சிபிஐயை உள்ளே நுழையாமல் தடுத்து நிறுத்தும் மாநிலங்கள்! - வளர்ந்து தேய்ந்த சிபிஐ

 

 

சிபிஐ விளையாட்டு!

 

 

Central Bureau of Investigation - Wikipedia


மத்தியில் பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் பல்வேறு வழக்குகள் தூசு தட்டி எடுத்து ஆளும் அரசு, முதல்வர், அமைச்சரவை உறுப்பினர்கள் என அனைவரின் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன இதில் தீர்ப்பு வருவது யாருக்கும் முக்கியமில்லை. சேற்றை வாரியிறைத்து அவமானப்படுத்துகிறோம் அல்லவா? அந்த மட்டுக்கு சிபிஐ சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.

1946ஆம் ஆண்டு டில்லி சிறப்பு காவல்துறை சட்டம் மூலம் சிபிஐ துறை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு முதலில் மத்தியஅரசு ஊழியர்களின் ஊழல் புகார்களை விசாரிக்கவே அனுமதிக்கப்பட்டது. இதில் உள்ள பிரிவு ஆறின் படி இந்த அமைப்பை விசாரிக்க அனுமதிப்பது தொடர்பான உரிமை டில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் நீங்களாக பிற மாநிலங்களுக்கு உள்ளது.


சிபிஐ அமைப்பு முன்னர் மத்திய அரசின் தனிப்பட்ட, ஓய்வூதியம் மற்றும் குறைதீர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டது. அடிப்படையில் எளிமையாக புரிந்துகொள்ள பிரதமர் இதனை இயக்குவார் என்று கூறலாம். இந்த அமைப்பின் செயல்பாடு என்பது வெளிப்படைத்தன்மை கொண்டதல்ல. இதனை தகவல் உரிமைச்சட்டத்தின்படி கேள்விகேட்க முடியாது. பாஜக, சிபிஐயைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றம் வரையிலான சமாச்சாரங்களை செய்யமுடியும் என்பதால், காங்கிரஸ் அல்லது பிற கட்சியினர் ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தங்களுடை மாநிலத்தில் சிபிஐயை அனுமதிப்பதற்கான உரிமையை சட்டம் மூலம் ரத்து செய்துள்ளனர்.


இதனை மகாராஷ்டிர அரசு செய்த விவகாரம் அனைவரின் கவனத்திற்குள்ளும் வந்துவிட்டது. டிவி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கில் செய்த தகராறுகள் பற்றியதுதான். இதனை சிபிஐ எடுத்து விசாரிக்கும் என்று நினைக்கும் முன்னரே மாநில காவல்துறை கையில் எடுத்து பாஜக ஆதரவு சேனலான ரிபப்ளிக்டிவியை தாக்கத் தொடங்கியது. அதன் ஆசிரியர் பிளஸ் உரிமையாளரையும் சிறையில் தள்ளி மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதில் ஆச்சரியப்படுத்தும் விதமாக மனித உரிமைப் போராளிகள் சிறையில் பிணை கிடைக்காமல் காத்திருக்க, அர்னாப் கோஸாமி என்ற பாஜக ஆதரவு ஊடகவியலாளருக்கு உடனே பிணை கிடைத்து மரியாதையுடன் அவரை வீடனுப்பி வைத்துள்ளது நீதிமன்றம். இதற்கு முன்னர் மும்பை பாந்த்ராவில் தூங்கிட்டு இறந்துபோன நடிகர் வழக்கையும் மாநில காவல்துறையிடமிருந்து சிபிஐ எடுத்துக்கொண்டது முக்கியமான தகவல்.


பஞ்சாப் அரசு சிபிஐ வசமிருந்த இரு வழக்குகளை திரும்ப பெற்றுக்கொண்டதோடு அவர்கள் வேற வழக்குகளை விசாரிக்கவும் அனுமதி மறுத்துள்ளது. விவசாய மசோதாக்களிலும் மத்திய அரசோடு பஞ்சாப் அரசு முரண்பட்டுள்ளது. டில்லியின் ஜன்தர் மந்தரில் போராட்டத்தையும் கூட முதல்வர் நடத்தியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்க உணவுப்பொருட்கள் ரயில்களையும் கூட பஞ்சாப்பிற்கு மத்திய அரசு விட மறுத்துள்ளது. மேலும் கிராம மேம்பாட்டு நிதியையும் கூட கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இந்த வகையில் பஞ்சாப் அரசு 1,100 கோடி ரூபாய் நிதியை இழக்கிறது. ரயில்கள் வரத்து நின்றுபோனதால் மாநிலத்திலுள்ள விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்கவில்லை. மின்நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கிடைக்கவில்லை.


கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என்று கூறப்படும் சிபிஐ கடந்து வந்த 30 ஆண்டுகளாகவே ஆட்சியாளர்களுக்கு ஏற்றபடி வளைந்து கொடுத்துத்தான் நடந்து வருகிறது. இந்த அமைப்பு நீதிமன்றத்தால் கூட கண்காணிக்கப்படுவதில்லை. மத்திய அரசு நடந்துகொள்ளும் முறையைப் பார்த்தால் பிற கட்சி ஆளும் மாநிலங்களில் இன்னும் கடுமையான கருத்தியல்ரீதியான முரண்பாடுகளும், டில்லியிலுள்ள மத்திய அரசுடன் மறைமுகமான போர் நடப்பதுபோல்தான் காட்சிகள் உள்ளன. மாநில அரசின் அரசியல் பிரச்னைகளுக்குள் நுழையாமல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் விசாரிக்க சிபிஐயை பலரும் நாடுவார்கள். ஆனால் இனி அப்படி நாடுவதற்கான நம்பகத்தன்மையை சிபிஐ பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். உச்சநீதிமன்றம் சிபிஐ தலைவரை நியமிக்கிறது. இதற்கான தேர்வுக்குழுவில் எதிர்க்கட்சி தலைவரும் இருப்பது, ஜனநாயக குடியரசிற்கான சாட்சியம். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.


பிசினஸ் இந்தியா

ராகேஷ் ஜோசி



கருத்துகள்