என் முன்னோர்களின் தியாகமே முன்னேற்றத்துக்கு காரணம்! -லெஸ்டர் ஹோல்ட்




Image result for lester holt



முத்தாரம் Mini

மார்ட்டின் லூதர்கிங்கின் 50 நினைவு தினத்தை மெம்பிஸ் சென்று படம்பிடித்திருக்கிறீர்கள். இன்றைய ஊடகச்சூழலில் கிங் மீண்டும் எழ வாய்ப்புள்ளதா?

இன்று பல்வேறு நிறுவனங்களும் ஊடகங்களை வைத்துள்ளன. கிங்கின் நினைவுதினத்தை பதிவு செய்வது அத்தினத்திற்கான மரியாதை தொடரச்செய்யும் என்று நம்புகிறேன்.

அதிபருடன் செய்த நேர்காணலில் ஜேம்ஸ் காமேயை பதவி நீக்கும் விஷயத்தை பேசவைத்தீர்கள். எப்படி ஸ்கூப் செய்திகளை கண்டுபிடிக்கிறீர்கள்?

நேர்காணல்களை வெளிப்படையாக செய்வது முக்கியம். பல்வேறு கேள்விகளை மனதில் வைத்துள்ள நேயர்களின் பிரதிநிதியாக நான் செயல்படவேண்டிய பொறுப்பை உணர்ந்துள்ளேன். பதில்களை தரவில்லையென்றால் மீண்டும் மீண்டும் கேள்விகளை கேட்பதே என் வேலை.

கிங் நினைவுதினத்தை கருப்பின செய்தித்தொகுப்பாளராக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். அது பற்றிக்கூறுங்கள்.

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் நிலை உயர பலரின் தியாகம் காரணம். நான் இந்நிலைக்கு பலரின் தோள்களின் மீது ஏறியே வந்துள்ளேன் என்பதை நினைவுபடுத்திக் கொள்கிறேன். இன்று பல்வேறு நிறங்களைக் கொண்ட குழந்தைகள் என்னை டிவி வழியாக பார்க்கிறார்கள். இது வட்டமாக சுழன்றுவரும் நிகழ்வு.

-லெஸ்டர் ஹோல்ட், என்பிசி தொகுப்பாளர்