இடுகைகள்

டாய்லெட் பிசினஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டாய்லெட் பிசினஸ் - கொட்டும் லாபம்!

படம்
டாய்லெட் ஏக் பிரேம் கதா என அக்சய் குமார் லெவலுக்கு கழிவறை பாசம் இல்லாவிட்டாலும், வயிறு நெருக்கித்தள்ளும்போது கழிவறைக்குள் போய்த்தானே ஆகவேண்டும். சென்னையின் நம்ம டாய்லெட் போல உலகெங்கும் தற்காலிக கழிவறைகளின் தேவை அதிகரித்துவருகிறது. நாற்றமடிக்கிற பிசினஸ்தான். எவ்வளவு தேறும் என நினைக்கிறீர்கள். 2 பில்லியன் டாலர்கள் சும்மாயில்லை. கல்யாணம், காதுகுத்து, வளைகாப்பு என நடத்தும் இடங்களிலெல்லாம் கழிவறை வசதி இருக்கிறதா என இனி பார்த்துக்கொண்டு கவலைப்பட முடியாது. பின்னே உலகம் மாறுகிறது இல்லையா, இந்த சர்வீசுக்கும் நிறைய கம்பெனிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. ஏழை முதல் பணக்காரர் வரை கழிவறை வசதிகள் மாறினாலும் அதனைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாது என்பது நிஜம்தானே? குறைவான நீர்வளம், அதிக நீரை செலவழிப்பது, சரியான பராமரிப்பின்மை போன்ற பிரச்னைகள் இருந்தாலும் கழிவறைகள் பொதுவாக நிறைய அமைக்கப்பட வேண்டும் என்பது சரியான கோரிக்கையே. 1940 ஆம் ஆண்டு இரண்டாம்  உலகப்போரின்போது, கழிவறைக்கு நடந்து கால் காய்ப்பு காய்ச்சிடுமே என பயந்தவர்கள், கழிவறையை போர்ட்டபிளாக மாற்றிப் பயன்படுத்தினர். மரக்கதவுகள் மாறி ஃ