இடுகைகள்

அறிமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனிமையில் உள்ளவர்களை இணைக்கும் நட்பு கம்யூனிட்டிகள்!

படம்
        சமகாலத்தில் நட்பு எப்படி இருக்கிறது? இன்று நட்பு என்பது தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்திலிருந்து அப்படியே தொடர்வதில்லை. அலுவலக நட்பு என்பது பெரும்பாலும் ஆபத்திலும், நமக்கு நாமே குழிவெட்டிக்கொள்வதிலுமே முடியும். எனவே, பெரும்பாலான அலுவலக பணியாளர்கள், வேலையை செய்துவிட்டு வந்து தனியாகவே இருக்கிறார்கள். நட்பு வேறு, திருமண வாழ்க்கை உறவு வேறு. அவர்களுக்கு ஒரே நட்பாக ஸ்மார்ட்போன் உள்ளது. சிலர் புத்தகங்களை கிண்டிலில் படித்துக்கொண்டு பொழுதை ஓட்டுகிறார்கள். என்னுடைய விதியை நானே தீர்மானிப்பேன் என துணிச்சலாக உள்ளவர்கள், பம்பிள் போன்ற ஆப்பை தரவிறக்கி அதன் வழியாக புதிய நண்பர்களை, காதலை தேட முயல்கிறார்கள். டேட்டிங் ஆப் என கூறப்பட்டாலும் அதில் நீங்கள் நண்பர்களையும் தேடலாம். பெறலாம். ஒருவர் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளவரோடு நட்பு சாத்தியமாவதில்லை. குறிப்பிட்ட வட்டாரத்தில் உள்ளவர்களோடு நட்பு பூண முயல்கிறார்கள். அறிமுகமில்லாத நண்பர்கள் எனும்போது உயிருக்கு ஆபத்து, பெண்களுக்கு வல்லுறவு அபாயம், கொள்ளையடிக்கப்படுதல், தாக்கப்படுதல் ஆகிய பிரச்னைகளை சிலர் எ...

நட்பை வளர்த்துக்கொள்ள சில ஆலோசனைகள்!

படம்
  நட்பு நட்பை வளர்த்துக்கொள்ள மேற்குலகில் எப்போதும் போல ஏராளமான நூல்கள் உள்ளன. உண்மையில் மனிதர்கள் தனியாக இருக்கும்போது பல விஷயங்களையும் தானே கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. சுய உதவி, முன்னேற்ற நூல்களின் சாதனை விற்பனை அதைத்தான் விவரிக்கிறது. நட்பை துணையா கொள்ள என்ன செய்யலாம்… அதிர்ஷ்டம் உதவாது நட்பை உருவாக்குவதில் எதிர்பாராத விஷயங்கள், அதிர்ஷ்டம் என்பது உதவும் என ஒரு காலத்தில் மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அது உண்மையல்ல. நட்பு என்பது உருவாக்கப்படவேண்டியது. அது தானாக உருவாகாது என எழுத்தாளர் சாஸ்தா நெல்சன் கூறுகிறார். இவர் ஹவ் டு டீப்பன் ஃபிரண்ட்ஷிப் ஃபார் லைஃப்லாங் ஹெல்த் அண்ட் ஹேப்பினஸ் என்ற நூலை எழுதியிருக்கிறார். நம்பிக்கை அதுதான் எல்லாம் நம்பிக்கையோடு ஒருவரை சந்திப்பது, அவருக்கு சிறு பரிசுகளை அளிப்பது நட்பை புத்துயிர்ப்பு செய்யும் என பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் ஆண்டு ஆய்வு கூறுகிறது. பரிசு என்பதன் கூடவே பாராட்டையும் கூட சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இன்றைக்கு ஒருவரைப் பாராட்டுவதை கூட குழுவாதம் அடிப்படையில் தனக்குப் பிடித்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து வ...

காந்தியை எளிமையாக அறிந்துகொள்ள உதவும் ஆங்கில நூல் - காந்தி எ ஷார்ட் இன்ட்ரொடக்‌ஷன் - ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ்

