மரணதண்டனைக் கைதியின் இறுதிநாள் - புத்தக விமர்சனம்
மரணதண்டனைக் கைதியின் இறுதிநாள்
விக்தோர் ஹ்யூகோ
க்ரியா
விலை ரூ.110
மரணதண்டனை விதித்த கைதியின் மனநிலை எப்படியிருக்கும்? அதுதான் விக்தோர் ஹ்யூகோவின் குறுநாவலின் மையம். சிறைச்சாலை சூழல், தான் வாழ்ந்த முந்தைய வாழ்க்கை, உணவு, ஆறுதல் வார்த்தைகள், இருளை கண்களைக் கடந்தும் உணர்தல் என இருளடைந்த வார்த்தைகளின் சேர்க்கையும், வலியும் சூழ்ந்து கைதியை வதைக்கின்றன. அதிலும் இறக்கப்போகிறவனை எதிர்கொள்ளும் சக சிறைக்கைதிகளின் மகி்ழ்ச்சிக் கூக்குரல் மரண தண்டனைக்கைதியை எப்படி பாதிக்கிறது ? சுயநினைவே இழக்குமளவு.
மரணதண்டனை விதிக்கப்பட்டவன் வாழ்க்கையில் இனி சிரமமே படப்போவதில்லை என்று பலர் நினைத்தாலும் அவரவருக்கென கவலைப்பட ்ஒரு வாழ்க்கையும் நிறைவேறாத கனவும் இருக்கத்தானே செய்கிறது? கைதிக்கும் அப்படியொரு வாழ்க்கை இருக்கிறதுï அதில் மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள். அதிலும் கடைசி நாள் தந்தையை சந்திக்கும்போது குழந்தைக்கு தன் தந்தைதான் அவர் என்ற உண்மைகூட தெரியாதிருக்கிறது. அப்பா என்று தெரிவிப்பதை தான் இறக்கும் செய்தியை தன் குழந்தைக்கு அப்பாவாகிய கைதி தெரிவிக்கும் இடத்திலுள்ள குரூர வன்முறை நூலில் வேறெங்கும் கிடையாது. தான் இறப்பதை விட வேகமாக தான் வாழ்ந்த நினைவுகள் பிறரின் மனதிலிருந்து இறந்துபோவது மோசமான ஒன்றுதானே! யார்தான் அதனை தெரிந்தே விரும்புவார்கள். இதுவரை எழுதியது அனைத்தும் இந்நூலை படித்து அதனை எங்கள் குழுவினர் பேசியதும் விவாதித்த விஷயங்கள்தான். எனவே நூலின் வாசிப்பு அனுபவம் என்பது தனித்தனியாக ஒருவர் அந்தரங்கமாக உணரவேண்டியது முக்கியம். அந்தளவு ஒவ்வொரு பக்கத்திலும் வலியைத் தேக்கியுள்ளது விக்டோர் ஹ்யூகோவின் எழுத்து. குமரவளவனின் மொழிபெயர்ப்பில் துல்லியம் கெடவில்லை.
- கோமாளிமேடை டீம்