மாற்றுத்திறனாளி தன் குறைகளை மறைத்து சாதாரண மனிதராக காதலித்து வாழ முடியுமா? வேர் ஸ்டார்ஸ் லேண்ட்? கொரிய டிவி தொடர் 2008
வேர் ஸ்டார்ஸ் லேண்ட்
sbs tv தொடர்
16 எபிசோடுகள்
October 1 to November 26, 2018
இன்ச்கான் விமானநிலையம். கதை முழுக்க இங்குதான் நடைபெறுகிறது. இங்கு பணிக்கு சேர்ந்து ஒரு ஆண்டாக சென்று வந்துகொண்டிருக்கிறாள் மிஸ் ஹான். வேலை பார்ப்பது சரியில்லை என இவளை மிஸ் யாங் குழுவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அது மிஸ் யாங்கின் சீனியர் ஆபீசர் லீ செய்யும் வேலைதான். அவருக்கு ஹானைப் பார்க்க, தான் பயிற்சி கொடுத்த மிஸ் யாங்கை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது போலவே இருக்கிறது.
ஹானைப் பொறுத்தவரை விமானங்களை நட்சத்திரமாகவே பாவிக்கிற கனவு
ஜீவி. நன்றாக தூங்குவது அடித்து பிடித்து ஆபீஸ் வருவது, அங்குள்ள அலுவலகங்களை பார்த்து மிரள்வது, அனைத்துக்கும் ஸாரி கேட்டு மேனேஜர் காங்கை ரத்த அழுத்தம் வரும்படி அலறவைப்பது என ஏகத்தும் செய்கிறாள். பயணிகளின் சேவைப்பிரிவு ஹானுக்கு புதியது. அங்கு வரும்போது, லீ சூ என்பவரை சந்திக்கிறாள். லீ சூ காசு கொடுத்தால் கூட பேசாத ஆள். அவர் ஹானை முன்னமே சந்தித்த அனுபவம் கொண்டவர்.
ஹானைப் பொறுத்தவரை எப்படியோ வேலையில் நாம் இருக்கவேண்டும் என்பதோடு, நம் வேலையை அனைவரும் புகழ வேண்டும் என பேராசை இருக்கிறது. இதனால் அவசரப்பட்டு அவள் செய்யும் அனைத்தும் பெரிய சிக்கல்களாக மாறுகின்றன. லீ சு சியோன் அதிகம் பேசாவிட்டாலும் அவன் உருவம் அவளை ஈர்க்கிறது. அவள் பணியில் தடுமாறும்போதும், சாதாரணமாக நடக்கும்போது தடுமாறும்போதும் தாங்கி நிறுத்தி மண்டை பத்திரம் மிஸ் ஹான் என்று சொல்லும் டீம்மேட் லீ சு சியோன் தாஈன்.
அவளின் குறும்புகளை மெல்ல ரசிக்க தொடங்கும் லீக்கு அவள் யார், யாருடைய மகள் என்பது முன்னமே தெரியும். அதோடு அவள் மெல்ல அவனை காதலித்து வருகிறாள் என்பதையும் அவன் அடையாளம் காண்கிறான். அவன் வருகைக்கு பிறகு ஹான் அடிக்கடி மன்னிப்பு கேட்கும் பழக்கதை கைவிடுகிறாள். லீ சொல்லும் விஷயங்களை காது கொடுத்து கேட்டு, தனது பணியை சந்தோஷமாக செய்யப்பழகுகிறாள். மேலும், எந்த இடத்திலும் தன்னை தாழ்த்திக்கொள்ளாமல் நேர்மையாக பேச முயற்சி செய் என்று லீ சொல்லும் அறிவுறுத்தலை தன்னிச்சையாக பின்பற்றி முதல்முறையாக மிஸ் யாங்கிடம் பாராட்டு பெறுகிறாள்.
லீ சியோனின் பெரும் பலம் நேர்மை, அமைதி என்றால் ஆபத்தானது அவனின் கோபம். மனநிலை பாதித்தவனிடமிருந்து ஹானை காப்பாற்ற இரும்பு தடுப்பு ஒன்றை கையாலேயே வளைக்கிறார், போலி பாஸ்போர்ட் பெற்று வந்தவன் தப்பிக்க முயற்சித்து கீழே குதிக்க ஒற்றைக்கையால் அவனை தூக்கி பிடித்து காப்பாற்றி மிதிமிதியென மிதித்து துவைக்கிறான். ஏர்போர்டில் பாம் என்று போன் செய்தவனை அடித்து துவைக்கிறான். அவனுக்கு எப்படி கையில் இவ்வளவு பலம்? என்பதுதான் படத்தின முக்கியமான காட்சி.
