தீக்காயங்களை குணமாக்கலாம் பிளாஸ்டிக் மூலமாக!
தீப்புண்களை குணமாக்கும்
பிளாஸ்டிக்!
நெருப்பினால் உண்டாகும்
காயங்களை குணப்படுத்துவது மருத்துவத்திற்கே சவாலான ஒன்று. தோல் முற்றிலும்
சிதைவடைவதால், பாக்டீரியாத்தொற்று ஏற்படுவதை தடுப்பது பிரம்ம
பிரயத்தனமாக உள்ளது.
பாலிஸ்ட்ரீன், பாலிபுரோபலீன் ஆகிய பெட்ரோகெமிக்கல்களிலிருந்து மைக்ரோபெட்ஸ் எனும் நுண் பிளாஸ்டிக்
துகள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை multivalent
adhesion molecule 7 என்ற பொருளுடன் இணைத்து தீப்புண்களை குணப்படுத்த
பயன்படுத்தலாம் என பிர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
"இக்கலவை மூலம் பாக்டீரியா தொற்றை எளிதில் தடுக்கலாம். இதன்மூலம் பல்வேறு ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாட்டை குறைக்கலாம்"
என்கிறார் மருத்துவர் ராபர்ட். PLOS மருத்துவ இதழில்
இதுதொடர்பான மருத்துவக்கட்டுரை வெளியாகியுள்ளது.