இடுகைகள்

மனித உரிமைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகதிகளின் உரிமைக்காக போராடிய மனிதர்! - பேயார்ட் ரஷ்டின்

படம்
பேயார்ட் ரஷ்டின் அமெரிக்காவில் 1912 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்க சமூகத்தில் மனித உரிமைகள், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமைகள் பற்றி பேசிய ஆளுமை இவர். அமெரிக்க அதிபரின் விருதைப் பெற்ற சாதனையாளரும் கூட. 1941 ஆம் ஆண்டு வாஷிங்டன் மூவ்மெண்ட் எனும் இயக்கத்தைத் தொடங்கினார். மார்ட்டின் லூதர் கிங்குடன் இணைந்து செயல்பட்டு, அகிம்சை, கருப்பினத்தவர்களுக்கான இனவேற்றுமை, வேலைவாய்ப்பு பாகுபாடு ஆகியவற்றைத் தீவிரமாக எதிர்த்தார். பென்சில்வேனியாவில் பிறந்து நியூயார்க் நகரில் இறந்த ரஷ்டின், அதுவரையிலும் மனித உரிமைகள், அகதிகளுக்கான உதவிகள் என உழைத்துக்கொண்டே இருந்தார். வியட்நாம், கம்போடியாவிலிருந்து வந்த அகதிகள், ஹைதி அகதிகள் என உழைத்த சமயத்தில்தான் உலகிலிருந்து விடைபெறும் அழைப்பும் வந்தது. பென்சில்வேனியாவின் வெஸ்ட் செஸ்டரில் பிறந்த ரஷ்டினை வளர்த்த பொறுப்பு அவரின் தாத்தா - பாட்டியைச் சேரும். ஜூலியா ஜெனிஃபர் ரஷ்டின் தம்பதிக்கு பனிரெண்டு பிள்ளைகளில் ஒன்பதாவது பிள்ளை பேயார்ட் ரஷ்டின். அவரின் குடும்பம் உணவகம் வைத்திருந்தனர். வருமானம் வர நல்ல பெரிய வீட்டில்தான் ரஷ்டின் வளர்ந்தார். அவரின் பெற்ற

சிரிய சிறைகளில் என்ன நடக்கிறது தெரியுமா?

படம்
நம்பிக்கை நாயகர்கள்!  - அலி அபு டென் சிறை. இருட்டில் முழ்கிய அறைக்குள் இருந்தால் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாது. அலி அபு டென் அப்போதுதான் தூங்கி எழுந்தார். சிறிது நேரத்தில் காலை உணவுக்கான அழைப்பு வந்தது. ஒரு முட்டையை வேகவைத்து ஐந்து பேர் சாப்பிட்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. கதவுகள் திறக்கப்பட உணவுக்கூடத்திற்கு சக கைதிகளோடு வந்தார். அங்கு கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது. சிறைக்காவலர் சோறு, கோழிக்குழம்பில் சிறுநீர் பெய்துகொண்டிருந்தார். தாயோழி என லெபனான் கைதி ஆவேசமாக முன்னேற, அபு உடனே அவரைத் தடுத்தார். உணர்ச்சியை கட்டுப்படுத்தியபோதுதான் அக்கைதி உணர்ந்தார். தான் அப்படி காவலரை சத்தமாக சொன்னால், எலும்புகள் மொத்தமாக நொறுக்கப்படும் என்று. திரைப்படத்தில் ஒரு காட்சி! இது அபுவுக்கு மட்டுமல்ல; சிரியாவில் சிறைப்பட்ட கைதிகள் தினசரி சந்தித்து வந்த கொடுமைகள்தான் அவை. அவற்றை அபு பின்னாளில் திரைப்படமாக்கியபின்தான் அக்கொடூரங்களை உலகம் அறிந்தது. சிறை என்பது தனி உலகம். பெரும்பாலும் எந்த நியதிகளுக்கும் கட்டுப்படாத அங்கு, உருப்படியான செயல்கள் நடக்கும் என குழந்தை கூட நம்பாத