இடுகைகள்

இன்டர்போல் தலைவர்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்டர்போல் தலைவரை மடக்கிய சீனா!

படம்
காவல்தலைவர் மீது விசாரணை! பிரான்சில் இன்டர்போல் தலைவரை காணோம் என சில நாட்களுக்கு முன்னர் புகார் கிளம்பியது. தற்போது சீன அரசு ஊழல் புகாரின் பேரில் அவரை விசாரித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “பொது பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் மெங் ஹாங்வெய், தேசிய மேற்பார்வை கமிஷனின் விசாரணையில் உள்ளார். அவர் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என ஊழல் எதிர்ப்பு கமிட்டி கூறியுள்ளது. அவரது மனைவியுடன் பிரான்சிற்கு சென்ற நிலையில் அவர் விசாரணையிலிருப்பதும், அவரின் ராஜினாமா கடிதம் இன்டர்போல் அமைப்புக்கு அனுப்பபட்டிருப்பதும் பல மர்ம யூகங்களை கிளப்பியுள்ளது.   “நான் அவரை பார்க்கமுடியாதோ என பயப்படுகிறேன்” எனும் மெங்கின் மனைவி கிரேசுக்கு கணவர் அண்மையில் கத்தியின் படம் ஒன்றை அனுப்பி வைத்திருப்பதை பிரான்ஸ் ஊடகங்கள் உலகிற்கு அறிவித்துவிட்டன. 2016 ஆம்ஆண்டு 192 நாடுகள் இணைந்துள்ள இன்டர்போலின் தலைமைப்பொறுப்பை மெங் ஹாங்வெய் ஏற்றார். ஊழல் எதிர்ப்பில் சீனா காட்டும் வேகம் பலரையும் மிரட்டி வருகிறது.