படம்
  காந்தி ஒரு சுருக்கமான அறிமுகம் ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ்  நூல் மொத்தம் 152 பக்கங்களைக் கொண்டது. இதில் காந்தியைப் பற்றி நாம் என்னென்ன தேவையோ  அவற்றை சுருக்கமாக அறிந்துகொள்ள முடியும். காந்தி நிறைய எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி வெறும் 150 பக்கங்களிலேயே அறிய முடியுமா என்ற அவநம்பிக்கையோடு படித்தாலும் இறுதியில் நாம் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம் என்பதே உண்மை.  நூலில் காந்தியன் அகிம்சை, சத்தியாகிரகம், அவரின் ஆன்மிக அனுபவம், நிர்வாண சோதனை, அரசுக்கு எதிரான போராட்டம், நேர்மை என நிறைய விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அனைத்தும் சுருக்கமாக என்றாலும் சில இடங்களைப் படித்துப் புரிந்துகொள்வது சற்று கடினம்தான். அந்தளவு அவரின் கொள்கைகளை ஆங்கிலத்தில் சுருக்கியிருக்கிறார்கள்.  காந்தி ஒரு சுருக்கமாக அறிமுகம் என்பது தலைப்பிற்கு ஏற்றபடி காந்தியின் அடிப்படைகளை எளிமையாக தெரிந்துகொள்ள உதவுகிறது. ஆனால் இதில் அவரின் ஆன்மிக அனுபவங்கள் பற்றிய பகுதி சற்று புரிந்துகொள்ள கடினமானவை. அதுதவிர மற்ற விஷயங்கள் சிறப்பாக எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.  கோமாளிமேடை டீம்  image pintere...

2022 ஆம் ஆண்டு அறிவியல் நூல்கள்! - நியூ சயின்டிஸ்ட் இதழ் பரிந்துரை

படம்
  தி அன்ஃபெமிலியர் கார்டன் பெஞ்சமின் பெர்சி ஹாடர் அண்ட் ஸ்டப்டன் இதுதொடர் வரிசை நூல். இரண்டு நூலாக வெளியாகிறது. கோள் ஒன்று குறிப்பிட்ட வகை உலோகத்துடன் வருகிறது. இது எப்படி சூழலை மாற்றுகிறது என்பதுதான் நூலின் மையம்.  புளூடோசைன் லூசி கிசிக் ஓரியன் எழுத்தாளர் அணு விஞ்ஞானி. புவி வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். புளூடோ, வேற்றுகிரக இனங்கள் கண்டறிந்தது ஆகியவற்றை பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.  தி கார்டோகிராபர்ஸ்  பெங் ஷெப்பர்ட் ஹாசெட் அப்பாவின் மரணத்தைப் பார்க்கிறார் அவரது மகள். இளம்பெண்ணான அவருக்கு மெல்ல தந்தையின் பொருட்களைப் பார்க்க பல்வேறு புதிர்கள் தெரிய வருகின்றன.  கோலியாத்  டோசி ஒன்யேபுசி டோர்டோட்காம் 2050இல் விண்வெளியில் காலனிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு சென்று வாழ அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பணக்காரர்களுக்கு மட்டுமே அனுமதி. மீதியுள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே நாவலின் முக்கியமான மையம். ட்ரீம்ஸ் பிக்கர் தென் ஹார்ட்பிரேக் சார்லி ஜேன் ஆண்டர்ஸ் டைட்டன் விண்வெளியில் வாழும் புத்திசாலிகள் பற்றிய கதை. இளம்வயதினர், அறிவியல் நாவல் என இரண்டும் கல...

அமெரிக்கர்களின் தனிமையைப் பேசும் நூல்! - நூல் அறிமுகம் ஜூலை மாதம் 2021

படம்
              ரேஷர் பிளேட் டியர்ஸ் எஸ் . ஏ . காஸ்பை தனது மகன்களையும் , தம்பதிகளையும் கொன்ற கொலைகாரர்களை அவர்களின் தந்தை யர் இருவரும் சேர்ந்து எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதுதான் கதை . நிகழ்கால கதையின் நடுவே பழிவாங்குபவர்களின் கடந்தகால வாழ்க்கையு்ம் வந்துபோகிறது . அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் நடைபெறும் வன்முறையான சம்பவங்கள் கொண்ட கதை . கோஸ்ட் ஃபாரஸ்ட் பிக் சுயன் ஃபங்   அப்பா இறந்த பிறகு அவரைப் பற்றிய இறந்த கால விஷயங்களை மகள் எப்படி தெரிந்துகொள்கிறாள் என்பதைப் பற்றி இந்த நூல் விவரித்துச் செல்கிறது . இந்த கதையில் மகளின் மனதிலுள்ள கேள்விகள் , குடும்பம் , அவளுக்கு கிடைத்த அன்பு பற்றிய ஏராளமான விஷயங்களுக்கு பதில் கிடைக்கிறது . சீக் யூ கிரிஸ்டன் ராட்கே வரலாறு , தனிமை , ஒருவருக்கொருவர் எப்படி தகவல் தொடர்பு கொள்வது என பல்வேறு விஷயங்களை விளக்கி கிராபிக் கட்டுரை நூலாக ஆசிரியர் எழுதியுள்ளார் .

சிறந்த அறிவியல் புத்தகங்கள்!

படம்
30-Second Zoology Edited by Mark Fellowes உலகிலுள்ள விலங்குகளைப் பற்றி அறிவது கடினமான ஒன்று. இந்த நூல் அழகான விலங்குகளின் ஓவியங்களோடு மனதைக் கவருகிறது. ஒரு விஷயத்தைக் கற்க நீங்கள் 30 நிமிடம் செலவு செய்தால் போதும். நூலில் விலங்குகளை 50 பிரிவுகளாக பிரித்து வைத்து விளக்கியிருக்கிறார்கள்.  Our House is on Fire Malena and Beata Ernman, Svante and Greta Thunberg கிரேட்டா துன்பெர்க்கின் அம்மா எழுதியுள்ள நூல். கிரேட்டாவுக்கு எப்படி சூழலின் மீது ஆர்வம் ஏற்பட்டது என்பதை இந்த நூல் விளக்குகிறது. முழுக்க கிரேட்டாவின் சுயசரிதையாக நூல் செல்லாமல், உலகின் மீதான அக்கறை கொண்டதாக எழுத்துகள் இருப்பது வாசிக்க நன்றாக இருக்கிறது. சூழல் அக்கறை கொண்டவர்களுக்கான நூல் இது.  Footprints: In Search of Future Fossils David Farrier எதிர்கால மனிதர்களுக்காக நாம் என்ன விதமான விஷயங்களை விட்டுவிட்டு போகிறோம் என்று இந்த நூலில் கூறியிருக்கிறார் ஆசிரியர். இந்த நூல் நாம் வாழும் வாழ்க்கை, நாம் எப்படி பின்னர் நினைவுகூரப்படவேண்டும் என்பதைப் பற்றிய கவனத்தை ஏற்படுத்துகிறது.  Deat...

புத்தகங்கள் புதுசு! - மொழிகளை அறிவதில் மூளையின் பங்கு!

படம்
இயற்கையில் நாம் அனைவரும் ஒருவரே என்று பல்வேறு ஆதாரங்களைச் சொல்லி விளக்குகிறார் சூழலியலாளர் டாம் ஆலிவர். நம் அனைவரும் தானியங்கியாக சுயமாக இயங்குவதாக தோன்றலாம். ஆனால் அனைவரும் குறிப்பிட்ட விதமாக இணைக்கப்பட்டிருக்கிறோம் என்று  கூறுகிறார் ஆசிரியர்.  நாற்பது ஆண்டுகால நரம்பியல் மருத்துவத்துறையில் தான் சந்தித்த நோயாளிகள் பற்றி எழுதியுள்ளார் டேவிட். நோயாளிகளின் நோய்களோடு இன்றுள்ள உளவியல் பிரச்னைகளையும் இணைத்து எழுதியுள்ளார் ஆசிரியர். உளவியல் பற்றி ஆழமாக தெரிந்துகொள்ள உதவும் நூல் இது.  உண்மையில் மொழிகளை கற்பது என்பது சாதாரணமானதல்ல. அப்படி பல்வேறு மொழிகளை கற்றவரை நாம் அறிவாளி என ஏற்றுக்கொள்கிறோம். ஆல்பெர்ட் காஸ்டா இருபது ஆண்டுகளாக இதுபற்றி ஆராய்ச்சி செய்து தன் முடிவுகளை, அதில் கண்ட ஆச்சரிய விஷயங்களை எழுதியுள்ளார். படித்துப்பாருங்கள்.பிரமித்துபாருங்கள்.  நன்றி - பிபிசி 

இலவச விண்டோஸ் மென்பொருட்கள் உங்களுக்காக....

படம்
இலவச மென்பொருட்கள்! வின்அப்டேட்ஸ் வியூ- winupdatesview விண்டோஸில் கிடைக்கும் அனைத்து அப்டேட்களையும் இந்த மென்பொருள் மூலம் கணினியில் தரவிறக்கிக் கொள்ளலாம். இல்லையெனில் விண்டோசில் அப்டேட்ஸ் மெனுவில் சென்று செட்டிங்குகளை மாற்ற வேண்டும். இந்த மென்பொருள், உங்களுக்கு நிறைய அப்டேட்ஸ்களை வழங்கும். எம்ஐ டெக் இன்போபார் 3 -mitech infobar3 இந்த மென்பொருள் உங்களது கணினியில் சிப், ராம் செயல்பாடு பற்றிய செயல்பாடுகளை தெரிந்துகொள்ளலாம். இதில் கேப்ஸ்லாக், ஸ்கோரல் லாக், நம்ஸ் லாக் பற்றி தகவல்களையும் அறியலாம். கூடுதலாக ராய்டர்ஸ் நிறுவன செய்திகளும் கிடைக்கிறது. பிக்ஸெலிட்டர் Pixelitor 4.2 ஜிம்ப் அளவுக்கு சிறப்பான மென்பொருள் அல்ல. ஆனால் படங்களை ஏராளமான பிரஷ்களை கொண்டு அழகுபடுத்த முடியும். படங்களுக்கு நிறைய எஃபக்டுகளை கொடுத்து அதனை சிறப்பான படமாக மாற்றலாம். நன்றி - கம்யூட்டர்ஆக்டிவ்

புதிய புத்தகம் பேசுது! - தேசியவாதம் நல்லது!

