ஸ்மார்ட் ரோடு என்பதற்கு என்ன அர்த்தம்?

 

 

 Asphalt, Drive, Road, Highway, Anywhere, Transport

ஸ்மார்ட் ரோடு என்பதற்கு என்ன அர்த்தம்?


ஸ்மார்ட் ரோடு என்பதன் பொருள், அதில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதுதான். இதில் இங்கிலாந்தில் செம்பு சமாச்சாரங்களை பொருத்தியுள்ளனர். இதில் கார்கள், லாரிகள் செல்லும்போது அதன் வழியாக மின்சாரம் உருவாகும். அதனை கணினிகள் அளவிட்டு சேமித்துக்கொள்ளும். மேலும் போக்குவரத்து சிக்னல்களில் உள்ள சென்சார்கள் மூலம் வாகனங்களின் வேகத்தை கணிக்க முடியும். இத்தகவல்கள் மூலம் சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் கணித்து சாலைகளிலுள்ள சிக்னல்களை திறமையான முறையில் இயக்க முடியும். இங்கிலாந்து இவ்வகையில் ஸ்மார்ட் ரோடுகளை உருவாக்க அதிகம் செலவு செய்து வருகிறது.


பொதுவாக சோலார் பேனல்களை கண்ணாடி வடிவில் பதித்துக்கொள்ளத்தான் தயாரிக்கிறார்கள். இதனை சாலையில் பயன்படுத்துவது முதலில் சாத்தியமில்லாத தாக இருந்தது. ஆனால் பிரான்ஸில் 2016ஆம் ஆண்டில் 2800 போட்டோவால்டைக் செல்களைக்கொண்டு சாலையை உருவாக்கினார்கள். நோக்கம் நல்லதுதான் என்றாலும் இந்த திட்டம் எதிர்பார்த்தபடி ஆற்றல் உருவாக்க உதவ வில்லை. அதற்குபதில் அதில் சென்ற கனரக வாகனங்களால் சோலார் செல்கள் நொறுங்கின. அதில் செல்லு்ம்போது வாகனங்களின் டயர்கள் உராயும் ஒலியும் நாராசமாக இருந்தது. வாட்வே என்றழைக்கப்படும் இப்பாதையை பாலிமர்ரெசின் கலந்து சோலார் செல்களை பதித்து உருவாக்கினர்.


கருத்துகள்