"குழந்தைகள் எதையும் தூக்கி எறிவதில்லை"
ஒரு படம் ஒரு ஆளுமை! - லிஜி
‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’
வறுமையில் தடுமாறும் நைஜீரிய
அகதி கால்பந்து வீரர் சாமுவேலுக்கு கேரளாவின்
மலப்புரத்தில் பிரபல கால்பந்து அணியில் விளையாட சாமுவேலுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்கிறது. போலி பாஸ்போர்ட்டுடன்
கேரளத்துக்கு வந்து தனது கால்பந்தாட்ட திறமையின் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக்
கொள்ளையடித்து சூடானி என செல்லப்பெயரைப் பெறுகிறார்.
சாமுவேல் அணியின் மேனேஜர்
மஜீத். திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் அலைபாய்கிறார். தாயின் இரண்டாவது
மணத்தில் கிடைக்கும் தந்தைக்கும் மஜீத்துக்கும் சுமூக சூழல் இல்லை. இச்சூழலில்
எதிர்பாராத விபத்தில் சாமுவேலின் கால் உடைந்துவிடுகிறது. சாமுவேலைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு மஜீத்தின் தலையில் விழுகிறது. மஜீத் என்ன
செய்தார்? என்பதை நகைச்சுவையான திரைக்கதையோடு மனித நேயம் மிளிர கவித்துவமாகச்
சொல்கிறது இந்த மலையாளப் படம். இயக்கம் சக்காரியா.
அரவிந்த் குப்தா
கான்பூர் ஐ.ஐ.டியில் பொறியியல் பட்டதாரி
அரவிந்த் குப்தா, குழந்தைகளிடம் அறிவியலைக் கொண்டு செல்ல உயர்பதவிகளைத் துறந்தவர்; நாம் வேண்டாமென்று
தூக்கி வீசும் குப்பைகளிலிருந்து அழகிய பொம்மைகளை உருவாக்குவதில் வித்தகர். குழந்தைகள்
மற்றும் அறிவியல் சம்பந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார். அரவிந்த்
குப்தாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், ஓர்க் ஷாப்புகளும் பிரபலமானவை.
‘‘நாம் எதையாவது
வேண்டாமென்று தூக்கியெறிவது குப்பைகளை அல்ல; உண்மையில் நாம் தூக்கியெறுவது நம் குழந்தைமையை. ஆம்; குழந்தைகள்
எதையுமே தூக்கியெறிவதில்லை. அனைத்தையும் சேமித்து பாதுகாக்க விரும்புகிறது. அப்படி நீங்கள்
தூக்கி எறியும் குப்பைகளுக்குள் மறைந்துள்ள பட்டாம்பூச்சிகளைக் கண்டுபிடித்து குழந்தைகள்
விளையாட தருவதே என் பணி...’’ என்கிற அரவிந்த் குப்தாவிற்கு இவ்வாண்டிற்கான இந்திய அரசின்
பத்ம விருது கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம். தளம்: (http://arvindguptatoys.com/