சீனாவுக்கு பயன் கொடுக்கும் மிகப்பெரிய ஒப்பந்தம்!- இந்தியாவுக்கு இடமில்லை

 

 

 

 

India out of RCEP, trade angle… | Explained News,The ...

 

 

 

டீலா? நோ டீலா?


உலகின் பெரிய தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் பதினைந்து ஆசிய நாடுகள் கையெழுத்து போட்டுவிட்டன. இதில் சீனா முக்கியப்பங்கு வகிக்கவிருக்கிறது. இதில் இந்தியா இன்றுவரை இணையவில்லை. போட்டுக்கு அஞ்சுகிறதா, அரசியல் முடிவா என்பது இன்னும் தெளிவாக புரியவில்லை.


இந்த ஒப்பந்தம் மூலம் 210 கோடி மக்கள் வியாபார வளையத்திற்குள் வருவார்கள். உலகில் 30 சதவீத உற்பத்தியை பதினைந்து நாடுகள் ஈடுகட்டுகின்றன என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.


2012ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கூறப்பட்டு இப்போதுதான் நடந்தேறியுள்ளது. பத்து ஆசியன் அமைப்பு நாடுகள் இதில் உள்ளன கூடுதலாக சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இதில் இணைகின்றன.


இந்த ஒப்பந்தப்படி இதில் உள்ள நாடுகளில் எந்த நாட்டிலும் வரி மிகவும் குறைவாக இருக்கும். அல்லது வரியே இருக்காது.


இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் பிற நாடுகளில் அதிக அனுமதிகளைப் பெறாமல் தொழில் தொடங்க முடியும். ஏற்றுமதி செய்யலாம் இறக்குமதியும் கூட செய்யலாம்.


கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா வெளியேறியது. சீனாவின் பொருட்களை உள்ளே அனுமதிப்பது பற்றிய கருத்துவேறுபாடுகள் இதற்கு முக்கியக் காரணம். அதில் உள்ள 15 நாடுகளில் 11 நாடுகளுடன் இந்தியா்வுக்கு வியாபாரத்தில் பற்றாக்குறை உள்ளது.


இந்த ஒப்பந்தம் மூலம் சீனப்பொருட்கள் இந்தியாவுக்கு வருவதோடு, இந்திய நிறுவனங்களும் அங்கு செல்லமுடியும். இந்த ஒப்பந்தம் சீனாவின் ஐடியா என்பதால் இந்தியா இதில் சேருவது கடினம். இந்தியா ஆர்சிஇபி ஒப்பந்தம் பற்றிய விவகாரங்களில் பார்வையாளராக பங்கேற்க அனுமதி உண்டு. இதில் இணைவதற்கான கோரிக்கையை எழுப்பினால் இந்தியா இதில் சேர்த்துக்கொள்ளப்படும்.








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்