நேர்காணல்: விவசாய வருமானம் அதிகரிக்காது- துஷார் ஷா




Image result for economist tushar shah




முத்தாரம் நேர்காணல்

"ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது சாத்தியமல்ல"

-துஷார் ஷா, பொருளாதார அறிஞர்.

தமிழில்: .அன்பரசு

தேசிய நீர்மேலாண்மை கழகத்தின் மூத்த அதிகாரியாக செயல்பட்டு வரும் துஷார் ஷா, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை செய்துவருகிறார்.

சோலார் பம்புகள் மூலம் குஜராத்தின் தண்டியில் செய்யும் நீர்மேலாண்மை திட்டம் உலகிலேயே முதல்முறையாக செயல்பாட்டுக்கு வருகிறது. இதுபற்றி கூறுங்கள்.

சோலார் ஆற்றல் பற்றி கூட்டுறவு முறையில் செய்யும் சோதனை முயற்சி இது. இந்தியாவின் மேற்கு பகுதிகள் நீர்வளத்தை அதிகம் பயன்படுத்திவிட்டனர். மேலும் மின்சாரத்திற்கான மானியத்தையும் அரசியலாக்கி முறைப்படுத்தவில்லை. சோலார் முறையில் பம்புகளை பயன்படுத்தி, மின் மானியத்தை குறைப்பது எதிர்கால திட்டம். உபரி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு 4.63 காசுக்கு விற்பது இலக்கு.

கிஷான் உர்ஜா சுரக்‌ஷா இவம் உதான் மகாபியான்(KUSUM) எனும் திட்டத்தை இந்தியா முழுக்க விரிவுபடுத்த அரசு தயாராக உள்ளதா?

இன்றுவரை விவசாயிகளுக்கு கிடைக்கும் மின்சாரம் மின்வெட்டு பிரச்னைகளுடன் உள்ளது. சோலார் முறையில் பகலில் பிரச்னையின்றி பாசனம் செய்வதோடு, இதில் உபரி மின்சாரமும் வருமானம்தான். நீர்க்கசிவுகளை குறைப்பதுடன் சொட்டுநீர்பாசனத்தையும் பயன்படுத்துவது நிலத்தடிநீரை காப்பாற்றும். மாநில அரசுக்கும், மின்விநியோக கம்பெனிகளுக்கும் உள்ள மானியச்சுமையான 90,000-95,000 கோடியைக் குறைக்கும். அரசின் திட்டம் அதனை மேற்கொள்ளும் என நம்புகிறேன்.

நீர்மேலாண்மையில் அரசின் செயல்பாடுகள் எப்படி?


நிதி ஆயோக்கின் அறிக்கை, நீரூற்றுகள் நிலத்தடி நீரை உருவாக்குவதை கவனப்படுத்தி இருந்தது. பலுசிஸ்தானில் நிலத்தடி நீராதாரத்திற்கான நீரூற்றுகளை கவனப்படுத்தி காக்க தொடங்கியுள்ளனர். இந்தியாவில் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இதற்கான முன்முயற்சிகள் தொடங்கியுள்ளன. நீரூற்றுகளை மட்டுமல்லாது குளம், ஏரிகள், கிணறுகள் ஆகியவற்றையும் காக்கும் செயல்பாடுகளைத் தொடங்கவேண்டும்.

2022 ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காகும் என பாஜக வாக்குறுதி அளித்ததே? சுற்றுச்சூழல் பிரச்னை, நிலத்தடி நீர் குறைவு என்ற சூழலில் இது சாத்தியமா?

நிலத்தடி நீர் பிரச்னை இல்லாவிட்டாலும் விவசாயிகளுக்கான வருமானத்தை ஐந்து ஆண்டுகளில் இருமடங்காக்குவது சாத்தியமல்ல. மகாராஷ்டிராவிலுள்ள ராலேகான் சித்தி, பிரேவாடி, ஹைவ்ரேபஜார் ஆகிய பகுதிகளிலுள்ள கிராமங்கள் விவசாய முன்னேற்றத்திற்கு எடுத்துக்காட்டுகள்.KUSUM திட்டத்தின் கீழ் 30 லட்சம் சோலார் பம்புகள் பெறப்பட்டால் அதில் 240 ஜிகாவாட் மின்சாரத்தை சேமிக்கலாம். இதன்மூலம் விவசாயிக்கு ஒரு லட்சரூபாய் வருமானம் கிடைக்கும்.

நதிநீர் இணைப்பு மூலம் 35 மில்லியன் ஹெக்டேர்கள், 34 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் எடுக்க முடியும் என்று கூறுகிறார்களே?
இதற்கான திட்டமதிப்பீடு 5.6 கோடி என்பதை விட நான்கு மடங்கு செலவழிக்கவேண்டும்நதிநீர் இணைப்பை பெரிதாக நினைக்காததன் காரணம், இத்திட்டம் நிறைவு பெற 50 ஆண்டுகள் தேவை. அப்போது விவசாயத்துறையின் அடிப்படையே மாறியிருக்கும்.

இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் இரண்டாம் பசுமைப்புரட்சி பற்றி விவாதங்கள் எழுகின்றன. நிலத்தடி நீரும், மழையும் குறைந்துள்ள சூழலில் இம்முயற்சிகள் ஆபத்தானவையாயிற்றே?

இதுபற்றி உறுதியாக எதையும் கூறமுடியாது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நிலத்தடி நீரையே பெரும்பாலும் நம்பியுள்ளன. குஜராத்தில் நிலத்தடி நீர் மட்டும் தொடர்ச்சியாக உயர்ந்துவருவதோடு 2015 ஆம் ஆண்டிலிருந்து விவசாயமும் வளர்ச்சி பெற்று வருகிறது

பிரபலமான இடுகைகள்