பிறருக்கு சாரி சொல்லிப் பழகுங்கள்! - அன்ஹிங்க்டு படம் சொல்லும் செய்தி!
அன்ஹிங்க்டு
சாரி என்ற சொல்லை சொல்லாத காரணத்தால் இளம்பெண் தனது உறவினர்களை பலிகொடுக்க நேரிடும் சூழல் உருவாகிறது. எப்படி அச்சூழ்நிலையை அவள் சமாளிக்கிறாள் என்பதுதான் கதை.
படத்தின் ஒரே படம் ரஸ்ஸல் க்ரோவ்தான். ஹல்க் போல சதை போட்டு மக்கள் மீது பெரும்கோபமாக அலைகிறார். அவர் டிராஃபிக்கில் நிற்க தனது மகனை பள்ளியில் விடச்செல்லும் ரேச்சல் ஹண்டர் என்ற பெண் சலூனுக்கு செல்ல தாமதம் ஆவதால் அவரை வேலையை விட்டு நீக்கிவிடுகிறார் அவரது முதலாளி டெபோரா. இதனால் கடுப்பில் இருந்த ரேச்சல், காரை சாலையில் வேகமாக ஓட்டாமல் நிறுத்தியிருந்த டாமை கண்டபடி திட்டிவிடுகிறாள். இதனால் எரிச்சலுக்கு உள்ளாகும் டாம் ரேச்சலை துரத்தி பழிவாங்குவதுதான் கதை.
ஒரே லைனில் கதை செல்கிறது. சைக்கோ கொலைகாரனிடம் ரேச்சலின் போன் சிக்கிவிட அதை வைத்து எப்படி அவளின் உறவினர்கள், தெரிந்தவர்கள் என பழிவாங்க நினைக்கிறான். அதனை ரேச்சல் எப்படி தடுக்கிறாள் என்பதுதான் கதை.
படத்தில் நியூசிலாந்து நடிகை ரேச்சல் ஹண்டராக சிறப்பாக நடித்துள்ளார். மற்றபடி படத்தில் சொல்ல ஏதுமில்லை.
முடிந்தவரை உணர்ச்சிகளை அனுசரித்து செல்லுங்கள். பிறரது மனதை காயப்படுத்தாதீர்கள் என இயக்குநர் சொல்லுகிறார். முடிந்தால் வண்டியில் செல்பவர்கள் கடைபிடியுங்கள்.
உளவியல் பாடம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக