இடுகைகள்

சிறுவர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போர், பாலியல் சீண்டல், வன்முறையால் குழந்தைகளுக்கு நேரும் உளவியல் குறைபாடுகள்!

படம்
  பிரான்ஸ் நாட்டில் உள்ள போர்டியக்ஸ் நகரில் போரிஸ் சைருல்னிக் பிறந்தார். இரண்டாம் உலகப்போருக்கு சிறிது முன்னதாக பிறந்தார். இவரது பெற்றோர் வாழ்ந்த பகுதியின் ஆட்சி வேறு ஒரு குழுவிற்கு மாறியதால், அவர்கள் ஜெர்மனியுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். இதனால் யூதராக போரிஸின் வீடு சோதனை செய்யப்பட்டு யூதரான பெற்றோர் ஆஷ்விட்சிலுள்ள வதைமுகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். குழந்தையை மட்டும் பாதுகாப்பாக வளர்க்க ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். ஆனால் அவர்களோ சிறியளவு தொகைக்கு ஆசைப்பட்டு சிறுவனை அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்தனர். சிறுவனான போரிஸ் விரைவில் வதைமுகாமுக்கு மாற்றப்படும் நிலையில் அங்கிருந்து தப்பி பண்ணை ஒன்றில் வேலை செய்யும் தொழிலாளியாக மாறினார். தன்னைத்தானே பராமரித்துக்கொண்டு கல்வியை தானாகவே கற்றுக்கொண்டார். உறவுகளே இன்றி வளர்ந்தவர், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். தன்னுடைய வாழ்க்கையை ஆய்வு செய்ய நினைத்தவர், உளப்பகுப்பாய்வு, நியூரோசைக்கியாட்ரி ஆகியவற்றை கற்றார். தனது வாழ்வு முழுவதும் மோசமான விபத்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் செலவிட்டார

சிறுவர் காப்பக சிறுவர்களை தொழில்முனைவோர்களாக்கும் மாணிக்க பாரதி! - நமது தோள்கள் அறக்கட்டளையின் அரிய பணி

படம்
  மாணிக்க பாரதி, சமூக செயல்பாட்டாளர். இப்படி ஒற்றை வரியில் ஏதாவது சொன்னால் யாருக்குமே புரியாது அல்லவா? இவர் காப்பகத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளை தொழில்முனைவோராக்க பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார். இதற்கு அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் ஆதரவும் உதவியும் கிடைத்துள்ளது. பேக் அண்ட் சேஞ்ச் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றியமைக்க முயன்று வருகிறார்.  தனது பேக்கரியில் உள்ள உணவுவகைகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களை இத்தொழிலுக்கு வர உதவி வருகிறார். இதில் ஐந்து பேர்களுக்கு தனது நிறுவனத்தில் வேலை கொடுத்துள்ளார். 2017ஆம் ஆண்டு பேக்கரி கல்வித் திட்டத்தை தொடங்கியபோது ஒரு மாணவர்தான் இதில் இணைந்திருந்தார். மாணிக்க பாரதிக்கு, குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்லித் தரவேண்டும் எப்போது தோன்றியது? அதற்கு சோகமான முன்கதை 2015ஆம் ஆண்டில் அவரது சகோதரி இறந்துபோனார். கடைசி வார்த்தையாக உன்னை உயிர்ப்போடு வைத்திருக்கும் விஷயங்களைச் செய் என்று சொல்லியிருக்கிறார். அதற்குப்பிறகுதான் அரசு அமைப்புகளோடு இணைந்து மக்களுக்கு வாழ்க்கைத்திறன்களை சொல்லிக்கொடுக்கும் பணிகளை செய்யத் தொடங்கிய

புரோகிராமிங் கலக்கும் புதிய தலைமுறை சிறுவர்கள்! - தினசரி வாழ்க்கைப் பிரச்னையைத் தீர்க்கும் ஆப்கள்

படம்
            புரோகிராமிங் இளவரசர்கள் கணினிமொழியைக் கற்றுவரும் இந்திய சிறுவர்கள் பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளை தீர்க்க முயன்று வருகின்றனர். எப்போதும் புதிய ஆப்களுக்கான முதலீடுகளை இளைஞர்கள், வாலிபர்கள் தேடுவார்கள். ஆனால் இப்போது இந்தியாவில் நடப்பு மாத த்தில் மட்டும் 26 சிறுவர்கள் தங்களின் ஆப் ஐடியாவைச் சொல்லி முதலீட்டுக்கான முயற்சிகளில் உள்ளனர். ஆன்டி புல்லிங் ஆப் ஒன்றை பார்ப்போம். இதில் சிறுவர்கள் தங்கள் மீது நடத்தப்படும் கிண்டல், கேலி ஆகியவற்றை பதிவு செய்யலாம். இதில் உடனடியாக தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளை கண்காணித்து தகவல் தரும் ஆப்பும் உள்ளது. நடப்புகால பிரச்னைகளுக்கான தீர்வு என்பதில் இந்த ஆப்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மும்பையைச் சேர்ந்த எஜூடெக் கம்பெனியான ஒயிட்ஹேட் ஜூனியர் நிறுவனம் இம்முறையில் 7 ஆயிரம் விண்ணப்பங்களிலிருந்து 26 ஐத் தேர்ந்தெடுத்துள்ளது. கிரியேட்டிவிட்டியுடன் ஆர்வமாக இருக்கும் சிறுவர்களை தடுக்க கூடாது. நாங்கள் பயிற்சியளித்து அவர்களின் முடிவுகளை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார் இந்நிறுவனத்தின் இயக்குநரான கரண

