ஊசிமுனை இல்லாத டிஎன்ஏ தடுப்பூசி

 








ஊசிமுனை இல்லாத  டிஎன்ஏ தடுப்பூசி



ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸைடஸ் கெடில்லா நிறுவனமும், ஒன்றிய அரசும் இணைந்து முதல் டிஎன்ஏ தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த ஊசியின் விலை ரூ.1900. இதை செலுத்தும் கருவியின் விலை ரூ.30 ஆயிரம்.  இதனை அமெரிக்க மருந்து நிறுவனமான பார்மா ஜெட் தயாரித்துள்ளது. 

கூர்மையான முனை மூலம் மருந்து உடலினுள் செலுத்தப்படுகிறது. அதிக அழுத்தம் காரணமாக மருந்து உடலினுள் வேகமாக செல்லும். ஊசியே இல்லாத சிரிஞ்ச் கொண்ட கருவியால் 60 சதவீத மருந்தை சேமிக்க முடியும்  என்று கூறுகிறார்கள். இதில் 0.1 மி.லி மருந்து செலவானால் சாதாரண ஊசி மருந்து முறையில் 0.5 மி.லி மருந்து செலவாகிறது. 

ஊசி வேண்டாங்க.. மாத்திரையே போதும் என பயந்து ஓடுபவர்களை புதிய முறை ஈர்க்கலாம். 

ஊசிமுனை இல்லாத இஞ்செக்டர் விலை அதிகமாக உள்ளது. இதனைக் குறைக்க பெருமளவு தடுப்பூசி போடும் திட்டத்தின் பட்ஜெட் அதிகரித்தால் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும். 

ஊசி இல்லாத இஞ்செக்டர் என்பது புதிய கண்டுபிடிப்பல்ல. இதனை 1866ஆம் ஆண்டு கண்டுபிடித்து  பதிவு செய்துவிட்டனர். போலியோ, டைபஸ், அம்மை ஆகிய நோய்களுக்கு இதனை பயன்படுத்தி வந்தனர். 

டிஎன்ஐஇ

அரவிந்தாக்சன்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்