புதிய துப்பறியும் விவகாரத்தை விளையாட்டுத்தனமாக கண்டுபிடிக்கும் ஆத்ரேயா! - கடிதங்கள்

 




சாய் சீனிவாஸ் ஆத்ரேயா 






அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

கடந்த மாதம் எங்களுக்கு பாதி நாட்களிலேயே வீட்டிலேயே வேலை பார்ப்பதற்கான அனுமதியை வழங்கிவிட்டார்கள். அதற்காக சம்பளத்தை முழுக்க கொடுக்க முடியுமா? பாதிதான் கொடுத்தார்கள். இந்த மாதம் முழுக்க விடுமுறை என்று சொல்லிவிட்டார்கள்.  விஸ்வரூபம் எண்ட மூரி வீரேந்திரநாத்தின் நாவல் ஒன்றை படித்தேன். 

ராமகிருஷ்ணன் என்ற முன்னாள் ராணுவ வீரன் ஒருவனை காதலை காரணமாக காட்டி அணு ஆயுத ரகசியங்களை திருடுகிறது தாலிபன். இதைவைத்து சாரங்கபாணி என்ற விஞ்ஞானியை பயன்படுத்தி ஆயுதங்களை தயாரித்துத் தர சொல்லுகிறது. அவனையும் அவன் மனைவியை தந்திரமாக அவனே கொன்றான் என்று தடயங்களை உருவாக்கி மிரட்டுகிறது. இவற்றை ராமகிருஷ்ணன் எப்படி முறியடித்து இந்தியாவை காப்பாற்றுகிறான். தாலிபன் தீவிரவாதிகளை கொல்கிறான் என்பதுதான் கதை. 336 பக்க கதையில்  நாம் இந்தியா, இரான், ஆப்கானிஸ்தான், டெல்லி, பாகிஸ்தான் என பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கிறோம். தமிழ் மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன். 

விறுவிறுப்பான தேசபக்தி நாவல். தொடக்கத்தில் வரும் காதல் உரையாடல்கள் நன்றாக இருக்கிறது. தேசத்தை காப்பாற்றிவிட்டு வரும் ராமகிருஷ்ணனை வரவேற்க காதல் காத்திருப்பதில்லை என்பதுதான் முடிவு. 

தெலுங்கில் ஏஜெண்ட் சீனிவாச ஆத்ரேயா என்ற நவீன் பொலிசெட்டி நடித்த படத்தைப் பார்த்தேன். நாயகன் இயக்குநர் ஸ்வரூப்புடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவல். 

படம் தொடக்கம் முதல் இறுதி வரை காமெடிதான். அதிலும் வாரணாசியில் எரிப்பதற்காக உடல்களைப் பெற்றுச்செல்லும் கும்பல் அதைவைத்து எப்படி சம்பாதிக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள். 

நன்றி!

ச.அன்பரசு

7.4.2020


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்