இடுகைகள்

போலியோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போலியோவை அழித்தது இந்தியாவின் சாதனை!

படம்
போலியோவை அழித்தது இந்தியாவின் முக்கியமான சாதனை! தாமஸ் ஆபிரஹாம் உங்களுக்கு போலியோ பற்றிய அக்கறை ஏற்பட்டது எப்படி? இத்துறை உங்களுக்கு புதிதானது ஆயிற்றே? 2003ஆம்ஆண்டு சார்ஸ் பாதிப்பு பரவியபோது நான் ஹாங்காங்கில் இருந்தேன். அப்போதே அதுபற்றிய நூலை எழுத முயன்றேன். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. சார்ஸைப் போலவேதான் கொரோனாவும் கூட. நுண்ணுயிருகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு என்பது நீண்டது. பழமையான வரலாற்றைக் கொண்டது. நாம் இறந்துபோனாலும் இந்த நுண்ணுயிரிகள் பூமியில் அப்படியே இருக்கும். இப்படி சுழற்சி நடைபெறுவதால் நாம் போலியோவை அழித்துவிட்டோம் என்று சொல்வது சரியானதாக எனக்குப் படவில்லை. பாகிஸ்தானில் இன்னும் போலியோ அழிக்கப்படவில்லை. இது போலியோ அழிக்கும் முயற்சியில் பின்னடைவு அல்லவா? ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் போலியோ இன்னும் அழிக்கப்படாமல் இருப்பது வேதனையான நிகழ்ச்சிதான். 2011ஆம் ஆண்டு போலியோ இந்தியாவில் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. போலியோசொட்டு மருந்து மீதான நம்பிக்கையின்மையும் வளர்ந்து வருகிற ஆபத்து. மேலும் அமெரிக்கா, பாகிஸ்தான், தலிபான் ஆகியோருக்கு இடையில

தடுப்பூசித் திட்டம் வெற்றி அடைந்ததா? இல்லையா?

படம்
pixabay 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இந்திரதனுஷ் எனும் தடுப்பூசித்திட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. 2020க்குள் நூறு சதவீதம் என்பது லட்சியம். இதுபற்றி புள்ளியல் துறை 60 சதவீதம் என கணக்கெடுத்துள்ளது. இல்லை, நாங்கள் 83 சதவீதம் தடுப்பூசித் திட்டத்தை அமல் செய்துள்ளோம் என்று சாதிக்கிறது இந்திய அரசு. முழுமையான தடுப்பூசி குழந்தைக்கு போடுவது என்றால் என்ன? ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காசநோய், கக்குவான் இருமல், டெட்டனஸ் ஆகிய பாதிப்புகள் ஏற்படாமல் காக்க அரசு வழங்கும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதாகும்.  உங்கள் பர்ஸ் பெருசு என்றால் தனியாகவும் இதனை போட்டுக்கொள்ளலாம். இல்லையெனில் அங்கன்வாடி மையம், கிராமங்களில் பால்வாடி சென்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்.  அரசு ஏன் பதற்றமாகிறது என்றால் 2015-16 ஆண்டில் அரசு இதே நிலையில்தான் இருந்தது. அப்போதும் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு அரசு முழுமையாக அளிக்க முடியவில்லை. அறுபது சதவீதம் என்பது அரசுக்கு நிந்தனையாக மாறியது. இதனால்தான் தற்போது 83 சதவீதம் என்ற எண்ணைக் கூறுகிறது. எங்கு பிரச்னை தொடங்குகிறது? தோராய அளவு என்பதில்த

தடுப்பூசி போடுவதில் மந்தம் ஏன்?

படம்
தடுப்பூசி போடுவதில் மந்தம் ஏன்? இந்தியாவில் ஐந்தில் இரண்டு பேர் அதாவது, குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை என இந்தியாஸ்பெண்ட் ஆய்வு தெரிவிக்கிறது. இந்திர தனுஷ் 2.0 என்ற பெயரில் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை இந்திய அரசு அமல்படுத்தி வருகிறது. ஆனாலும் இத்திட்டத்தில் தேக்கம் நிலவுகிறது. டிசம்பர் 2014 ஆம் ஆண்டு தொடங்கிய மிஷன் இந்திர தனுஷ் திட்டம், 2020 ஆம் ஆண்டு 90 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை லட்சியமாக கொண்டது. தற்போது இந்தியா முழுக்க 271 மாவட்டங்களில் 70 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசித் திட்டங்களில் படுமோசமான ரிப்போர்ட் கார்ட்டை வைத்திருப்பது எப்போதும் போல உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள்தான். தடுப்பூசி போடுவது எதிர்க்கவென தனி பிரசாரம் மக்களிடையே பரப்ப ப்பட்டு வருகிறது. இதைத்தாண்டி போலியோ, காசநோய் போன்றவற்றை தடுப்பதில் தடுப்பூசிகளின் பங்கு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தொண்ணூறுகளில் இந்தியாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான தடுப்பூசியின்றி இறந்து வந்தனர். இந்த எண்ணிக்கை