தொழிலாளர்களுக்கான உரிமைக்குரல்!




Image result for saru jayaraman







தொழிலாளர்களுக்கான உரிமைக்குரல்!

கோல்டன் குளோப் விருது அரங்கில் சாரு ஜெயராமனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு. அமெரிக்காவிலுள்ள 14 மில்லியன் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை முடிவு செய்ய போராடிய பெண்மணியின் செயலூக்கத்திற்குத்தான் மேலே சொன்ன மரியாதை. இவர் தொடங்கிய One Fair Wage என்ற விழிப்புணர்வு பிரசாரம் உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிரச்னைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது.


Image result for saru jayaraman


"எனது நண்பர்களின் குடும்பங்கள் பலவும் உணவகம், கட்டிடம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். உழைப்புக்கு மிக குறைந்த ஊதியத்தை எதிர்பார்க்கும்படி நிறுவனங்கள் இரக்கமின்றி நடந்துகொள்கின்றன" என்னும் சாரு ஜெயராமன் அரசியல் அறிவியல் பட்டம் பெற்று பின்னர் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் ஒரு பட்டம் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்துள்ளார் சாரு. உணவுத்தொழிலாளர் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக செயல்பட்டு தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி வருகிறார். 500 உணவகங்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், பத்து மாநிலங்களில் 23 ஆயிரம் உறுப்பினர்கள் என செயல்பட்டு வருகிறது இவரின் தன்னார்வ நிறுவனம். 1938-2018 வரை உணவகத்தொழிலாளர்களின் சம்பளம் 0-2.3 டாலர்கள் வரை கூடிவந்துள்ளது.