படம்
தி கேஸ் ஃபார்  நேஷனலிசம் ரிச் லோரி உலகெங்கும் தேசியவாதம் வளர்ந்து வருகிறது. இதை வைத்து பல்வேறு வலதுசாரி வாத கட்சிகள் தேர்தலில் வென்று வருகின்றன. அதற்கு காரணம் என்ற என்று ஆசிரியர் லோரி ஆராய்ந்திருக்கிறார். ஏறத்தாழ ட்ரம்பிசம் முதற்கொண்டு அனைத்து தேசியவாதங்களும் நல்லதுதான் என முடிவு செய்து எழுதியுள்ளார் ரிச் லோரி. ஃபீமேல்ஸ் ஆண்ட்ரூ லாங் சூ அதிகம் விரும்பப்படுவதும், வெறுக்கப்படுவதும் பெண்கள்தான். அந்த பெண்களைப் பற்றியதுதான் இந்த புத்தகம். அனைவரும் பெண்கள்தான் என ஆசிரியர் சொல்லுகிறார். எதை வைத்து என்பதை புத்தகம் படித்து புரிந்துகொள்ளுங்கள். ஆபாச படங்களுக்கு எதிரான பெண்கள், பெண்ணியவாதிகள் என பல்வேறு துறை சார்ந்த பெண்களைப் பற்றியும் ஆசிரியர் கவலைப்பட்டு எழுதியிருக்கிறார். இன் டிஃபன்ஸ் ஆஃப் எலைட்டிசம் ட்ரம்ப் 2016 ஆம் ஆண்டு பாப்புலிச சிந்தனைகளைச் சொல்லி அடித்தட்டு அமெரிக்கர்களின் நம்பிக்கையைப் பெற்றார். அதன்பிறகு பேசியே மக்களின் மனதில் நின்றார். அடுத்த தேர்தலிலும் அவர் வெல்ல வாய்ப்புகள் உள்ளன. எப்படி தன்னை தற்காத்துகொள்கிறது மேல்தட்டு வர்க்கம் என ஜோயல் ஸ்டெய்ன் வ...

இந்தவார புத்தக வாசிப்பு!

படம்
ரஷ்யாதான் 1959 ஆம் ஆண்டு விண்கலனை நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அந்நாட்டை முந்தும் வேகத்தில் அமெரிக்கா, மனிதர்களை தயாரித்து நிலவுக்கு அனுப்பியது மிகப்பெரும் சாதனை. இன்றும் நாம் பிஎஸ்எல்வியா, ஜிஎஸ்எல்வியா என தடுமாறும் நிலையில் 1969 ஆம் ஆண்டு துணிச்சலாக கருவிகளோடு மனிதர்களையும் அனுப்பிய அதிபர்  ஜான் எஃப் கென்னடி மற்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் முயற்சிகள், பிரச்னைகள் ஆகியவற்றை அனுபவக்கட்டுரைகளாக பகிர்கிற நூல் இது. வயதாவது என்பது பலவீனமாக பார்க்கும் சமூகம் மேற்கத்தியது. ஆசியாவில் அதனை பெரும் பலமாக, பல்வேறு பொறுப்புகளை கொடுக்க நரைத்த முடி உதவுகிறது. இன்னும் ஐந்தே ஆண்டுகளில் 50 வயது தொடங்கினாலே ஏன், 40 தொடங்கினாலே பெருசு என்று கூறத் தொடங்விடுவார்கள். நிலைமை அந்தளவு மாறியுள்ளது. இச்சூழலில் நாற்பது வயது ஆட்களின் சூழல், மனநிலைமை, அவர்களின் பிரச்னைகள் ஆகியவற்றைக் குறித்து இந்த நூல் பேசுகிறது. உலகில் அதிக விலைக்கு விற்கப்படும் உணவுப்பொருள் ட்ரஃபிள். இது ஒரு பூஞ்சை என்றால் நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள். நூல் முழுக்க பூஞ்சை ஏன் அதிக...