மாற்றுத்திறனாளிகளின் வலியை சிறப்பாக பதிவு செய்துள்ள படம் இது. ஏர்போட்டில் முழுப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் மனிதர்களின் பிரச்னைகளை, குணங்களை முடிந்தளவு கவனப்படுத்த முயன்றிருக்கிறார்கள். அந்தவகையில் இந்த தொடர் சிறப்பாகவே வந்துள்ளது. செக்யூரிட்டி ஆபீசர் ஆபீசர் ஓடிஜி, அவரின் டீம் மேட் நாஞ்சி என இருவரின் சொல்லாத காதல் இறுக்கமும், குறும்பும், பதற்றமுமாக நகர்கிறது. நாஞ்சியின் காதலை சொல்லாத பிடிவாதமும், காதலனை விட்டுவிடக்கூடாது என்ற பதற்றமும் வெளிப்படும் இடங்கள் நன்றாக உள்ளன. ஒடிஜியின் பெற்றோர் ஹானை பார்த்து அவளின் ராசி, நட்சத்திரம் கேட்கும் இடம், ஒடிஜியின் பள்ளித்தோழி அவரை டேட்டிங் கூப்பிடும்போது அதற்கு நாஞ்சி பதில் சொல்லுகிற இடம் ஆகியவை இதற்கு சான்று.
அரசு விதிகளும் மனிதர்களின் உணர்ச்சிகளும் சந்திக்கும் இடத்தில் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை மிஸ் யாங், ஹான், லீ கதாபாத்திரங்கள் காட்டுகின்றன. இதற்கு எதிர்மறையான பக்கத்தை ஏர்போர்ட் இயக்குநர் குழு காட்டுகிறது.
தனது அண்ணனுக்காக வாழ்க்கையை இழந்த தம்பி, ஒரு பெண்ணின் தந்தையின் ஆதரவைப் பெற்று காதலையும் ஊன்றுகோலாக வைத்து எழுந்து நிற்கும் கதைதான் இது. ஏர்போர்ட்டில் நடைபெறும் கதை என்பது சாதாரண ஒன்றுதான். அதில் மாற்றுத்திறனாளி சில ஆதரவு கருவிகளை வைத்து சாதாரண மனிதராக தன்னை எப்படிக் காட்டிக்கொண்டு பணியாற்றுகிறார், அதிலும் மக்களுடன் இணைந்து செயல்படும் போது வரும் பிரச்னைகள் என்ன என்பதை காட்டுவதில்தான் படமே வேகம் பிடிக்கிறது. படத்தின் முக்கியமான விஷயமாக இயந்திர கையும், காலும் வருகிறது. அதுதான் படத்தை சற்றே ஃபேன்டசி விஷயமாக மாற்றுகிறது. ஆக்சன் காட்சிகளில் அதிரடித்து இருக்கிறார்கள்.
காதல் சார்ந்த உரையாடல்களில் பேசமுடியாமல் உள்மனது வழியாக உரையாடுவது போல வரும் காட்சிகள் அழகாக உள்ளன. முன்பகுதியில் ஹானின் குறும்பும், வெகுளித்தனமும், கோபமும் பலருக்கு பிடிக்கும். மெல்ல அவர் லீயை காதலிக்கத் தொடங்கியபிறகு கேள்விகள் குறைந்து புரிந்துகொள்ளத் தொடங்கி பேசும் வசனங்கள் சிறப்பாக உள்ளன. இறுதியாக லீயை மருத்துவமனைக்கு அனுப்ப அவரது கையை செயலிழக்க வைக்கும் மருந்தை பயன்படுத்தும்போது கண்ணீர் வழிய பேசும் இடம்.
நட்சத்திரங்களின் ஒளியை நீங்கள் இந்த தொடரில் உங்கள் மனதில் உணர்வீர்கள்.
காதலின் ஒளி
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக