அனஸ்தீசியா எப்படி பயன்படுகிறது?

 

 

 

Nurse, Bless You, Drugs, Nursing, Professional

 

 

 

பதில் சொல்லுங்க ப்ரோ?


வின்சென்ட் காபோ


அனஸ்தீசியா எப்படி பயன்படுகிறது?


அறுவை சிகிச்சை செய்யப்படும்போது ஒருவருக்கு ஏற்படும் வலியைக் குறைக்க அனஸ்தீசியா பயன்படுகிறது. இதில் லோக்கல், ஜெனரல் என இருவகைகள் உண்டு. இதில் லோக்கல் எனும் சிகிச்சை முறையில் க்ரீம் முறையில் உடல் பாகத்தில் தடவப்படுகிறது, ஊசிமுறையில் மருந்து செலுத்தப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் உணர்வுகள் மழுங்கும். அந்த இடத்தில் கத்தியால் அறுக்கப்படும்போது வலி தெரியாது. மற்றபடி நோயாளிக்கு முழு உணர்வு நிலை இருக்கும்.


ஜெனரல் முறையில் வழங்கப்படும் அனஸ்தீசியா மூளை, முதுகெலும்பை செயலற்றுபோக வைக்கிறது. மூளை முழுக்க முடக்கப்படுகிறதா என்பதில் சந்தேகம் உள்ளது. இதிலும் நரம்பு செல்கள் ஒன்றையொன்றை தொடர்புகொண்டு தகவல் பரிமாற்றம் செய்வதை மருந்து தடை செய்கிறது. இதனால் அறுவை சிகிச்சை செய்பவருக்கு சுயநினைவு இருக்காது.


அனஸ்தீசியா கொடுப்பதன் மூலம் ஒருவருக்கு வலி குறைவது மட்டுமன்றி, தசைகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக மாறும். இந்த மருந்தை ஒருவர் எடுத்துக்கொள்ளும்போது அவருக்கு குமட்டல் உணர்வு ஏற்படும், எனவே அறுவை சிகிசை முடிந்தபிறகு நோயாளிக்கு குமட்டலை தடுக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. அனஸ்தீசியா கொடுத்தபிறகு உடலின் செயல்பாடுகள் மெல்ல வேகம் குறையும். எனவே, அவரின் இதயத்துடிப்பு முழுக்க கண்காணிக்கப்படுகிறது.


கோமா போன்ற நிலை அனஸ்தீசியா கொடுக்கும்போது ஏற்படுகிறது. எனவே நோயாளிக்கு ஆபரேஷன் பற்றிய நினைவுகள் ஏதும் இருக்காது. முழு உடலும் செயலற்ற நிலைக்கு செல்வதால் நோயாளிக்கு வெண்டிலேட்டர் வசதிகளை உருவாக்குகின்றனர்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்