புதுமொழி கற்கலாமா?





 See the source image





புதுமொழி கற்கலாமா?

"புதுமொழியைக் கற்க குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்" என்கிறார் schwa fire இதழாசிரியர் மைக்கேல் எரார்டு.

கிராமர் என கிடந்து அலையாமல் திரைப்படங்களை சப்லைட்டிலுடன் பாருங்கள். ஆல்பங்களை பாடல்வரிகளுடன் இசையுங்கள். இதுவும் கற்றல்தான்.

மொழி கற்பது எத்தேவைக்காக என்பதை முடிவு செய்துவிட்டு உணவு, பயணம், இலக்கியம் என அதுதொடர்பான வார்த்தைகளைக் கற்கலாம்.

கற்றது வரையில் மொழியை உரையாடுவது முக்கியம். பட்லர் இங்கிலீஷ் தரம் என மனம் குமையாமல் கற்பது அவசியம்.

மொழியைக் கற்க குழுவாக முயற்சிக்கிறீர்களா? அல்லது தனியாக படிப்பதே சந்தோஷம் என்பது உங்களின் சாய்ஸ்தான். முடிந்தவரை எளிதில் இலவசமாக கிடைக்கும் வசதிகளை பயன்படுத்துங்கள்..கா:www.duolingo.com, http://www.bbc.co.uk/languages 

பிறருடன் பேசி பழகினால் மட்டுமே மொழியைப் பேசுவதில் பாஸ் மார்க் வாங்கமுடியும். மொழியைப் பேச முயற்சிக்கும் முன் காதை 90 சதவிகிதம் பயன்படுத்துங்கள்.

சரளம் என்பது உங்களது தேவை சார்ந்தது. மொழியை கற்கையில் பெறும் மினி வெற்றிகளையும் கொண்டாடிவிட்டு அடுத்த பகுதியை உற்சாகமக படியுங்கள்.


பிரபலமான இடுகைகள்