இடுகைகள்

நேர்காணல் -விவசாயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்காணல்: விவசாய வருமானம் அதிகரிக்காது- துஷார் ஷா

படம்
முத்தாரம் நேர்காணல் "ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது சாத்தியமல்ல" -துஷார் ஷா , பொருளாதார அறிஞர் . தமிழில் : ச . அன்பரசு தேசிய நீர்மேலாண்மை கழகத்தின் மூத்த அதிகாரியாக செயல்பட்டு வரும் துஷார் ஷா , விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை செய்துவருகிறார் . சோலார் பம்புகள் மூலம் குஜராத்தின் தண்டியில் செய்யும் நீர்மேலாண்மை திட்டம் உலகிலேயே முதல்முறையாக செயல்பாட்டுக்கு வருகிறது . இதுபற்றி கூறுங்கள் . சோலார் ஆற்றல் பற்றி கூட்டுறவு முறையில் செய்யும் சோதனை முயற்சி இது . இந்தியாவின் மேற்கு பகுதிகள் நீர்வளத்தை அதிகம் பயன்படுத்திவிட்டனர் . மேலும் மின்சாரத்திற்கான மானியத்தையும் அரசியலாக்கி முறைப்படுத்தவில்லை . சோலார் முறையில் பம்புகளை பயன்படுத்தி , மின் மானியத்தை குறைப்பது எதிர்கால திட்டம் . உபரி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு 4.63 காசுக்கு விற்பது இலக்கு . கிஷான் உர்ஜா சுரக்‌ஷா இவம் உதான் மகாபியான் (KUSUM) எனும் திட்டத்தை இந்தியா முழுக்க விரிவுபடுத்த அரசு தயாராக உள்ளதா ? இன்றுவரை விவசாயிகளுக்கு கிடைக்கும் மின