நம்பிக்கை மனிதர்கள் 2020! - நிம்மதியாக மூச்சு விட குறைந்தவிலையில் வெண்டிலேட்டர்கள்!
நிம்மதியாக மூச்சு விடுங்கள்!
பெங்களூரூவைச் சேர்ந்த கௌதம் பசுபுலேட்டி, தனது பயோடிசைன் இன்னோவேஷன் லேப் மூலம் குறைந்த விலையில் வெண்டிலேட்டர்களை தயாரித்து வருகிறார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கோவிட் -19 பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறைவான அறிகுறிகள் கொண்டவர்கள் முதல் தீவிரமான அறிகுறிகள் கொண்டவர்கள் வரை வெண்டிலேட்டர் என்பது அவசியமான வசதியாக இருக்கிறது. ஆனால் இன்று இந்திய மாநிலங்களில் ஏழில் மட்டுமே படுக்கை, வெண்டிலேட்டர் போன்ற வசதிகள் சிறப்பாக உள்ளன. அவை, தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தெலங்கானா, கர்நாடகம். நோய்தொடர்பான ஆராய்ச்சிப்படி 19 லட்சம் படுக்கைகள், 48 ஆயிரம் வெண்டிலேட்டர்கள், 95 ஆயிரம் ஐசியு படுக்கை வசதிகள்தான் இந்தியாவில் உள்ளன.
கௌதம், அரசு மருத்துவமனைகளோடு இணைந்து வெண்டிலேட்டர்களை குறைந்த விலையில் தயாரித்து வழங்கும் முயற்சியை செய்துவருகிறார். ‘’’’எங்களது நோக்கம், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் உயிரை பாதுகாப்பதுதான். இதற்காக மத்திய அரசின் நிதி ஆயோக்கோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம்’ என்கிறார் கௌதம். இவர்களது பைல்ட் நிறுவனத்தின் தயாரிப்பாக வரும் வெண்டிலேட்டர்கள் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையில் விலை வைத்து விற்கப்பட்டு வருகின்றன. எங்களுடைய தயாரிப்பான ரெஸ்பைர் எய்டு வெண்டிலேட்டர்கள்., மெக்கானிக்கல் மற்றும் மேனுவல் எனும் இரண்டு வகை வெண்டிலேட்டர்களுக்கு இடைப்பட்ட தன்மையை கொண்டது என்கிறார் கௌதம்.
முதலில் தயாரிப்பில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும் ஆராய்ச்சி காரணமாக அதனை எளிதில் சரிசெய்து முன்னேறியுள்ளனர். கௌதம், வெண்டிலேட்டர்களை தயாரிக்க நினைத்தாலும் பொதுமுடக்கம் காரணமாக சரியான மூலப்பொருட்களை தேடுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலையும் எப்படியோ சமாளித்து, வெண்டிலேட்டர்களை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறார். தற்போது வணிகரீதியில் வெண்டிலேட்டர்களை விற்பனை செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். ஏற்றுமதி செய்வதற்கான உரிமங்களைப் பெறவும் முயன்று வருகிறார் கௌதம் பசுபுலேட்டி.
இதுபோன்ற கண்டுபிடிப்பாளர்களை கீழ்க்கண்ட மின்னூலை படித்து தெரிந்துகொள்ளலாம். நன்றி
https://www.amazon.in/dp/B08LB4BBWH
கருத்துகள்
கருத்துரையிடுக