கூகுள் மாநாடு 2018



Image result for google i/o conference 2018


கூகுள் மாநாடு 2018!

கூகுள் ஆண்ட்ராய்ட் P வெளியிடப்படலாம் என்பதோடு எதிர்கால ஆண்ட்ராய்ட் அப்டேட் குறித்த செய்திகள் கூறப்பட வாய்ப்பு உள்ளது. ஆப்பிள் எக்ஸ் வடிவமைப்பு போல ஆண்ட்ராய்ட் பியின் சில அம்சங்கள் இருக்கிறது எனும் விமர்சனங்களுக்கு இம்மாநாடு பதில் தரும்.

கூகுள் இயக்குநரான சுந்தர்பிச்சையின் கனவான ஏஐ, குரல் உதவியாளர்கள், மொழிபெயர்ப்பு, கூகுள் வழிகாட்டி, டீப் மைண்ட் ஆகியவை குறித்த முக்கியமான அறிவிப்புகள் வெளிவரக்கூடும்.

பெரியளவு முக்கியத்துவம் இல்லையென்றாலும் கூகுள் போட்டோஸ், நியூஸ், பிளே ஆகியவை பற்றிய விஷயங்களும் பேசப்படக்கூடும். கூகுள் நியூஸ் ஆப், விரைவில் புதுப்பொலிவுடன் வேகமாக மொபைலில் காணும்படி உருவாக்கப்படவிருக்கிறது.

கையில் அணிந்துகொள்ளும் வாட்ச்களில் ஓஎஸ் மாற்றத்துடன், பல்வேறு வாய்ஸ் அசிஸ்டெண்ட் கருவிக்கான அப்டேட்களும் இருக்கும். ஆண்ட்ராய்ட் டிவியில் முகப்பு திரைக்கான அப்டேட்டோடு கூகுள் டாங்கில் மற்றும் ரிமோட் இம்முறை வழங்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் நெக்சஸ் போன்களிலும் பல்வேறு புதிய மாற்றங்களை கூகுள் செய்திருக்கும் என டெக் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.