பெற்றோரை மீட்டு கொண்டு வர மந்திர நாற்காலியுடன் போராடும் சிறுவர்கள்! - தி மேஜிக் ட்ரீ 2009

படம்
      மேஜிக் ட்ரீ மந்திரசக்தி கொண்ட மரத்தை வெட்டி பல்வேறு பொருட்களை செய்கிறார்கள். அவற்றில் ஒரு துளி சக்தி மிஞ்சுகிறது. இதனால் சில பொருட்கள் தன்னிச்சையாக இயங்குகின்றன. ஆனால் அது எதனால என்று தெரியாமல் மனிதர்கள் அதனை வீடியோக்களாக எடுத்து பகிர்கிறார்கள். அப்போது முழு மந்திரசக்தியும் ஒரு நாற்காலிக்கு கிடைக்கிறது. அந்த நாற்காலி மூன்று சிறுவர்களைக்கொண்டு குடும்பத்திற்கு எதேச்சையாக கிடைக்கிறது. அவர்களுக்கு பெரிய பேராசை ஏதும் கிடையாது. பெற்றோர் தம்மிடம் பாசமாக இருக்கவேண்டும். அதற்கு அவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கவேண்டும். அவ்வளவுதான். இதனை தான் அவர்கள் வேண்டுகோளாக முன்வைக்கிறார்கள். இந்த விஷயம் நிறைவேறும்போது ஏற்படும் பாதிப்புகள், பக்க விளைவுகள்தான் படம். குழந்தைகள் படம் என்பதால், அவர்களின் மனதில் உள்ள விஷயங்களை மீறிப்போகாமல் படம் எடுப்பது கடினம். இந்த படம் அந்தவகையில் குழந்தைகளின் மனதிற்கு நெருக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. கொடுமைக்கார அத்தையை திட்டும்போது கூட அவள் சின்ன பெண்ணாக மாறிவிடவேண்டும் என்றுதான் வேண்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் அத்தையும் கூட அப்படியே இருப்பது நல்லது என நின

கருப்பின குழந்தைகளை கொன்ற அசுரன்! - வேய்ன் வில்லியம்ஸ்

படம்
1979 ஆம் ஆண்டு தொடங்கி 1981ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த கொலைகள் 29க்கும் அதிகம். அதனை குறிப்பிட்ட வரிசையில் பார்த்தால், இறந்தவர்கள் பெரும்பாலானோர் கருப்பின  சிறுவர்கள். இவர்களைக் கொன்றது யார் என போலீஸ் ஆராய்ந்ததில் சிக்கியர், வேய்ன் வில்லியம்ஸ். இரண்டு கொலைகளுக்காக தண்டனை பெற்றார். ஆனால் ஆதாரம் கிடைக்கவில்லை என்றாலும் இருபதிற்கும் மேற்பட்ட கொலைகளை செய்தார் என்று அமெரிக்க காவல்துறை அடித்துச் சொல்கிறது. அட்லாண்டாவில் பதிமூன்று, பதினான்கு வயது சிறுவர்கள் இருவர் காணாமல் போனார்கள். பெற்றோர் புகார் கொடுத்தார்கள். அரசு அமைப்பு அல்லவா? அதற்காக அசதியுடன் போங்கள் கண்டுபிடித்து தகவல் சொல்கிறோம் என போலீஸ் சொன்னது. இருவரின் உடல்களும் சில நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது. ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். இன்னொருவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தான். சீரியசான விவகாரம் போல என்று முட்டை ப ப்சை சாப்பிட்டு போலீசார் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே செய்தி வந்துவிட்டது. மூன்று சிறுவர்களின் உடலை யாரோ பார்த்தார்களாம். அப்புறம்தான், ஆஹா..

விபத்திற்கு வெப்பம்தான் காரணம்!

படம்
தமிழ்நாட்டில் கோடைக்காலங்களில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன என்று ஜாலியாக பலரும் டீ குடித்தபடி பேசியது நிஜமாகி இருக்கிறது. கடந்த ஆண்டின் ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 57 ஆயிரத்து 927 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதேசமயம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மழைக்காலங்களில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை 5,346 .இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 1077. கூறியது தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆராய்ச்சித்துறை. பனிக்காலமான டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 2,163 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 390 பேர் இறந்துள்ளனர். இதற்கு போக்குவரத்துத்துறை என்ன சொல்கிறது? கோடைக்காலத்தில் மக்கள் பலரும் சுற்றுலா தலங்களுக்குச் செல்கிறார்கள். அதனால் வண்டிகள் சாலைகளில் அதிகம் விபத்துகளில் சிக்குகின்றன என்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் இஷ்டப்படி குறுக்குவழிகளைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல நடைபாதைகளில் பாதசாரிகளை நடக்கவிடாமல் அதில் பைக்குகளை ஓட்டுவது, அங்குள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவையும் விபத்துகளுக்கு காரணம். மேலும் பலரும் ஹெல்மெட்டுகளை அணிவதில் ஆர்வம் காட்டுவதில்லை என அலுத்துக்கொள்கிற