மிக அனுபவம் என்று கூறலாமா?
இந்த நூல் பெண்ணியம் சார்ந்த சிற்றின்ப நூல். இது என்னுடைய இரண்டாவது நூல். மும்பையில் பத்திரிகையாளராக வேலை செய்தபோது சீதா கர்ஸ் நூலுக்கான ஐடியா தோன்றியது. இந்த நேரத்தில் நான் ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் அவரை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் துணிகளை காயப்போடுவது, கூண்டில் உள்ள கிளிகளுக்கு உணவிடுவது ஆகியவற்றை செய்துகொண்டிருப்பார். அப்போது அவரின் ஜாக்கெட்டில் உள்ள பட்டன்கள் போடப்படாமல் இருப்பதைக் கூட கவனிக்காமல் இருப்பார். இதுதான் சீதா கர்ஸ் நூலிலுள்ள மீராவின் பாத்திரத்தை உருவாக்க காரணமாக இருந்தது.
இந்த நாவலுக்கு எதற்கு சீதாவின் சாபம் என்று பெயர் வைத்தீர்கள்.
இதில் சீதாவுக்கு எந்த இடமுமில்லை. சீதா, ராமனின் மனைவி. அவளை அவளது வாழ்வில் விரும்பிய ஒருவன் ராவணன்தான். அவனும் கூட அவளை கடத்திச்சென்று வைத்திருந்தாலும் அவளை தொடக்கூட இல்லை. ஆனால் அந்த ஆசைக்காக அவன் கொல்லப்பட்டான். சூர்ப்பனகை பாத்திரம் தனது உறவு விருப்பத்தை வெளிப்படையாக சொன்னதற்கு மூக்கு அறுக்கப்பட்டது. சீதை தனது தூய்மையை அறிவிக்க அக்னி பிரவேசம் செய்ய நேர்ந்தது. மேனகா கூட தனது விருப்பத்தை ஆசையை சொல்லியிருந்தால் அவளுக்கும் சீதாவின் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
எதற்கு பெண்களின் சிற்றின்பம் பற்றி பேச வேண்டும்?
நான் இந்தியாவில் வாழும் திருமணமான பெண்களின் பாலுறவு விழைவு பற்றி பேச நினைத்தேன். இங்கு ஆபாசத்தளங்களில் சவிதா பாபி பற்றி தெரியாதவர்கள் குறைவு. இந்த பெண்ணின் பாத்திரம், தனக்கு விருப்பமான ஆண்களோடு உறவு கொள்ளும் தன்மை கொண்டது. இதேபோன்ற தன்மையில்தான் மீரா பாத்திரம் உருவானது. எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் இந்த வகையில் எனக்கு அறிமுகமானார். அவர் திருமணமானவர். அவருடைய கணவருக்கு பாலுறுப்பில் விறைப்புத்தன்மையில் அதாவது, எரக்டைல் டிஸ்பங்க்சன் பிரச்னை இருந்தது. இதை மறைக்க அவர் தனது மனைவியை கொடுமைப்படுத்த தொடங்கினார். இதை சமாளிக்க அவர் மற்றொரு ஆணின் தயவை நாடினார். அப்படித்தான் அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனாலும் அந்தப் பெண்ணின் பாலுறவு ஆசை என்பது தீராமல் இருந்தது. 2005ஆம் ஆண்டு மும்பையில் வெள்ளம் வந்த காலத்தில் அவர் லக்ஷ்மன் ரேகையை தாண்டி வெளியே வந்துவிட்டார். அவர் பின்னர் பார்க்கும்போத இருட்டான இடத்தில் வாழ்ந்து வந்தார். அவருடைய வாழ்க்கை நன்றாக இருந்ததா என்று தெரியவில்லை. அவருக்கு மனம் விரும்பியபடி காதலன் அமைந்தாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்த நூலை எழுதும்போது வேறு நூல்கள் என்னென்ன படித்தீர்கள்?
ஜெயதேவின் கீதகோவிந்தம், கமலாதாஸ், இஸ்மத் சுக்டாய் ஆகியோரது நூல்களை படித்தேன். இவர்கள் அனைவருமே பெண்களின் பாலியல் விழைவு பற்றி எழுதியவர்கள். கடந்துவந்த காதல், பிறரின் மீது ஈர்ப்பு ஆகியவற்றை பெண்ணிய நோக்கில் எழுதியவர்கள்.
பெண்களின் பாலுறவு விழைவு, ஆபாசப்படம் இதில் என்ன வேறுபாடு உள்ளது?
இந்தியர்கள் பெரும்பாலும் ஆபாசப்படம் வழியாகவே பெண்களின் உடல்களை நிர்வாணமாக பார்க்கிறார்கள். இதனால் பாலுறவு விழைவு என்பதை அவர்கள் மனப்பூர்வமாக உணர்வதில்லை. எனவே, காமசூத்திரம் என்பதை அவர்கள் முழுமையாக வாசிக்கவேண்டும். அதில்தான் பிற பாலினத்தவரை எப்படி காதலிப்பது, மரியாதையோடு நடத்துவது, மகிழ்ச்சி, காதல் மொழிகள் பேசுவது, உடலின் தன்மை ஆகியவற்றைப் பற்றி புரிந்துகொள்ள முடியும்.
சீதாவின் சாபத்தை திரைப்படமாக்கும் எண்ணமுண்டா?
நிறைய வாய்ப்புகள் வந்தன. எனக்கு மலையாள மொழியில் இதனை உருவாக்கினால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. மீரா நாயர், தீபா மேத்தா போன்றோர் காமம் பற்றிய படங்களை சரியாக எடுத்தார்கள். ஆனால் அப்படியான புரிதல் இல்லை என்றால் படம் நாவல் ஏற்படுத்திய உணர்ச்சியை பார்வையாளர்களுக்கு தராது
ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்
ரியா மெஹ்ரோத்ரா
கருத்துகள்
கருத்துரையிடுக