கல்விசெயல்பாட்டை வாழ்க்கையாக்கிக் கொண்ட பெண்மணி!





Image result for nancie atwell








ஒரு படம் ஒரு ஆளுமை! - லிஜி
Image result for kes movie



கெஸ்

சிறுவன் பில்லியும், அவனது அண்ணனும் வீட்டில் சந்தித்தாலே தீராத லடாய்தான். பில்லியின் அப்பா வீட்டைவிட்டு வெளியேறிவிட, அம்மா கிடைத்த வேலையை செய்துகொண்டு குடும்பத்தை நடத்துகிறாள்.

பார்ட்வேலை  செய்துகொண்டே பள்ளியில் படிக்கும் பில்லி ஒருநாள் காட்டுக்குள் பயணிக்கும்போது சிறிய பருந்து உறவாகிறது. நட்பாகும் பருந்தைக் மறைவான இடத்தில் வைத்து பாதுகாப்பதோடு, பருந்து வளர்ப்பு சம்பந்தமான புத்தகங்களைத் தேடிப் படிக்கிறான். இந்த விஷயம் அவனைச் சுற்றியிருப்பவர்களும் தெரிய வர, எல்லோரும் அவனை மெச்சுகிறார்கள்

அச்சமயம் பில்லிக்கும் அவனது சகோதரனுக்கும் இடையே வாக்குவாதம் எழ, பருந்தைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசி பழிவாங்குகிறான் பில்லியின் அண்ணன். செல்லப்பருந்து இறந்த சோகத்தில் பில்லி தவிப்பதோடு திரை இருள்கிறது. தொழிலாளர் வர்க்க ஏழைச்சிறுவர்களின் வாழ்க்கையை, அவர்களின் மென்மையான உணர்வுகளை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் கென் லோச். தன் செல்லப் பருந்துக்கு பில்லி சூட்டும் பெயர்தான் படத்தின் தலைப்பும் கூட.


Image result for nancie atwell




நான்சி அட்வெல் (Nancie Atwell)

அமெரிக்காவைச் சேர்ந்த நான்சி அட்வெல் கல்வியாளர், ஆசிரியர், எழுத்தாளர் என்று பன்முகங்களைக் கொண்டவர். உலகின் தலைசிறந்த ஆசிரியையையாக கொண்டாடப்படுபவர்.

 ‘குளோபல் ஆசிரியர் விருதுவாங்கிய முதல் ஆசிரியர் இவர்தான்.  25 ஆண்டுகளுக்கு முன்பு கல்விக்காக என்ஜிஓ தொடங்கிய நான்சி, மேய்ன் மாகாண கிராமத்தில் தனது கனவுப்பள்ளியை நிறுவினார். தேர்வுகள் இல்லாத பள்ளியில் மாணவர்கள் ஆண்டுக்கு நூலகத்திலுள்ள 40 புத்தகங்களைப் படித்துவிட வேண்டும். வாசிப்பனுபவத்தை எழுத வேண்டும். ‘‘மெய்யறிவும், மகிழ்ச்சியும் கிடைக்கக்கூடிய ஒரு இடமாக வகுப்பறை இருக்க வேண்டும்...’’ என்பது நான்சியின் கொள்கைக்கேற்ப மதவிழாக்கள் வேறுபாடின்றி கொண்டாடப்படும் பள்ளி அது

நான்சி எழுதிய ஒன்பது நூல்களில் In The Middle: New Understandings About Writing, Reading, and Learning’ என்ற நூல், 5 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது.

நாற்பதாண்டு ஆசிரியைப் பணி 2013-இல் முடிவுக்கு வந்தாலும் அவரது கால்கள் கல்விச் செயல்பாட்டுக்காக இன்றும் ஓடிக்கொண்டிருக்கின்றன.