புரோகிராமிங் கலக்கும் புதிய தலைமுறை சிறுவர்கள்! - தினசரி வாழ்க்கைப் பிரச்னையைத் தீர்க்கும் ஆப்கள்
புரோகிராமிங் இளவரசர்கள்
கணினிமொழியைக் கற்றுவரும் இந்திய சிறுவர்கள் பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளை தீர்க்க முயன்று வருகின்றனர்.
எப்போதும் புதிய ஆப்களுக்கான முதலீடுகளை இளைஞர்கள், வாலிபர்கள் தேடுவார்கள். ஆனால் இப்போது இந்தியாவில் நடப்பு மாத த்தில் மட்டும் 26 சிறுவர்கள் தங்களின் ஆப் ஐடியாவைச் சொல்லி முதலீட்டுக்கான முயற்சிகளில் உள்ளனர்.
ஆன்டி புல்லிங் ஆப் ஒன்றை பார்ப்போம். இதில் சிறுவர்கள் தங்கள் மீது நடத்தப்படும் கிண்டல், கேலி ஆகியவற்றை பதிவு செய்யலாம். இதில் உடனடியாக தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளை கண்காணித்து தகவல் தரும் ஆப்பும் உள்ளது. நடப்புகால பிரச்னைகளுக்கான தீர்வு என்பதில் இந்த ஆப்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மும்பையைச் சேர்ந்த எஜூடெக் கம்பெனியான ஒயிட்ஹேட் ஜூனியர் நிறுவனம் இம்முறையில் 7 ஆயிரம் விண்ணப்பங்களிலிருந்து 26 ஐத் தேர்ந்தெடுத்துள்ளது. கிரியேட்டிவிட்டியுடன் ஆர்வமாக இருக்கும் சிறுவர்களை தடுக்க கூடாது. நாங்கள் பயிற்சியளித்து அவர்களின் முடிவுகளை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார் இந்நிறுவனத்தின் இயக்குநரான கரண் பஜாஜ். இந்த நிறுவனத்தின் மாணவர்கள் தயாரித்துள்ள ஆப்கள் அனைத்தும் கூகுள் ஸ்டோரில் கிடைக்கின்றன. ஆன்டி புல்லிங் ஆப்பை உருவாக்கிய சிறுவன் மெய்தைபாகுன் மஜாவ். ஷில்லாங்கைச் சேர்ந்தவன். இவன் நர்சரியில் படிக்கும்போது தொடங்கி கேலி, கிண்டல் ஆகியவற்றை எதிர்கொண்டு வந்தவன் என்பதால், பிறருக்கு இதுபோல நடக்ககூடாது என்று ஆப்பை உருவாக்கியுள்ளான்.
மும்பையைச் சேர்ந்த ஏழுவயது சிறுவன், உருவாக்கியுள்ள ஆப் சைன் லாங்குவேஜ் ஆப். ஹிரண்ய ரஜனி என்ற இவனின் ஆப் மூலம் பேச முடியாத சிக்கலில் உள்ளவர்களின் உணர்வுகளை பிறர் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் சௌரப்தீப் சர்கார் உருவாக்கியுள்ள ஆப் டிஸ்எக்ஸா. இது டிஸ்லெக்ஸியா சிறுவர்கள் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கானது. அத்வை சுக்ரித்தின் ஹாஸ்பிடல் பெட் டிராக்கர், மன்யா சிங்காலின் பிகாபோ ஆகிய ஆப்கள் முக்கியமானவை. பெருந்தொற்று காலம்தான் குழந்தைகள் வீட்டிலிருந்தே நிறைய கற்றுக்கொள்ள ஏற்றது என்கிறார் வேதாந்து நிறுவனத்தின் ஆனந்த் பிரகாஷ்.
இந்த நிறுவனத்தில் பயிலும் மாணவர் இஷான், ராபிட் நேரோ எஸ்கேப் என்ற விளையாட்டை உருவாக்கியுள்ளார். இன்னொரு மாணவரான ஸ்மார்த், ஒருவர் தனது உடல் எடையைக் கணக்கிடும் ஆப்பை உருவாக்கியுள்ளார். சிறுவயதில் கோடிங் கற்று்க்கொள்பவர்கள், எதிர்காலத்திற்கான பொருளாதாரத்திற்கு பங்களிப்பார்கள் என்று கூறப்படுகிறது. 2014இல் சீனாவைச் சேர்ந்த 100 நிறுவனங்கள், சிறுவர்களுக்கு கணினி கோடிங் கற்றுத்தருகிறார்கள். இந்த வகையில் அங்கு கணினி கோடிங் மதிப்பு 7.5 பில்லியன் யுவானாக வளர்ந்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக