கல்வி உதவித்தொகை தாமதம் ஆவதால் வேலைகளுக்கு மாறும் மாணவர்கள்!
கல்வி உதவித்தொகை தாமதம் ஆவதால் வேலைகளுக்கு மாறும் மாணவர்கள்!
அஹ்மத்நகரைச் சேர்ந்த கமலாகர் சேட்டே, எம்.காம் பட்டதாரி. சமூக நலத்துறை மூலம் டாக்டர் அம்பேத்கர் ஸ்வாதர் யோஜனா திட்டத்தின் கீழ் இவருக்கு 51 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உறுதி செய்யப்பட்டது. இவர் ஏற்கெனவே இறுதியாண்டுத் தேர்வை எழுதிவிட்டார். சமூக நலத்துறை எனக்கு வரவேண்டிய கல்வி உதவித்தொகையை கொரோனா காரணமாக இல்லை என்று கூறிவிட்டது. ஆண்டுகள் கடந்தாலும் உதவித்தொகை வரும் என காத்திருந்து சலித்துவிட்டார் கமலாகர். ஆனால் இன்றுவரை உதவித்தொகை கிடைப்பதாக தெரியவில்லை. ஆண்டு வருமானமே 50 ஆயிரம் ரூபாய் வரும் கமலாகரின் பெற்றோர் எப்படி இவரின் கல்விச்செல்வுக்கு பணம் அனுப்ப முடியும்? அரசு கல்வி உதவித்தொகையை தருவதாக சொல்லி கை கழுவியதால் பெற்றோரிடம் காசுக்கு கை ஏ்ந்தி நிற்கும் நிலை.
மத்திய மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை தாமதாவது தொடர்கதையாகிவிட்ட நிகழ்வு. அண்மையில் லேடி ஶ்ரீராம் பெண்கள் கல்லூரி மாணவி ஐஸ்வர்யா ரெட்டி கல்விக்கட்டணத்தை கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட நிக்ழச்சிநாளிதழில் வெளியானது. இவர் இன்ஸ்பையர் என்ற கல்வி உதவித்தொகை திட்டத்தில் தேர்வாகி இருந்தார். ஆனால் ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் தாமதமாக ஐஸ்வர்யாவின் உயிர் போய்விட்டது. இதி்ல் ஐஸ்வர்யாவைப் போலவே பாதிக்கப்பட்ட மாணவர் கூறுகிறார். நான் இன்ஸ்பையர் உதவித்தொகைத் திட்டத்திற்கு தேர்வானேன். வங்கி தகவல்களை அனுப்ப சொன்னார்கள். அனுப்பினேன். ஜாய்ன் அக்கவுண்ட் வேண்டும் என்றார்கள் அதனையும் அனுப்பினேன். ஆனால் இன்றுவரை இமெயில் அனுப்பி வந்தாலும் எந்த பயனும் கிடையாது. அவர்கள் கேள்வி கேட்க நான் பதில் சொல்ல என இந்த செயல்முறை நீண்டுகொண்டே போகிறது.்
கல்லூரி மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை இணைத்து அனுப்புவது மிகவும் கடினமாக உள்ளது என புலம்புகிறார்கள். கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்வாதி மொய்த்ரா துணைப் பேராசிரியாக உள்ளார். இவரும் ஆராய்ச்சி மாணவியாக இருந்தபோது கல்வி உதவித்தொகை பெற தடுமாறியிருக்கிறார். நாம் எப்போது விண்ணப்பித்தாலும் ஆறு மாதங்கள் கழித்துதான் தொகை கைக்கு கிடைக்கும் என்கிறார். இவருக்கு டில்லி பல்கலைக்கழகத்தில் கிடைத்த வேலைக்காக உதவித்தொகையை கூட கைவிட்டுவிட்டார்.
முதலில் உதவித்தொகைக்கான அப்ளிகேஷனை பூர்த்திசெய்து அப்லோடு செய்யவேண்டும். அடுத்து மேற்பார்வையாளர் அதனை தரவிறக்கு கையெழுத்து போட்டு ஸ்கேன் செய்துகொண்டு அப்லோடு செய்வார். பின்னர். நிர்வாகத்தின் கைக்கு விண்ணப்பம் சென்று யுஜிசி தளத்திற்கு செல்லும் என்று கூறுகிறார் முன்னாள் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரான என் சாய் பாலாஜி.
ஆன்லைனில் படிக்கவும் தினசரி 5 ஜிபி டேட்டா தீர்கிறது. அதை வாங்குவதற்கும் பணம் வேண்டுமே? எனவே உதவித்தொகை கிடைக்காத மாணவர்கள் ஹாஸ்டல் கட்டணத்தை கட்டமுடியாமல் வேலை செய்யும் ஓட்டல்களில் வெளியில் படுத்து தூங்கி வருகின்றனர். பல மாணவர்கள் ஓட்டல்களில் சர்வர்களாக பணிபுரியத்தொடங்கி்விட்டனர். லாலன் குமார் மூத்த ஆராய்ச்சி மாணவராக சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருக்கு 35 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வரவேண்டியுள்ளது. ஆனால் பணம் ஐந்து மாதங்களாக கிடைக்கவில்லை. ஆனால் வேலையை ஏராளமாக கொடுத்து செய்ய வைத்திருக்கிறார்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக