இடுகைகள்

டெஸ்டோஸ்ட்ரோன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதாம் ஆப்பிள் பெரிதாக இருப்பது ஏன்?

படம்
giphy மிஸ்டர் ரோனி என்னுடைய தொண்டையில் ஆதாம் ஆப்பிள் பெரிதாக உள்ளது? இதனை சரி செய்ய முடியுமா? எடுத்து நாயுடு ஹோட்டல் வறுகறிக்கு கொடுத்துவிடப்போகிறீர்களா என்ன? ஆண்டவன் கொடுத்ததை அப்படியெல்லாம் எதையும் மாற்றமுடியாது. தைராய்டு அமைப்புக்கு அருகில் உள்ளது ஆதாம் ஆப்பிள். குரல் அமைப்பை பாதுகாக்க ஒன்பது அமைப்புகள் அடுத்தடுத்து உள்ளன. இதில் தைராய்டு அமைப்பின் மீதாக பெரிதாக இருக்கிறது. ஆண்களுக்கு உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிக்கும்போது, தொண்டை அமைப்பு பெரிதாகிறது. குறிப்பாக குரல் மாறுபடுவதோடு அதன் மீதுள்ள ஆதாம் ஆப்பிளின் அளவு பெரிதாகிறது. இந்த அளவு மரபணு சார்ந்தது. இதை மாற்றுவது என்பது கடினம். ஆண்களுக்கு இந்த அமைப்பு பெண்களை விட தெளிவாக தெரியும். நன்றி - பிபிசி

சிலருக்கு மட்டும் உடம்பில் புசுபுசு முடி ஏன்?

படம்
sf ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி சிலருக்கு மட்டும் உடம்பில் புசுபுசு முடி வளருவது ஏன்? நடிகர் கவுண்டமணியின் உடலைப் பார்த்து கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உடலின் முடிவளர்ச்சிக்கு பல்வேறு ஹார்மோன்கள் காரணமாக உள்ளன. நம் முன்னோர்களை நினைவுப்படுத்திக்கொண்டால் முடிவளர்ச்சிக்கான காரணத்தை கண்டுபிடித்துவிடுவீர்கள். அதேசமயம் காகசியன் மக்களுக்கும், ஜப்பான் மக்களுக்கும் உடலில் ஒரே அளவு டெஸ்டோஸ்ட்ரோன் சுரந்தாலும் இருவரின் உடலில் வளரும் ரோம வளர்ச்சி அளவு பெருமளவு மாறுபடுகிறது.  இதற்கு என்ன காரணம் என வருங்கால ஆராய்ச்சிகள்தான் சொல்ல வேண்டும்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்