இடுகைகள்

2002 கலவரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குஜராத்தில் சிறுபான்மையினரின் குரல்! - ஜிக்னேஷ் மேவானி

படம்
  மத்திய அரசின் தேசதுரோக குற்றச்சாட்டுக்காக குஜராத்தின் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அலைகழிக்கப்பட்டவதை அறிவீர்கள். ஜிக்னேஷ் பற்றி சில விஷயங்களைப் பார்ப்போம்.  அவனுக்கு புரட்சியில் ஆர்வமிருக்கிறது. எப்போதும் அதை துடிப்பாக பேசிக்கொண்டிருப்பான். நான் புரட்சி என்பது நடந்தால் 1947க்கு முன் நடந்திருக்கவேண்டும் என்று கூறுவேன். ஆனால் அவன் புரட்சி காரணமாக சிறைக்கு போவதற்கும் தயார் என்றுதான் கூறுவான் என்றார் ஜிக்னேஷ் மேவானியின் தந்தை நட்வார்பாய் பார்மர்.  பிரதமர் மோடி பற்றி ஒரே ஒரு ட்வீட் பதிவை எழுதியதற்காக எம்எல்ஏவான ஜிக்னேஷை காவல்துறை அலைக்கழித்தது. அதுவும் மாநிலம் விட்டு மாநிலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைது செய்வது கொலை, கொள்ளை குற்றங்கள் என்றே இதுவரை இருந்தது. பாஜக அரசின் கைங்கர்யத்தில் இது  அரசியல்வாதிகளுக்கும் மாறியுள்ளது. ட்வீட் குற்றம் மட்டும் சிறையில் அடைக்க பத்தாதோ என நினைத்த காவல்துறை பெண் காவலரைத் தாக்கினார் என மற்றொரு குற்றச்சாட்டையும் பதிவு செய்தது. ஆனால் நீதிமன்றத்தில், வழக்குப்பதிவு பல் இளித்துவ