சேலஞ்ச் சின்னத்தம்பிக்கு இரைச்சல் ஆகாது!




ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் போல படக்கதை ஒன்று எழுதிப்பார்க்க ஆசை. தவறும் தடுமாற்றமும் இருக்கலாம். ஜாலியாக முயற்சித்தோம்.


ஒண்டிப்பூர் சின்னத்தம்பிக்கு சவுண்டே ஆகாது. சாலையில் மாட்டை பிடித்து செல்லும்போது அடித்த ஹார்ன்களால் சின்னத்தம்பி உச்சிமுடிகூட எழுந்துநின்றது. அந்த கேப்பில் மாடுகள் மிரண்டு ஓடி வீடு சேர்ந்தன.


மெல்ல கார், மாடு, காக்கை, தவளை என அனைத்து ஒலிகளும் அலர்ஜியாக நள்ளிரவிலும் தூக்கம் வராமல் தவித்தார் சின்னத்தம்பி.






 குழந்தைகளின் கிரிக்கெட், குக்கரின் விசில், சேவலின் கொக்கரிப்பு ஒலிகளை நிறுத்தமுடியுமா? காதைப்பொத்திக்கொண்டு அமைதிதேடி எங்கெங்கோ ஓடினார் சின்னத்தம்பி.



நகருக்கு அமைதி தேடி ஓடிய சின்னத்தம்பி, இளைஞர் ஹெட்போனில் பாடல்கேட்டபடி ஹார்ன் ஒலிகளுக்கு கவலைப்படாமல் சிக்னல்களை கடப்பதைப் பார்த்து யுரேகா என்று கத்தினார்.


தனக்கும் மாடுகளுக்குமாக இரண்டு டஜன் ஹெட்போன்களை ஆஃபரில் வாங்கியவர், இரைச்சலை நாசூக்காக ஒதுக்கி வீடு திரும்பினார்.


அதன்பின் தூங்கும்போதும் ஏன் குளிக்கும்போதும் கூட ஹெட்போனை கழற்றாத சின்னத்தம்பி, ஹெட்போன் தம்பி என ஊராரால் அழைக்கப்பட்டார். சேவல், நாய், மாடு, கார், பஸ் என எதுவும் அவரை தொந்தரவு செய்யமுடியவில்லை.




ஹெட்போனை சின்னத்தம்பி அணிந்ததால் லாரி, கார்களின் ஹார்ன் ஒலி அவருக்கு பிரச்னையில்லை. ஆனால் மாடுகள் மிரளுமே! சந்தையில் வாங்கிவந்த ஹெட்போன்களை மாடுகளுக்கும் சமத்துவமாய் மாட்டிவிட்டு இளையராஜா பாடல்களை பிளே செய்தார். அப்புறமென்ன மாடுகளும் தேவிபிரசாத்தாய் துள்ளிக் குதித்து சின்னத்தம்பியை பின்தொடர்ந்தன.

நன்றி: கதை:Rohini Nilekani, ஓவியம்:Angie & Upesh   
www. storyweaver.org.in
  



;